ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் அருகே புதுகரடு பகுதியை சேர்ந்தவர் தேவி.இவர் கரும்பு வெட்டும் தொழில் செய்து வருகிறார்.இவரது கணவர் சுரேஷ்.கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணாமாக சமீபகாலமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றன. இவர்களுக்கு ஒரு மக்கள் ஒரு மகன் உள்ளனர்.இந்நிலையில் ஜூலை 19-ம் தேதி வெகுநேரம் ஆகியும் தேவியின் வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது .இதன் காரணமாக சந்தேகத்தின் பேரில் அக்கம்பக்கத்தினர் தேவி வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்துள்ளனர். அப்போது தேவி ரத்தவெள்ளத்தில் கிடந்ததை […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி என்ற பகுதியில் பேரூராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய பள்ளி செயல்பட்டு வருகிறது.அந்த பள்ளியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றன. இந்நிலையில் அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் இருவர் மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுப்பதற்கு பதிலாக மதம் மாற்றம் செய்ய முயன்றுரதாக கூறப்படுகிறது.மேலும் தமிழக அரசு கல்விக்கான புத்தகங்களை இலவசமாக வழங்கும் போது இவர்கள் மதம் சார்ந்த புத்தகங்களை விலைக்கு வாங்குமாறு வற்புறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த […]
சிறுவன் முகம்மது யாசின் ஈரோட்டை சேர்ந்தவர். இவர் அரசுப்பள்ளி ஒன்றில் 3-ம் வகுப்பு பயின்று வருகிறார். இச்சிறுவன் கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக பள்ளி இடைவேளையில், வெளியில் வந்த போது, அவரது கண்களில் ஒரு சிறிய பை தென்பட்டது. இதனை எடுத்து பார்த்த சிறுவன், அதற்குள் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை கண்டுள்ளார். இதனையடுத்து, அப்பணத்தை அவர் தன்னுடைய ஆசிரியரிடத்தில் கொடுத்துள்ளார். அவர் அப்பணத்தை அச்சிறுவனுடன் சென்று, மாவட்ட கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளார். சிறுவனின் இச்செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வந்த நிலையில், […]
ஈரோடு மாவட்டம் நாடார்மேடு எனும் பகுதியில், உள்ள மதுக்கடையில் மஞ்சுநாதன் செந்நிதில் குமார் ஆகியோர் மது அருந்தி வந்துள்ளனர். அப்போது மஞ்சுநாதத்திற்கும், செந்தில்குமாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த செந்தில்குமார் மஞ்சுநாதனை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். அடுத்து மஞ்சுநாதனை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்க அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அருகில் ள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். DINASUVADU
தமிழகத்தில் தேர்தல் களம் பரபரப்பாகவே இருக்கிறது. நேற்று கோயம்புத்தூரில் இருந்து, பயன்படுத்தப்படாத வாக்கு பெட்டிகள் தேனிக்கு மாற்றப்பட்டன. இந்த மாற்றம் வழக்கமான ஒன்றுதான். ஒரு வேளை மறு வாக்குப்பதிவு நடைபெற்றால் தேவைபடும் என்பதால், இந்த மற்றம் என தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். இதனால், எதிர்க்கட்சியினர் பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். நேர்மையாக தேர்தல் நடத்த தேர்தல் அதிகாரிகள் தடுமாறுகின்றனர் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டில் […]
மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து மக்களும் தங்களது வாக்குகளை உற்சாகமாக பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு சிவகிரியில் வாக்களித்து விட்டு வந்த முதியவர் முருகேசன் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். மேலும், சேலம் வேடப்பட்டி வாக்குசாவடியில் வாக்களித்துவிட்டு வந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இவர்களது, உயிரிழப்பு அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோட்டில் விவசாய விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வாக்காளர் அடையாள அட்டையை ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் போட்டுள்ளனர். மக்களவை தேர்தல் நெருங்கி வருகிற நிலையில், தேர்தல் ஆணையம் பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கட்சி தலைவர்கள் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கையில் மக்களுக்கான பல நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் அறிக்கை […]
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 5 லட்சத்து 25 ஆயிரத்துக்கு வாழைதார்கள் விற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தேன்வாழை, மொந்தன், கதளி, பூவாழை உள்ளிட்ட பல்வேறு வாழை ரகங்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்து வருகின்றனர். சாகுபடி செய்த வாழைகளை கோபி வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம் ஏலம் விடப்படுகிறது. வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் போட்டி போட்டுக் கொண்டு வாழைத்தார்கள் விலைக்கு வாங்கப்பட்டன. வாழைத்தார் […]
ஈரோடு அருகே வெல்லம் விற்பனை மையத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகரிகள் நடத்திய சோதனையில் ரசாயனம் கலக்கப்பட்ட 2 ஆயிரத்து 300 கிலோ வெல்லம், அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோட்டை அடுத்துள்ள சித்தோடு பகுதியில் செயல்பட்டு வரும் வெல்லம் விற்பனை மையத்தில், தமிழக வியபாரிகள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் வெல்லம் கொள்முதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி மற்றும் அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் ரசாயனம் […]
நெற்பயிர்களை பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாப்பது எப்படி என்றும் , இயற்கை வேளாண்மை குறித்தும் விவசாயிகளுக்கு வேளாண்மை அதிகாரிகள் பயிற்சி அளித்தனர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தையடுத்து கீழ்பவானி வாய்கால் பாசன பகுதியில், விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெல்சாகுபடியில் செய்து வருகின்றனர். தற்போது குளிர்காலம் என்பதால் நெற்பயிர்களை பூச்சி தாக்கும் .இநிலையில் பூச்சி தாக்குதலில் இருந்து நெற்பயிர்களை எப்படி பாதுகாப்பது குறித்து, விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சியில் கடுக்காம்பாளையம், கோரக்காட்டுர், கொளத்துப்பாளையம் உள்ளிட்ட 10க்கும் அதிகமான கிராமங்க விவசாயிகள் கலந்து […]
பவானிசாகர் அணையில் இருந்து மேலும் 15 நாட்களுக்கு கூடுதலாக நீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின் மூலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கருர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் 1 ம் தேதி கீழ்பவானி வாய்க்கால் ஒற்றைப்படை மதகுகள் வழியாக விநாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் கடைமடைப்பகுதியில் நெற்பயிர்கள் களையெடுக்கும் பருவத்தில் […]
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில், கட்டலாம், லோகு, மிருகால் ஆகிய ரக மீன் குஞ்சுகள் மிதவை கூண்டு மூலம் வளர்க்கப்பட்டன. தற்போது 3 மாதங்களான நிலையில், மீன்வளத்துறை மீன்பிடிக்க அனுமதி அளித்தது. இந்நிலையில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜாகிருஷ்ணன், மீன்பிடிப்பு பணியை துவக்கி வைத்தார். இதனைதொடர்ந்து, அந்தியூர் மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உள்ள 8 குழுக்களின் மூலம், மீன் பிடித்து விற்பனை செய்யப்படும்.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டில் 2ஆவது முறையாக 100 அடியை எட்டியுள்ளது.கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது. பவானிசாகர் அணை ஈரோடு மிக மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்குகின்றது. இந்த அணையினால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 2 இலட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்று வருகின்றன. அணையின் நீர்மட்டம் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நிலையில் குறையத் தொடங்கியது. இந்நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக […]
ஏற்காட்டில் காதலனை தாக்கி அவரது காதலியை கடத்தி பாலியல் பாலத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர். ஈரோட்டை சேர்ந்த வாசுதேவன் என்பவர் தனது காதலியுடன் ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால், காதலி விடுதியில் இருந்து வெளியேறி உள்ளார்.அவரை தேடி வாசுதேவனும் வந்துள்ளார். இவர்களை பின்தொடர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விஜியக்குமார் மற்றும் கார் ஓட்டுநர் ஆரோக்கியதாஸ் ஆகியோர் வாசுதேவனை தாக்கி அவரிடம் இருந்து பணத்தை பறித்துள்ளனர்.பின்னர் வாசுதேவனின் காதலியை சேலத்தில் இறக்கி விடுவதாக […]
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து கோபிச்செட்டிப்பாளையம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2000-ஆம் ஆண்டு ஜுலை 30 ஆம் தேதி அன்று கன்னட நடிகர் ராஜ்குமார் ஈரோடு அருகே தாளவாடி தொட்டகஜனூரில் உள்ள தனது பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அப்போது, வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளால் கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டு பின்னர் சில நாட்கள் கழித்து விடுவிக்கப்பட்டார். வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், மல்லு, மாறன், கோவிந்தராஜ் என்கிற இனியன், அன்றில் என்கிற […]
ஈரோட்டில் உள்ள பவானிசாகர் வனச்சரகத்திற்குட்பட்ட மோயாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் போக்குவரத்து நிறுத்தபட்டுள்ளது.சுஜில்குட்டை வழித்தடத்தில் மோயாற்றை கடக்க வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மோயாற்று கரை பகுதிகளில் ரோந்து மேற்கொள்ள வனத்துறைக்கு மாவட்ட வன அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளனர். DINASUVADU
தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து, பாசனத்திற்காக 1.8.2018 முதல் 28.11.2018 முடிய 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஈரோடு அருகே நீர்த்தேக்கத்தில் தண்ணீர் நிரம்பி வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் உள்ள கொடுமுடி நீர்த்தேக்கத்தில் தண்ணீர் நிரம்பி வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு வெள்ள முன்னறிவிப்பு தொடர்பாக மத்திய நீர் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஈரோட்டில் பாசனத்திற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தண்ணீரை திறந்து வைத்தார். அமைச்சர் செங்கோட்டையன், ஈரோட்டில் உள்ள பவானிசாகர் அணையிலிருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால் ஆகியவற்றின் கீழ் பாசனம் பெறும் நிலங்களுக்கு, முதல் போக பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார் மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.