ஈரோடு மாவட்டத்தில் கரும்புகளை கொள்முதல் செய்வதில பாரபட்சம்!கரும்பு விவசாயிகள் வேதனை…….
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வழங்கப்பட உள்ள கரும்புகளை கொள்முதல் செய்வதில் அதிகாரிகள் பாரபட்சத்துடன் நடந்து கொள்வதாக ஈரோடு மாவட்ட கரும்பு விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரம் உள்ள விளை நிலங்களில் சுமார் 300 ஏக்கரில் செங்கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இங்கு சாகுபடி செய்யப்படும் கரும்புகள் தரமாகவும், தித்திப்பாகவும் இருக்கும் என்பதால் வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. 400 கரும்புகள் கொண்ட வண்டிக் கரும்பை, வியாபாரிகள் 7 ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை செலுத்தி கொள்முதல் செய்வதாக கூறும் விவசாயிகள், ஆனால் பொங்கல் பரிசு பொருட்களுடன் வழங்குவதற்காக கரும்புகளை கொள்முதல் செய்ய வரும் அதிகாரிகள், 400 கரும்புகளை 6 ஆயிரம் ரூபாய்க்கு கேட்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் கரும்பு 6 அடி நீளத்துக்கு ஒரே சீராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் முன் வைக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகள் குறைந்த விலைக்கு கேட்பதால் வியாபாரிகளும் குறைந்த விலைக்கே தற்போது கரும்புகளை கேட்பதாக தெரிவித்துள்ள விவசாயிகள், பெரும் விவசாயிகள் பக்கம் மட்டுமே அதிகாரிகள் பார்வை இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
source: dinasuvadu.com