திண்டுக்கல் அருகே பேருந்துவசதி செய்து தரக்கோரி பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். திண்டுக்கல் அருகே உள்ள கொலைக்காரன்பட்டி கிராமத்தில் போதிய பேருந்து வசதி இல்லாததால் முறையாக பேருந்துவசதி செய்து தரக்கோரி பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
குமரேசன் என்பவர் திண்டுக்கல் அருகே உள்ள குடைபாறைப்பட்டியைச் சேர்ந்தவர். இவர் ஆட்டு இறைச்சி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மணிஷா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு லக்சையா என்ற ஒரு வயது குழந்தை உள்ளது. இவர் மீது கொலை, கொள்ளை என பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இன்று குமரேசன் திண்டுக்கல் தெற்கு காவல்நிலையம் அருகே உள்ள ஆர்.வி.நகர் 3 வது தெருவில் நடந்து […]
திண்டுக்கல்- தாடிக்கொம்பு ரோட்டில் செரோஜ்ராம் (வயது35) என்பவர் பைப் கடை வைத்துள்ளார். இவர் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில், நான் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது நாம் தமிழர் கட்சி திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் சரவணன் (41), சீலப்பாடி ஊராட்சி பொருளாளர் மணிகண்டன், ஊராட்சி செயலாளர் சூரியபிரகாஷ் ஆகியோர் தங்கள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடத்துவதாகவும் அதற்கு நிதி தருமாறும் கூறினர். தற்போது பணம் இல்லை என கூறியதற்கு மாதம் மாதம் எங்களுக்கு […]
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் எல்ஐசி கிளை அலுவலகம் வத்தலக்குண்டு திண்டுக்கல் சாலையில் இயங்கி வந்தது அந்தக் கட்டிடத்தில் போதிய இட வசதி இல்லாதால் நவீன மயமாக்கப்பட்ட கட்டிடம் வத்தலக்குண்டு பெரியகுளம் சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகாரிகளால் துவக்கி வைக்கப் பட்டது அந்த கட்டிடத்தில் பல பராமரிப்பு பணிகள் நிறைவடையாத நிலையில் அனைத்து பணிகளும் முடிவடைந்து திங்கள் முதல் புதிய கட்டிடத்தில் பணிகள் துவங்கப் பட்டன.; முகவர் தண்டபாணிக்கு காசாளர்பிரிமியத ;தவணைக்கான முதல் ரசீதை வழங்கினார் […]
வாடிப்பட்டியில் நான்கு தலைமுறைகளை கடந்த மூதாட்டியின் 104வது பிறந்தநாய்விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. வாடிப்பட்டி நீரேத்தான் கிராமத்தை சேர்ந்தவர் ராஜூப்பிள்ளை, திராவிடர் கழகத்தின் மூத்த முன்னோடியான இவரது மனைவி மீனாட்சியம்மாள். ராஜூப்பிள்ளை கடந்த சில ஆண்டுகள் முன் இறந்து விட்ட நிலையில் அவரது மனைவி மீனாட்சியம்மாள் நான்கு தலைமுறைகளை கடந்து 104 வயதாகியும் தனது மகன் பராமரிப்பில் நலமுடன் உள்ளார். அவரது 104வது பிறந்தநாள் விழா வாடிப்பட்டியில் விமர்சையாக கொண்டாடப்பட்டது, மூதாட்டியின் மகன், மகள்கள், பேரன், பேத்திகள், […]
ஒரே கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மருத்துவக்குழுவை அனுப்பி சிகிச்சையளிக்க கோரிக்கை எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள நல்லம்மநாயக்கன்பட்டி கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பொதுவாக வெயில்காலம் தொடங்கும் போது, வெப்பநிலை மாறுபாட்டால் சின்னம்மை எனும் அம்மை நோய் பாதிப்பு ஏற்படும். இதே போன்றுதான் நல்லம்மநாயக்கன் பட்டி கிராமத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சின்னம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தெருக்களெங்கும் […]
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் சென்னையில் போராட்டம் நடத்திய ஸ்டாலினை கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி பேருந்து நிலையம் அருகில் திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் பழநி திமுக எம்.எல்.ஏ செந்தில்குமார் உட்பட 300க்கும் மேற்பட்ட திமுகவினர் சாலை மறியல் போராட்டம் மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீ கைது செய்தனர். மேலும் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் வைக்கோல் ஏற்றிவந்த லாரி தீப்பிடித்தது. அதிக உயரத்தில் வைக்கோல் ஏற்றிவந்தபோது தாழ்வான மின்கம்பி உரசியதில் தீப்பிடித்ததால் லாரி சேதம் அடைந்தது. தீயனைப்பு துறையினர் தீயை அனைத்து வருகின்றனர்.
திண்டுக்கல் : வேடசந்தூர் பாளையம் அருகே, மகனை மீட்டு தரக்கோரி தாயும் மகளும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயற்சி. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வான்ராயன்பட்டியை சேர்ந்த ஜெகஜோதி என்பவர் தனது மகன் குமரவேல் மைசூருக்கு வேலைக்கு போய் 3 மாதம் ஆகியும் என்ன நிலமை என தெரியவில்லை என்றும், மகனை வேலைக்கு அனுப்பிய புரோக்கர் மணி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தீ குளிக்க முயற்சி செய்தார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள நத்தம்மாடிபட்டியில் இன்று காலை முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 300 காளைகளும் 250 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். வாடிவாசல் வழியாக சீறி வந்த காளைகளை மாடுபிடிவீரர்கள் திமிலை பிடித்து அடக்க முயன்ற போது மாடுபிடி வீரர்களுக்கு பிடியில் சிக்காமல் மாடுகள் துள்ளிச் சென்றன. காளைகளை அடிக்கிய மாடுபிடிவீரர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டு வருகின்றது. அதே போல் பிடிபடாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கபட்டது. சைக்கிள், அண்டா, தங்க […]
திண்டுக்கல் : பழனி அருகே பெரியகலையம்புத்தூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை. கட்டுபாடுகளை விதித்து வரும் 16 ம்தேதி நடத்த மாவட்ட ஆட்சியர் வீனய் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் காவல்துறையினர் இடையேயான விளையாட்டு போட்டியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேல் மற்றும் மாவட்ட ஆட்சியர் வினய் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
திண்டுக்கல் : நீதிமன்ற வளாக புறவழி சாலையில் காரில் சென்றவர்களை கத்தி மற்றும் ஆயுதங்களை காட்டி மிரட்டிய வழக்கு. தென்காசியைச் சேர்ந்த அனீபா, திண்டுக்கல்லைச்சேர்ந்த நிசார் அலி, சைய்யது, இப்ராகிம் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களாக தமிழக போக்குவரத்துத்துறை தங்களுக்கு கொடுக்கிற ஊதியத்தை உயர்திகொடுக்க வேண்டும், அதேபோல தங்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர் தமிழக போக்குவரத்து ஊழியர்கள். இந்நிலையில் இன்று தமிழக அரசை கண்டித்து திண்டுக்கல் மாநகராட்சி அருகே 23 தொழிற்சங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் அதிமுக கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம்- சாணார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெத்தாம்பட்டி பொதுமக்கள் சார்பில் தண்ணீர், சுகாதாரம் உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்ககோரி சாணார்பட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்லில் அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் மோதியதால் 10 பேர் பலியானார்கள் .பலியானவர்களுக்கு முதல்வர் நிதிஉதவி வழங்கியுள்ளார் … திண்டுக்கல் பலக்கனூத்தில் அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் மோதிய விபத்தில் 10 பேர் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000, சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. source: www.dinasuvadu.com
திண்டுக்கல் மாவட்டத்தில் 434 அரசு பேருந்துகள் உள்ளது இதில் 84 பேருந்துகள் தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துனரை கொண்டு சுமார் 20 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து வசதியின்றி பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் சுற்றுள்ள பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர் .இதனால் மோதல்கள் அதிகமாக உள்ளது .எனவே கொடைக்கானல் பகுதியில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு பாதுகாப்பு கருதி டூவீலர்களில் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. இந்தத் தடை இன்று முதல் அமலாகிறது. சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் மோயர் பாயிண்ட், பைன் ஃபாரஸ்ட், குணா குகை, தூண்பாறை ஆகிய இடங்கள் வனப் பகுதியில் உள்ளன. இப்பகுதிகள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த இடங்களை கண்டு ரசிக்க இதுவரையில் இரு […]
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அரசுபேருந்தும் ,தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து.விபத்தில் ஆறு பேர் பலி . 20 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி திண்டுக்கல் மாவட்டம் பலக்கனுத்து என்ற இடத்தில் பேருந்து விபத்து நடைபெற்றுள்ளது.காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். source: www.dinasuvadu.com