திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் 31ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவானது அரசு சார்பாக சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவின்போது சுமார் 25,500 பயனாளிகளுக்கு 24 அரசு துறை மூலம் 640 கோடி நலத்திட உதவிகள் வழங்கப்படவுள்ளது என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
வத்தலகுண்டு அருகே திண்டுக்கல் சாலையில் அரசு பேருந்து, கார் மற்றும் ஷேர் ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டது. ஆட்டோவில் வந்த பள்ளி மாணவர்கள் 9 காயம் அடைந்துள்ளனர்.மேலும் தருண், காளிதாஸ் ஆகிய 2 பேர் இந்த விபத்தினால் உயிரிழந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்தழகுப்பட்டியில் அந்தோணியார் ஆலயத்தில் மர்ம நபர்கள் சிலை உடைத்துள்ளனர்.இதனால் அந்த பகுதியில் வாழும் பொதுமக்கள் இடையே ஏற்பட்ட பரபரப்பால் தற்போது போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்திற்கு யார் காரணம் என்பதை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் நாகல்நகர் செளராஷ்டிரா மக்கள் கைத்தறிநெசவு தொழிலில் கூலி குறைவாக தருவதை கண்டித்து நாகல்நகர் வரதராஜபெருமாள் கோவில் முன்பு தொழிலாளர்கள் குடும்பத்துடன் 1000க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
திண்டுக்கல் : பொருந்தலாறு அணையிலிருந்து பாசனத்திற்காக டிச. 22 முதல் ஏப். 10 வரையிலும், பரப்பலாறு அணையிலிருந்து வரும் 22 முதல் ஜன. 5 வரை தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு. அரியலூர் : சித்தமல்லி நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக வரும் 28ம் தேதி முதல் 349 மி.கனஅடி தண்ணீர் திறந்துவிட உத்தரவு – முதலமைச்சர். source: dinasuvadu.com
கொடைக்கானல் அருகேயுள்ள செம்பரான்குளம் பகுதியில் தனியார் தோட்டத்தில் காட்டெருமைகளின் உடல்கள் புதைக்கப்பட்டு இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவின்பேரில், உதவி வனபாதுகாவலர் பாலகிருஷ்ணன், வனச்சரகர் கருப்பையா, தாசில்தார் பாஸ்யம் ஆகியோர் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அந்த தோட்டத்தில் சந்தேகப்படும்படியான இடங்களை வனஊழியர்கள் தோண்டினர். அங்கு 3 காட்டெருமைகளின் உடல்கள் புதைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவற்றின் உடல்கள் எலும்பு கூடாக மாறி இருந்தது. இதைத் […]
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வே.புதுக்கோட்டையில் மர்மக் காய்ச்சலுக்கு பிரியதர்ஷினி என்ற 11 வயது குழந்தை உயிரிழப்பு.
இன்று பட்ட பகலில் திண்டுக்கல் நகர பகுதியில் துப்பரவு செய்யும் திண்டுக்கல் மாவட்டம் நெட்டுதெருவை சேர்ந்த பாலமுருகன்,சரவணன்,வீரா ஆகியோர் வெவ்வேறு இடங்களில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலிசார் சடலங்களை எடுத்து போக்குவரத்தை சீர் செய்தனர் . கொலையின் காரணம் என்ன என்றும் கொலை செய்தவர்கள் யார் என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் குஜிலியம்பாறை வழியாக கரூர் செல்லும் வழியில் கோவிலூர் சாலை மழைநீரால் குண்டும் குழியுமாக உள்ளது. அதில் மழைநீர் தேங்கி சாலையில் வாகனங்கள் செல்ல மிகவும் சிரமபடுகின்றனர். அந்த பகுதி வார்டு கவுன்சிலர் முதல் பாராளுமன்ற உறுப்பினர் வரை அனைத்து அரசு அதிகாரிகளும் இந்த சாலை வழியாகவே பயணிக்கின்றனர். இருப்பினும் இந்த சாலையை சீரமைக்க இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை. சொகுசு கார்களில் வருவதாலோ என்னவோ இந்த பிரச்சனை அவர்களுக்கு புரியவில்லை என தெரிகிறது. எப்போது இந்த பகுதி […]