ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து,பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் உள்ளிட்ட 4 பேர் ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதனைத் தொடர்ந்து,சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கில்,சேலம், ஓசூர் மருத்துவமனைகளுக்கு ஈரோடு காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது. மேலும்,ஒவ்வொரு மருத்துவமனையிலும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில்,சிறுமியின் வாக்குமூலத்தையடுத்து ஆந்திரா,கேரளா மருத்துவமனைகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்பின்னர், கருமுட்டை விற்பனை வழக்கில் விசாரணை விரைந்து நடைபெற்று வருகிறது என்றும் விசாரணை முடிந்து அறிக்கை […]
கருமுட்டை விற்பனை தொடர்பாக சேலம், ஓசூர் மருத்துவமனைகளுக்கு ஈரோடு போலீஸ் சம்மன். ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கில், சேலம், ஓசூர் மருத்துவமனைகளுக்கு ஈரோடு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஆவணங்களுடன் நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க இரு தனியார் மருத்துவமனைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. கருமுட்டை விற்பனை தொடர்பாக சிறுமியின் தாய் உள்ளிட்ட பேர் ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு, பெருந்துறை, சேலம், திருப்பதி, திருவனந்தபுரம் […]
சிறுமியின் கருமுட்டையை விற்பனை தொடர்பாக தனியார் மருத்துவமனை ஊழியர்களிடம் காவல்துறை விசாரணை. ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்தது தொடர்பாக 2 மருத்துவமனை ஊழியர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஈரோடு மற்றும் பெருந்துறையில் உள்ள 2 தனியார் மருத்துவமனைகளுக்கு ஏற்கனவே காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், மருத்துவமனை ஊழியர்களிடம் ஏடிஎஸ்பி கனகேஸ்வரி விசாரணை நடத்தி வருகிறார். இவர்களிடம் 16 வயது சிறுமியிடம் 4 ஆண்டுகளாக கருமுட்டை […]
சிறுமியின் கருமுட்டை விற்பனை விஞ்ஞான ரீதியிலான மாபெரும் கொள்ளை என மருத்துவத்துறை அமைச்சர் பேட்டி. ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் பணத்திற்கு ஆசைப்பட்டு, சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட கவால்துறையினர் சிறுமியின் தாயார் இந்திராணி மற்றும் அவரது இரண்டாவது கணவர் சையத் அலியை கைது செய்தனர். கருமுட்டை விற்பனைக்கு இடைத்தரகராக செயல்பட்ட டைலர் மாலதி என்பவரையும் […]
ஈரோடு மாவட்ட ஆட்சியர் பெயரில் சிலர் நூதன மோசடி ஈடுபட்டதையடுத்து, இந்த மோசடி தொடர்பாக விசாரிக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு ஈரோடு ஆட்சியர் உத்தரவு. இன்று மோசடியில் பலர் பல வழிகளில் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். மோசடியில் ஈடுபடுபவர்கள் பல்வேறு நூதனமான வழிகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் பெயரில் சிலர் நூதன மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். வாட்சப்பில் ஈரோடு ஆட்சியரின் புகைப்படத்தை வைத்து, அதிகாரிகளின் வாட்சப் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர். […]
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக இலகுரக வாகனங்கள் இரவில் செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இரவுநேர வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். இதுதொடர்பாக வழக்கு நீதிமன்றத்திலும் நடைபெற்றது. இந்த நிலையில், சத்தியமங்கலம் வனப்பகுதி சாலையில் இலகுரக வாகனங்கள் இரவிலும் செல்லலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்து, அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, கோவை – பெங்களூரு சாலையில் […]
கரூர் மாவட்டம் மாயனூர் அருகே வசித்து வரும் ராஜபாண்டியன் எனபவர் தனது கடனை அடைக்க யுடியூப் பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதையடுத்து, போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யூடியூப் சேனலை பல்வேறு தேவைகளுக்காக பல வீடியோக்களை பார்ப்பதுண்டு. அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ராஜபாண்டியன் என்பவர் தனக்கு கடன் அதிகமானதால் யுடியூப் பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கடைவீதியில் உள்ள நகை கடையின் பக்கவாட்டுச் […]
ஈரோடு அருகே நடுவானில் பறந்தபோது வானிலை காரணமாக மலைக் கிராமத்தில் அவசர அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர். பெங்களூரில் இருந்து கேரளாவிற்கு மருத்துவ சிகிச்சைக்காக ஒரு தம்பதி பயணம் செய்த தனியார் ஹெலிகாப்டர், மோசமான வானிலை காரணமாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதியில் தனியார் விவசாய நிலத்தில் அவசர அவசரமாக திடீரென தரையிறக்கப்பட்டது. ஈரோடு அருகே நடுவானில் பறந்தபோது ஏற்பட்ட மோசமான வானிலையால் கடம்பூர் மலைப் பகுதியில் அவசரமாக திடீரென தரையிறக்கப்பட்டது. இதனைதொடர்த்து ஹெலிகாப்டரில் பயணம் […]
ஈரோட்டில் வீட்டுமனை தருவதாகக் கூறி ரூ.2 கோடி மோசடி செய்த வழக்கில் அதிமுக நிர்வாகி கைது. ஈரோட்டில் காய்கறி வியாபாரிகளுக்கு வீட்டுமனை தருவதாகக் கூறி ரூ.2 கோடி மோசடி செய்த வழக்கில் அதிமுக நிர்வாகி வைரவேல் என்பவர் கைது செய்யப்பட்டார். ஈரோடு நேதாஜி காய்கறி சந்தை வியாபாரிகள் சங்க பொருளாளராக வைரவேல், அதிமுக வார்டு செயலாளராகவும் உள்ளார். வீட்டுமனை வாங்கி தருவதாக கடந்த 2015ல் ரூ.2 கோடி பணம் வாங்கியதாக தகவல் கூறப்படுகிறது. அதிமுக நிர்வாகிகள் உள்பட […]
ஈரோட்டியில் கெமிக்கல் ஆலையில் வாயு கசிந்ததால் மூச்சுதிணறல் ஏற்பட்டு 13 பேர் பாதிக்கப்பட்டனர். ஈரோடு அருகே சித்தோடு பகுதியில் இயங்கிவரும் தனியார் கெமிக்கல் ஆலையில் வாயு கசிந்ததால் மூச்சுதிணறல் ஏற்பட்டு 13 பேர் பாதிக்கப்பட்டனர். ஆலையில் கசிந்த வாயுவை சுவாசித்த நடுப்பாளையத்தை சார்ந்த தாமோதரன் என்பவர் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்தார். மேலும், மூச்சுத்திணறல் ஏற்பட்டு 13 பேர் சிகிக்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாயு கசிந்த ஆலையை ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி நேரில் […]
சிசிடிவி, ஜிபிஆர்எஸ் இருந்தால் தான் பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்று கொடுக்கப்படும் என ஈரோடு கோபி செட்டிபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் முனுசாமி தெரிவித்துள்ளார். பள்ளி வாகனங்களில் செல்லக் கூடிய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சிசிடிவி கேமராக்கள், ஜிபிஆர்எஸ் கருவிகள் பொருத்தப்பட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது குறித்து கூறியுள்ள ஈரோடு கோபி செட்டிபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் முனுசாமி அவர்கள் சிசிடிவி, ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தால் தான் பள்ளி […]
கொரோனாவால் கணவர் உயிரிழந்ததால் தனது இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பதாக சென்னை பல்பொருள் அங்காடி மேலாளராக பணியாற்றிய பாஸ்கர் என்பவருடன் நித்தியா எனும் பெண்மணிக்கு திருமணமாகிய நிலையில், இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகனும், 6 வயதில் மக்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 2-ஆம் தேதி பாஸ்கருக்கு திடீரென பாதிப்பு ஏற்பட்டதால், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், பாஸ்கர் சிகிச்சைப் […]
முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.5 கோடியை சக்தி மசாலா நிறுவனம் வழங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது விஸ்வரூபம் எடுத்து வருகிறது.இதன்காரணமாக,கொரோனா பேரிடரை தமிழகம் எதிர்கொள்ளவதற்கு தங்களால் முடிந்த தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து,முதல்வரின் கோரிக்கையை ஏற்று ஏழை மக்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த நிதியுதவி அளித்து வருகிறார்கள். இந்நிலையில்,கொரோனா தடுப்பு பணிகளுக்காக சக்தி மசாலா நிறுவனம் முதல்வரின் […]
பொது தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவது குறித்து கல்வித்துறை ஆய்வு செய்து முடிவு எடுக்க உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று ஈரோடு மாவட்டத்திலுள்ள நம்பியூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், பொது தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவது குறித்த முடிவை ஆய்வு செய்து கல்வித்துறை முடிவு எடுக்க உள்ளதாகவும், முதல் அமைச்சரின் ஒப்புதல் பெற்ற பின் அட்டவணை வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அரசு பள்ளியில் […]
பள்ளிகள் திறப்பது தாமதமானால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தொடர்ந்து சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவித்த நிலையில் நவம்பர் 16-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்றும், அதிலும் 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே கருத்து கேட்பு கூட்டம் நடத்த உள்ளதாக பள்ளி […]
போதையில் தாய் இறந்துவிட்டதாக உறவினர்களுக்கு அழைப்பு கொடுத்து மாட்டிக்கொண்ட கொலைகார மகனை போலீசார் தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் பாரியூரில் உள்ள நஞ்சாகவுண்டபாளையத்தில் கணவரை இழந்து தனது மகன் கருப்பசாமி உடன் வாழ்ந்து வருபவர் தான் மாகாளி. ஏற்கனவே கணவன் இன்றி வறுமையில் அவதிப்படும் இந்த தாயாரின் மகன் கருப்பசாமி மிகவும் குடித்துவிட்டு அவரது தாயை கொடுமை செய்து வந்துள்ளார். வழக்கமான அவரது மகனின் கொடுமை தங்க முடியாத மாகாளி அவரது சித்தி வீட்டிற்கு சென்று விவாசாய […]
சதுரங்க போட்டியில் முதலிடம் பிடித்த தமிழகத்தைச் சேர்ந்த இனியன் பன்னீர்செல்வத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் திமுக எம்.பி கனிமொழி. தனது 5 வயது முதல் சதுரங்க விளையாட்டை விளையாடியவர் தான் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இனியன். தற்பொழுது 17 வயதுடைய இவர், அமெரிக்காவில் நடைபெற்ற அமெரிக்க வேர்ல்ட் ஓப்பன் சதுரங்க போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்துள்ளார். இதற்க்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக எம்.பி கனிமொழி அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். […]
அரியர் மாணவர்களின் அரசனே என முதல்வரை புகழ்ந்து ஈரோட்டில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள், போக்குவரத்து, சுற்றுலா தலங்கள் என அனைத்து துறைகளும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் தற்போது தான் அரசு சில தளர்வுகளுடன் மக்களை வெளியே செல்ல அனுமதித்து வருகிறது. இந்நிலையில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பாடங்கள் படித்து வருகின்றனர். அதிலும் […]
பள்ளி குழந்தைகளின் சிரமத்தை கண்டு 30 லட்சம் மதிப்பில் நவீன கழிப்பறை. திரு.சதீஷ் குமார் என்பவர், ஈரோடு மாவட்டம் சித்தோடு என்ற சிறிய கிராமத்தில் பிறந்த வளர்ந்தவர். இவர் தனது பள்ளி படிப்பை முடித்த நிலையில், தனது கடின உழைப்பால் பன்னீர் வணிகத்தில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்தார். அதுமட்டுமில்லாமல், பால் வணிகத்தில் ஈடுபட்டு மில்கி மிஸ்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தையும் உருவாக்கினார். இந்நிலையில், அவர் பிறந்த கிராமமான, சித்தோடு தொடக்கப் பள்ளியின் கழிப்பறையின் மிக மோசமான […]
தமிழகத்தில் தற்போது கடும் வெயில் நிலவி வரும் நிலையில் 4 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்துள்ளது. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை, தோகைமலை, கடவூர் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மேலும் ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 4 மணி நேரத்திற்கு மேலாக தொடர் கனமழை பெய்து வருகிறது. சூறைக்காற்றுடன் பெய்த இந்த கன மழையால் அங்கு பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.மேலும் கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி அடைந்துள்ளதாகவும்,மழையின் வரவால் விவசாயிகள் மகிழ்ச்சி […]