உணவு தேடிவந்தபோது, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே விவசாயக் கிணற்றில் விழுந்த 3 காட்டு யானைகள் பத்திரமாக மீட்கப்பட்டு, வனத்திற்குள் விடப்பட்டன. சத்தியமங்கலம் அருகே கடம்பூர் வனப்பகுதியில் இருந்து வந்த 3 காட்டு யானைகள் கானக்குந்தூர் கிராமப் பகுதிக்குள் நுழைந்தன. விளைநிலங்கள் வழியாக வந்த யானைகள், மருதவேல் என்பவரின் 15 அடி ஆழ விவசாயக் கிணற்றில் தவறி விழுந்தன. கிணற்றின் சருக்கலான பகுதி வழியாக கிணற்றுக்குள் விழுந்ததால், யானைகளுக்கு காயம் ஏதும் ஏற்படாத நிலையில், அங்கிருந்து வெளியேறத் தெரியாமல், […]
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் குழந்தைகளிடம் பேசிக்கொண்டிருந்த 2 வடமாநில இளைஞர்களை சந்தேகத்தின் அடிப்படையில் பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சத்தியமங்கலத்தை அடுத்த மேட்டூருக்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளிடம் பேச்சு கொடுத்தனர். இதைக்கண்ட கிராமமக்களுக்கு அவர்கள் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகமடைந்து இருவரையும் பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்ற போலீசார் இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இருவரும் உத்தரபிரதேச மாநிலத்தைச் […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராக பணிபுரிந்த ஸ்ரீஜா என்ற பெண் தனது 2 குழந்தைகளுக்கும் விஷ ஊசி செலுத்தி கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டார் குடும்பப்பிரச்னை காரணமாக கொலை மற்றும் தற்கொலை நடந்ததா…?? என்ற கோணத்தில் ஈரோடு மாவட்ட போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
நான்காவது கட்டத்தில் நான்காவது ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை செயல்படுத்த நாடு முழுவதும் ஒன்பது நகரங்களில் ஈரோடும் தேர்ச்சி பெற்றுள்ளது. விரைவில் ஈரோட்டில் பெரம்பள்ளம் கால்வாய் புதுப்பித்தல் மற்றும் அருகிலுள்ள பகுதிகளை மறுசீரமைத்தல் ஆகியவை நடைபெறும். இதற்கான செலவு சுமார் ரூ.1500 கோடி ஆகும். குறிப்பிட்ட தொகையில் பகுதி மேம்பாட்டு திட்டம் மற்றும் பான் நகர திட்டம் செயல்படவுள்ளது.மொத்த நிதிகளில் 65% மத்திய மற்றும் மாநில அரசுகளிடமிருந்து கிடைக்கும், 28% திட்டங்களை ஒருங்கிணைப்பதன் மூலம்6% பொது தனியார் கூட்டாண்மை மூலம் மற்றும் 1% உள்ளூர் உடலில் இருந்து கிடைக்கும் […]
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் “மலைப்பகுதிகளில் போக்குவரத்து வசதியின்மையால் ஏற்படும் ஆற்றல் இழப்பு” என்கிற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்பித்து, “இளம் விஞ்ஞானி” விருது வென்றிருக்கும் ஈரோட்டைச் சேர்ந்த மாணவர் சின்னகண்ணனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என அம்மாணவனை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் திமுக செயல்தலைவரும்,எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின். தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் “மலைப்பகுதிகளில் போக்குவரத்து வசதியின்மையால் ஏற்படும் ஆற்றல் இழப்பு” என்கிற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்பித்து, “இளம் விஞ்ஞானி” விருது வென்றிருக்கும் ஈரோட்டைச் […]
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வழங்கப்பட உள்ள கரும்புகளை கொள்முதல் செய்வதில் அதிகாரிகள் பாரபட்சத்துடன் நடந்து கொள்வதாக ஈரோடு மாவட்ட கரும்பு விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரம் உள்ள விளை நிலங்களில் சுமார் 300 ஏக்கரில் செங்கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இங்கு சாகுபடி செய்யப்படும் கரும்புகள் தரமாகவும், தித்திப்பாகவும் இருக்கும் என்பதால் வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. 400 கரும்புகள் கொண்ட வண்டிக் கரும்பை, வியாபாரிகள் 7 ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை […]
ஈரோட்டில், இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை தடுக்க சென்றபோது, காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்கியதாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் கோவிந்தன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, முரளி மற்றும் வாசுதேவன் ஆகிய இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை தடுக்க சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் கோவிந்தனை, முரளி தரப்பினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், […]
தமிழகம் முழுவதும் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ–ஜியோ–கிராப் கூட்டமைப்பு அறிவித்து இருந்தது. அதன்படி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நேற்று போராட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் ஈரோடு மாவட்ட கிளை சார்பில் ஈரோடு காளைமாட்டு சிலை அருகில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் சோமசுந்தரம், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் நேரு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் மாநில […]