முதலில் சீனாவில் தொடங்கி, அதனை தொடர்ந்து மற்ற நாடுகளிலும் பரவி வரும் கொரோனா வைரஸ் நோயானது உலக மக்கள் மத்தியில் பயத்தையும், நடுக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது, பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில், ஆட்டோவில் வலம் வந்த பிரான்ஸ் நாட்டு தம்பதியினரை கண்டு, அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். அவர்கள் வந்த ஆட்டோ பழுதாயாகி நின்றதை கண்ட அப்பகுதி மக்கள், காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த […]
புதிதாக அமைய உள்ள திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். ரூ. 325 கோடி மதிப்பில் புதிய அரசு மருத்துவ கல்லூரி அமைக்க மத்திய அரசானது அனுமதி வழங்கியது. இதனையடுத்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அடியனூத்து கிராமத்தில் 8.61 ஹெக்டர் பரபரப்பளவில் இந்த மருத்துவ கல்லூரிக்கு நிலம் ஒதுக்கப்பட்ட நிலையில் […]
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித் திருவிழா கொடியேற்றம் வெகுச்சிறப்பாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக திகழும் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கடந்த 20ந் தேதி பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது. பிப்.,21ந் தேதி பூச்சொரிதல் விழாவும்,பிப்., 23ந் தேதி சாட்டுதலும் வெகுச்சிறப்பாக நடந்தது.இதைத் தொடர்ந்து மாசித்திருவிழாகொடியேற்றம் நடந்தது. விஸ்வகர்ம மகாஜன சபா சார்பில் அம்மனுக்கு மஞ்சள் புடவை மற்றும் திருமாங்கல்யம் சாத்துபடி செய்தபின்னரே இந்த கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம். அதன்படியே […]
ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்றவர் பணம் வராத நிலையில் ஏ.டி.எம்மை உதைத்து ,கல்லை தூக்கி வீசி உடைத்த சம்பவக் காட்சிகள் அனைத்தும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எட்டி உடைத்தவர் சேவுகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் கிருஷ்ணமூர்த்தி தெரியவந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் உள்ள ஒரு ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்ற ஒருவர் பணம் வராத நிலையில் ஆத்திரத்தின் உச்சக்கட்டத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தை காலால் எட்டி ஒங்கி ஒரு உதை […]
கோவையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் 2 லாரி ஓட்டுநர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே தங்கச்சியம்மாபட்டி, ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில், கன்னியாகுமரியில் இருந்து கோவை நோக்கி சென்ற சரக்கு லாரியும், எதிரே, கோவையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் 2 லாரி ஓட்டுநர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். […]
பழனி அருகே கழிப்பிட வசதி இல்லாததால் திறந்தவெளி கழிப்பிடங்களையே கிராம மக்கள் பயன்படுத்தி வரும் அவலம் நீடித்து வருகிறது. இதனால், இப்பகுதி முழுவதும் சுகாதாரம் இன்றி காணப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள ஆயக்குடி ஊராட்சியில் கோமதி தியேட்டர் என்ற பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. பின்னர் இப்பகுதியில் உள்ள வீடுகளில் ஒன்றில் கூட கழிவறைகள் இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது. இந்நிலையில், அங்கு பொதுகழிவறைகள் இல்லாததால், பொதுமக்கள் திறந்தவெளிகளிலேயே கழிக்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி […]
தமிழகத்தில் சமீப சில நாட்களாக பழைய நாணயங்களை மக்கள் மத்தியில் எடுத்து செய்கின்றனர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வியாபாரிகள். நேற்று திண்டுக்கல் சந்து கடை பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் பழைய பத்து பைசா நாணயம் கொடுத்தால் 150 ரூபாய் மதிப்பு தக்க ஒரு டி-ஷர்ட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் நேற்று காலை முதலே அந்த கடையின் முன்பு 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பத்து பைசா நாணயத்துடன் குவிந்தனர். இதில் முதல் 200 பேருக்கு டி-ஷர்ட் […]
தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இந்திய வானிலை ஆய்வுமையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுத்து இருந்தது. குறிப்பாக நீலகிரி,கோவை ஆகிய மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு என அறிவித்து இருந்தது. இதனால் நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்கள் மூடப்பட்டது. இந்நிலையில் ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் திரும்பபெற்றது. இதை தொடர்ந்து கொடைக்கானலில் மூடப்பட்ட சுற்றுலா தலங்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
உலகளவில் இன்று(அக்.16) உணவு தினமாக கொண்டாடப்படுகிறது. உணவு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் பிரியாணி கடையில் அற்புதமான அறிவிப்பை அறிவித்தனர். அதாவுது “செல்லாத 5 பைசா நாணயத்தை கொண்டு வரும் முதல் 100 பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படும்” என அறிவித்தனர். இந்த சேவை மதியம் 12 மணியளவில் தொடங்கும் என்றபோதிலும் காலை 10 மணியளவிலே கடைக்கு முன் கூட்டம் அலை மோதியது. இதுகுறித்து பிரியாணி கடை உரிமையாளர் சேக் முஜிபூர் ரகுமான் கூறுகையில், பழமையை புதுமையாக மாற்ற […]
கொடைக்கானல் அண்ணா நகரில் பகுதியை சேர்ந்த சசி என்பவர் அதே பகுதியில் தனியார் கடையில் வேலை செய்து வரும் ரோஜா என்ற பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இவர்களுக்கு இடையில் பண பரிவர்த்தனை அடிக்கடி நிகழ்ந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சசியிடம் கொடுத்த கடன் அதிகமானதால் ரோஜா அவரிடம் அடிக்கடி கேட்ட பிறகு, திண்டுக்கல் வத்தலகுண்டிற்கு வருமாறும் அங்கு வந்து பணத்தை பெருகொள்ளுமாறும் கூறியுள்ளன். இதனை நம்பி அங்கு சென்றுள்ள ரோஜாவை தனியார் விடுதிக்கு அழைத்து சென்று அவரை பாலியல் […]
தலப்பாகட்டி பிரியாணி நம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்று. தலப்பாகட்டி பிரியாணி என்ற பெயரில் பல இடங்களில் பிரியாணி கடைகள் உள்ளது. இதனால், மக்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், “மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் தங்களது உணவகமான தலப்பாக்கட்டி, தலப்பாகட்டு போன்ற பெயர்களையும், சின்னத்தையும் பயன்படுத்த ஏழு தனியார் உணவகங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.” என்று தலப்பாகட்டி உணவகத்தின் பங்குதாரர் நாகசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்து இருந்தார். இதனையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பிரபலமான […]
திண்டுக்கல்லில் சேவல் கண்காட்ச்சி நடைபெற்றது. திண்டுக்கல் அருகே நடைபெற்ற சேவல் கண்காட்சியில் 500-க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்றன. திண்டுக்கல் மாவட்டம் சித்தூர்பட்டியில், சேவல் கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமான சேவல்கள், கண்காட்சியில் இடம்பெற்றன. இதில் விசிறி வால் சேவல், பார்வையாளர்களால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை விலை கேட்கப்பட்டது. குறிப்பாக வெள்ளை, மயில், கருப்பு, வெள்ளை நூலான், விசிறிவால், கிளி மூக்கு என பல்வேறு வகையான சேவல்கள் பார்வையாளர்களை […]
கடும் பனிப்பொழிவால் திண்டுக்கல்லில் கொய்யாப்பழத்தில் ஆணிக்காய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டாரப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் கொய்யா சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக நிலவிவரும் கடும் பனிப்பொழிவு காரணமாக கொய்யாப்பழத்தில் ஆணிக்காய் பாதித்துள்ளது. பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் அடங்கிய கொய்யாப்பழத்தில் பாதுகாக்க எவ்வளவு மருந்து அடித்தாலும் பலன் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மேலும், இதனால், பல லட்சம் ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற […]
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் பசுமை குடில் அமைத்து அதிக மகசூல் தரும் நெதர்லாந்து மிளகாய் பயிரிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் அமைந்துள்ள காய்கறி மகத்துவ மையத்தில், இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் குறைவான தண்ணீர் மூலம், பசுமை குடில் அமைத்து பல வகையான காய்கறிகளை சாகுபடி செய்யும் முறைகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.இங்கு நவீன முறையில் பசுமைக்குடில் அமைத்து, முதன்முறையாக நெதர்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட ஹாட் பெப்பர் எனப்படும் ஒருவகை பச்சை மிளகாயை வளர்க்கின்றனர். […]
வணிகர்கள் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட பொருட்களை விற்க வேண்டாம் என்று கொடைக்கானல் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கொடைக்கானல் கோட்டாட்சியர் கூறுகையில், கொடைக்கானல் மலைப்பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும். உணவுப் பொருட்கள் வாங்க துணிப்பைகள், பாத்திரங்கள் பயன்படுத்த வேண்டும். வணிகர்கள் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட பொருட்களை விற்க வேண்டாம் என்று கொடைக்கானல் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசால் சுற்றுலா தலமென்று அறிவிக்கபட்ட வேடச்சந்தூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூர் அடுத்த மாரம்பாடியில் 300 ஆண்டு பழமை வாய்ந்த புனித அந்தோனியர் ஆலயம் உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்ட புனித அந்தோனியார் தேவாலயத்தில், உலக அமைதி வேண்டி அதிகாலையில் இருந்து சிறப்பு வழிபாடுகள் நடத்தபட்டன. பின்னர் சபை மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை பரிமாரிக் கொண்டனர்.
திண்டுக்கல் அருகே அழகம்பட்டி ரயில்வேகேட் கீப்பரை அதிமுக எம்பி தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அழகம்பட்டி ரயில்வேகேட் கீப்பரை அதிமுக எம்பி தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரயில் வருவதால் மூடப்பட்ட கேட்டை திறக்கக்கூறி ரயில்வே ஊழியர் மணிமாறனிடம் அதிமுக எம்.பி தகராறு செய்துள்ளார் .அவர் திறக்காததால் அவரை அதிமுக எம்பி தாக்கியுள்ளார்.இதன் பின் அதிமுக எம்.பி. உதயகுமார் தாக்கியதாக கூறி ரயில்வேகேட்டை மூடாததால் நடுவழியில் ரயில் நிறுத்தபட்டுள்ளது .
திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் 2 மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் கூறுகையில், தென் தமிழக கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் மாலத்தீவு பகுதியில் காற்று மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் பரவலாகவும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும்.டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர் மற்றும் […]
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்ததாக லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள மடத்தூரில் சில தினங்களாக லாரிகளில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் கால்நடைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து இத்தகைய கழிவுகளை ஏற்றிவந்த லாரி ஒன்றை அவர்கள் சிறைபிடித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், லாரி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது […]