காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து! ஒருவர் பலி …..
காஞ்சிபுரம் அருகே இரு சக்கர வாகனம் மீது தனியார் நிறுவன பேருந்து மோதியதில் பாஜக உறுப்பினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் அருகே கீழ்அம்பி – சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கீழ்அம்பி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பாரதிய ஜனதா கட்சியின் காஞ்சிபுரம் ஒன்றிய செயலாளரும் மாற்று திறனாளியுமான ஸ்ரீதர் மீது தனியார் நிறுவன பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலுசெட்டிசத்திரம் காவல் ஆய்வாளர் பிரபாகர் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
source: dinasuvadu.com