தமிழகத்தை மிரட்டிய கஜா தற்போது திண்டுக்கலை மையம் கொண்டுள்ளது. கஜா புயல் கரையை கடந்து திண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ளது.திண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ள கஜா புயல் மணிக்கு 23 கி.மீ வேகத்தில் நகர்ந்து செல்கிறது.கஜா புயல் அடுத்த 3 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் திண்டுக்கல்லில் மையம் கொண்ட […]
அரசுப் பேருந்தின் அவலநிலையை சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட அரசு பேருந்து ஓட்டுநர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பழனி கிளையில் ஓட்டுனரான இருப்பவர் விஜயகுமார்.பழனி – திருச்சி பேருந்தை இயக்கி வருகிறார்.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் பேருந்து முழுவதும் ஒழுகியது, பிரேக், முகப்பு விளக்கு ஆகியவை சரிவர செயல்படவில்லை என்றும் இதனால் பேருந்தை இயக்க முடியவில்லை என ஒடுநர் விஜயகுமார் வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும் இதுகுறித்து கிளை மேலாளரிடம் […]
4 மாதங்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாநகராட்சி 7 வது வார்டுக்குட்பட்ட நாயக்கர் தெரு இந்த தெரிவில் அமைந்துள்ள கோவிந்தாபுரம், பள்ளிவாசல் தெரு, ஆகிய பகுதிகளில் கடந்த 4 மாதங்களாக குடிநீர் வழங்கவில்லை. இந்நிலையில் அத்திரமடைந்த பொதுமக்கள் குடிநீர் வழங்காததை கண்டித்து பெரியார் சிலை அருகே 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் ஈடுபட்டனர்.இதனால் அங்கு சற்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.4 மாதங்களாக குடிக்க தண்ணீரின்றி […]
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் சோதனையில் 2 டன்னுக்கு மேல் குட்கா பொருட்கள் சிக்கியுள்ளன. தாடிக்கொம்பை அடுத்த கிரியம்பட்டி கிராமத்தில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் அங்கு சென்ற திண்டுக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பெரியசாமி என்பவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் இரண்டுக்கும் மேற்பட்ட அறைகளில் 2 டன்னுக்கு மேல் பான்பராக, குட்கா உள்ளிட்ட 5 வகையான பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது […]
திண்டுக்கல்லில் உள்ள இந்து முன்னணி சார்பில் நடைபெறும் விநாயகர் சதூர்த்தி பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பங்கேற்றுள்ளார். புதுகோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்திக்கு சென்ற ஹெச்.ராஜா அங்கே நின்ற காவல்துறையினரையும் , நீதிமன்றத்தையும் கடுமையாக திட்டனார்.அவர் நீதிமன்றத்தை மிக கொச்சையாகவும், தமிழக காவல்துறை முழுவதுமாக ஊழல் நிறைந்து விட்டதாகவும் மற்றும் காவல்துறை குறித்து கொச்சையான கருத்துகளையும் அவர் கூறினார்.அப்படி அவர் பேசும்போது மதவாதத்தை தூண்டும் சில வார்த்தைகளையும் பேசினார். இதனால் நேற்று திருமயம் போலீசார் உயர்நீதிமன்றம் […]
திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சரை தொண்டர் ஒருவர் கலாய்த்தார். அது பற்றிய விவரம் வருமாறு திண்டுக்கல் ஒன்றியப் பகுதி மாலைபட்டியில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாலகிருshஷ்ணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு 1.20 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சீனிவாசன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் மேலும் பேசுகையில் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க முதல்வர் சட்டமன்றத்தில் […]
பிரபல ரவுடிபோல காவல்துறையினரை மிரட்டி வாட்ஸ் ஆப்பில் குரல் பதிவிட்டு வந்த வழிப்பறி கொள்ளைக்காரன் புல்லட் நாகராஜை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். கடந்த சில தினங்களாக வாட்ஸ் ஆப்பில் காவல்துறையினரை மிரட்டி குரல் பதிவு வெளியிட்டு வந்த புல்லட் நாகராஜ், தன்னை காவல்துறையால் பிடிக்க முடியாது என்று சவால் விட்டான். அவனை பிடிக்க தனிப்படை காவல துறையினர் அவனது செல்போன் நம்பர் மூலம் அவன் பதுங்கி இருக்கும் இடத்தை கண்டறிந்தனர். வத்தலகுண்டுவில் உள்ள தங்கும் […]
விடுதலைசிறுத்தை கட்சியினர் வினோதமாக பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காந்திநகர் பிரதான சாலையை சீரமைக்ககோரி விடுதலைசிறுத்தை கட்சி வினோதமாக பேரூராட்சி அலுவலகம் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மக்கள் அன்றாட பயன்படுத்தும் பிரதான சாலையை சீரமைத்து தர அதிகாரிகளுக்கு வலியுறுத்தினர். DINASUVADU
பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனை கண்டித்து திண்டுக்கல்லில் இந்து முன்னணியினர் சுமார் 150-க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். மேலும் அவர்கள் விநாயகர் சிலையை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக சென்று சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ஒன்றையும் அளித்தனர். DINASUVADU
திண்டுக்கல் அருகே அர்ஜுனன் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் நாகல் நகர் அண்ணாமலையார் பள்ளி அருகே அர்ஜுனன் என்பவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். DINASUVADU
திண்டுக்கல்லில் கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். திண்டுக்கல்லில் மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியத்தை அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். DINASUVADU
திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் நள்ளிரவு முகமூடி அணிந்த கொள்ளையர்கள் மூன்று உண்டியல்களை திருடிச் சென்றுள்ளனர்.இந்த சம்பவம் குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். DINASUVADU
திண்டுக்கல் பள்ளி மாணவர்கள் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இன்று நடைபெறும் சுதந்திர தினத்தையோட்டி திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் விடுதலை போராட்ட வீரர்களின் வேடம் அணிந்த 703 மாணவர் இந்திய வரைபட தோற்றத்தில் அணிவகுத்தனர். DINASUVADU
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்று திறனாளிகளுக்கு அரசு ஆணையின்படி 100 நாள் வேலை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் 150க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் . DINASUVADU
நேற்று கொடைக்கானலில் ஒரு மணிநேரத்திற்கு மேலாக விட்டு விட்டு பெய்யும் மழையால் படகு குழாம் வெறிசோடி காணப்பட்டது .இதனால் பயணிகள் சவாரி செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.
திண்டுக்கல் அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் திமுக உறுப்பினர்கள் 4பேர் ராஜினாமா செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் சேவுகம்பட்டி கூட்டுறவு கடன் சங்கத்தில் திமுக உறுப்பினர்கள் 4பேர் ராஜினாமா செய்துள்ளனர்.மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்துள்ளனர். மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணனை 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபயணம் மேற்கொண்ட நிலையில் கைது செய்ததை கண்டித்தும், உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி திண்டுக்கல்லில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நீண்டநாட்களாக திண்டுக்கல் அய்யம்பாளையத்தில் குடிநீர் வழங்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பேரூராட்சி அலுவலகம் முன்பு அப்பகுதிமக்கள் 2000க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்திற்கு சென்றுள்ளார். காந்திகிராம கிராமிய பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டு இருந்த பல்வேறு துறைகள் சார்ந்த கண்காட்சி அரங்கினை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திறந்து வைத்து பார்வையிட்டுவருகிறார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திண்டுக்கல் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற கோரி பள்ளி குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் அருகே பிச்சம்பட்டி கிராமத்தில் பொதுப்பாதையை தனிநபர்கள் ஆக்கிரமித்து முள்வேலி அமைத்துள்ளதால், ஆக்கிரமிப்பை அகற்ற கோரி பள்ளி குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.