16 வயது சிறுமி நீண்ட நேரம் தொலைபேசியில் ஆண் நண்பருடன் பேசி கொண்டிருந்ததால், அவரது அண்ணன் அச்சிறுமியை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி கணபதி நகரை சேர்ந்த முருகேசன் எனும் கூலித் தொழிலாளியான நபருக்கு, சங்கிலியம்மாள் எனும் மனைவியும், கார்த்திக் என்ற மகனும், 2 மகள்களும் இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பதாக முருகேசன் உயிரிழந்த நிலையில் அவரது மகன் கார்த்தி கட்டிட வேலைக்கு சென்று தனது […]
திண்டுக்கல் அருகே மின்சாரம் தாக்கியதில் தந்தை மற்றும் அவரை காப்பாற்ற சென்ற இரு மகன்கள் மூவரும் உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் அடுத்த செட்டியபட்டி எனும் பகுதியில் வசித்து வரக்கூடிய 45 வயதுடையவர் தான் திருப்பதி. இவர் மின்கசிவு இருப்பது தெரியாமல் சுவர் ஒன்றை தொட்டுள்ளார். இதனையடுத்து, அவரை மின்சாரம் தாக்கி உள்ளது. திருப்பதியை மின்சாரம் தாக்கியது அறிந்த அவரது மகன்கள் தங்களது தந்தையை காப்பாற்றுவதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில், தந்தையை காப்பாற்ற சென்ற 15 வயதுடைய சந்தோஷ்குமார் மற்றும் 17 […]
திண்டுக்கல்லில் கல்விக் கட்டணம் செலுத்தாத காரணத்தால் 13 மாணவர்களை ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கிய தனியார் பள்ளி மீது பெற்றோர்கள் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். கடந்த ஒரு வருட காலமாக உலகம் முழுவதிலும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸின் தாக்கம் தற்போதும் குறையாத நிலையில், பள்ளிகள், கல்லூரிகள் தொழிற்சாலைகள் அனைத்தும் ஒரு வருடத்திற்கு மேலாக மூடப்பட்ட நிலையில் உள்ளது. இருப்பினும், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், […]
புரேவி புயல் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைக்கு செல்ல கூடிய அனைத்து பேருந்துகளும் இன்று மாலை 7 மணி முதல் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தற்பொழுது புரேவி புயல் உருவாகி உள்ளதால், இது கரையை கடக்கும் நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் சிலவற்றுக்கு கன மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக […]
கூலி தொழிலாளர்கள் போல மாறுவேடத்தில் சென்று பெண் கஞ்சா வியாபாரியை மடக்கி பிடித்த போலீசார். நாடு முழுவதிலும் கஞ்சா வியாபாரிகள் மற்றும் சிறுவயதிலேயே கஞ்சாவுக்கு அடிமையாகியவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை தடுப்பதற்காக போலீசார் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் ஒவ்வொரு வியாபாரிகளும் நூதனமான முறையில் மறைமுகமாக கஞ்சாவை விற்பனை செய்து கடத்தி கொண்டுதான் இருக்கின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. எனவே அந்த இடத்திற்கு […]
திண்டுக்கல்லில் ஓரினச்சேர்க்கையாளர்கள் ஒரே நாளில் ஒருவர் கொலை, ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் எண்ணிக்கையும், அவர்களுக்கு ஆதரவானவர்களும் அதிகரித்துவிட்டனர். அதே போல தான் காரணமில்லாத மரணங்களும், தற்கொலைகளும் நிகழ்கிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நத்தம் ரெட்டிபாளையத்தை சேர்ந்த ஓரினச்சேர்க்கையாளர்கள் தான் 19 வயதுடைய ஸ்ரீகாந்த் மற்றும் 33 வயதுடைய ராமச்சந்திரன். இருவரும் ஓரினச்சேர்க்கையாளர்களாக கணவன் மனைவி வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், சென்னை வணிக வளாகத்தில் வேலை செய்து வந்த ஸ்ரீகாந்த் […]
12 வயது சிறுமியின் பலாத்கார கொலையில், `வழக்கின் தீர்ப்பை அறிந்து அரசு நிச்சயம் மேல் முறையீடு செய்யும் என சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பாக கிருபானந்தன் என்பவர் கைது செய்யப்பட்டார். இருப்பினும் தகுந்த ஆதாரம் இல்லை என்பதால் திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் அவரை விடுதலை செய்ய உத்தரவு கொடுத்து விடுதலை செய்தது. இந்நிலையில், இதற்க்கு எதிர்ப்பு […]
தனியார் நிதிநிறுவன கடனுக்காக வீடு ஜப்தி செய்யப்பட்டதால், விரக்தியில் விவசாயி தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். தேனி மாவட்டத்திலுள்ள தேவதானம்பட்டியை சேர்ந்த காமக்காபட்டி சேர்ந்த 62 வயதுடைய அர்ஜுனன் எனும் விவசாயி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் 15 லட்சம் வீடு கட்டுவதற்காக கடன் வாங்கியுள்ளார். இந்த 15 லட்சத்தை பல்வேறு தவணையில் இவர் செலுத்தியுள்ளார். இருப்பினும் மூன்று தவணை தொகையை அவரால் சில பொருளாதார சிக்கல் காரணமாக செலுத்த முடியாமல் சென்றுள்ளது. பின்பு மீண்டும் […]
கடலை பருப்பு சாப்பிட்டு திண்டுக்கல்லில் உள்ள ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. பொதுவாகவே ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு என்னென்ன சாப்பிட கொடுக்க வேண்டும் என்பதில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்துவது வழக்கம். சில கடினமான பொருட்களை குழந்தைகளுக்கு கொடுக்காமல் தவிர்ப்பது மிகவும் நல்லது. தற்பொழுது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே உள்ளது செங்குளத்துபட்டியை சேர்ந்த விஜய் என்பவரின் ஒன்றரை வயது குழந்தை தர்ஷனா கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக வீட்டிலிருந்த கடலைப் பருப்பை எடுத்து சாப்பிட்டுள்ளார். […]
கொடைக்கானலுக்கு வர விரும்பும் சுற்றுலாப்பயணிகள் இ-பாஸ் இல்லாமல் வரலாம் என உதவி ஆட்சியர் சிவகுரு அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகம் முழுவதிலும் அதிகரித்து வந்தாலும் தமிழக அரசு மக்களின் நிலை கருதி சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் போக்குவரத்து கடந்த மாதமே இயக்கப்பட்டது, ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்வதற்கு இ பாஸ் அனுமதி பெற வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களை தவிர மற்ற இடங்களுக்கு இ பாஸ் இல்லாமல் […]
கொடைக்கானலில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கி அம்மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சுற்றுலா தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் ஊரடங்கில் பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் நாளை முதல் சுற்றுலா பயணிகள் வர அனுமதி வழங்கி, அம்மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா […]
கொடைக்கானலை சுற்றிப் பார்க்க நாளை முதல் அனுமதி அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களின் நிலை அறிந்து தமிழக அரசு தற்போது சில தளர்வுகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில், போக்குவரத்து தொழிற்சாலைகள் ஆகியவை இயங்க துவங்கியுள்ள நிலையில் சுற்றுலாத் தலங்களும் தற்பொழுது கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் […]
கொடைக்கானல் தீயணைப்பு நிலையத்தில் மீட்பு பணித்துறை இயக்குனர் சைலேந்திரபாபு ஆய்வு. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையத்தை தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை இயக்குனர் சைலேந்திரபாபு ஆய்வு செய்துள்ளார், மேலும் அவ்வளாகத்திலேயே மரக்கன்று ஒன்றையும் நட்டுள்ளார். அங்கு ஆய்வு செய்த அவர், போதுமான தீயணைப்பு வீரர்கள் இருக்கிறார்களா? உபகரணங்கள் போதுமான அளவு இருக்கிறதா என்பதையும் ஆய்வு செய்துள்ளார். மேம்மலை கீழ்மலை கிராமங்களுக்கு தனித்தனி தீயணைப்பு நிலையம் வேண்டும் என வைக்கப்பட்ட கோரிக்கைக்கு விரைவில் […]
திண்டுக்கல்லில் அரியர் எழுதிய மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்று கூறியதை அடுத்து நன்றி தெரிவித்து ஒட்டிய போஸ்ட்ர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கொரோனா வைரஸின் பாதிப்பு காரணமாக கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளுக்கும் தடை விதித்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்திருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மேலும் அரியர்ஸ் எழுதுவதற்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என்றும் கூறியதை அடுத்து மாணவ, மாணவர்கள் முதல்வருக்கு சமூக […]
13 வயது சிறுவன் கண்டுபிடித்த செயலி கூகுள் பிளே ஸ்டோரில் சேர்க்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் தாமரைப்பாடியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி நாகலட்சுமி வடமதுரை மம்மானியூர் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களின் மகன் எம்.என்.பிரனேஷ் (13). இவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இந்த மாணவன் ஐந்தாம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் கல்வியை கற்று வரும் நிலையில், இவர் ‘ஜெட் லைவ் சாட்’ என்ற செயலியை உருவாக்கி […]
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸின் தீவிர பரவலால், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், 10ம் வகுப்பு பொது தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார், மெட்ரிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது என திண்டுக்கல் […]
திண்டுக்கலை சேர்ந்த 95 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் இதுவரை, 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நோயின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், திண்டுக்கலை […]
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்திலும் இந்த வைரஸ் தொற்று இருப்பதால், அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிற நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது காட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும் என்றும், காரில் 2 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்றும், பொது […]
கொரோனா தொற்றை தடுக்க இந்தியா முழுதும் 21 நாட்கள் லாக்-டவுன்எனப்படும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில் இந்த ஊரடங்கு மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு பெரிய தலைவலியை சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தற்போது தமிழகத்தில் பல்வேறு திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், தற்போது திண்டுக்கல்லில் உள்ள அரசு மதுபானக் கடையின் பின்பக்கக் கதவை உடைத்து மர்மநபர்கள் தங்கள் கைவரிசையில் ஈடுபட்டு உள்ளனர், அவர்கள் சுமார் ரூ.6 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திண்டுக்கல் […]
கொரோனோ வைரஸ் தொற்று உலகம் முழுவது மின்னல் வேகத்தில் பரவி தனது கோரத்தை அரங்கேற்றி வருகிறது.இதனால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும் பல்லாயிரக்கணக்கானோர் அப்பாவி மக்கள் உயிரிழந்து உள்ளனர். உலகமே கொரோனாவை கண்டு கடும் அச்சத்தில் உள்ளது.இந்தியாவில் இதன் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது கவலை அளிக்கிறது.இதன் மின்னல் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு உள்ளது.ஊரடங்கு உத்தரவு காரணமாக கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களில் மக்கள் ஒன்றுக்கூடும் வழிபாடுகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டுள்ளன.ஆனால் முறைப்படி […]