பிளாஸ்டிக் பாட்டில்களை திரும்ப பெறும் மையங்களை அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. உதகை, கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில்களை திரும்ப பெறும் மையங்களை உடனடியாக அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பிளாஸ்டிக் பாட்டில்களை திரும்ப பெறும் மையங்களை அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய நீலகிரி, திண்டுக்கல் ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மேலும், உதகை, கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படவில்லை என்பதை உறுதி செய்யவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிளாஸ்டிக் […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்ட 321 வீடுகளை திறந்து வைத்தார். திண்டுக்கல் தோட்டனுாத்துவில் ரூ.17.17 கோடி செலவில், இலங்கை தமிழர்களுக்காக 321 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த 321 புதிய வீடுகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். தோட்டனுத்து, அடியனுத்து, கோபால்பட்டி ஆகிய 3 முகாம்களை ஒருங்கிணைத்து ஒருங்கிணைத்து இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக இலங்கை தமிழர்கள் நிரந்தர குடியிருப்பு குறித்து கோரிக்கைகளை முன்வைத்து வந்த […]
நத்தம் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நாளை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திண்டுக்கல்லில் புகழ் பெற்ற நத்தம் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த விழா தொடங்கி இன்று தீர்த்தங்கள் கொண்டுவரும் நிகழ்வு நடந்து முடிந்துள்ளது. இதில் முக்கிய அமைச்சர்கள் கலந்துகொண்டனர். நாளை குடமுழுக்கு (கும்பாபிஷேசகம்) திருவிழா நடைபெற உள்ளது . இதனை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நாளை (07-09-2022) உள்ளூர் […]
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,தமிழகத்தில் இன்று நீலகிரி,கோயம்புத்தூர்,தேனி,திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.மேலும்,தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை: வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான […]
கடந்த 2021-22 ஆம் ஆண்டிற்கான உயர்கல்வித் துறையின் மானியக் கோரிக்கையின் போது,தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சீரான உயர்கல்வி வழங்குவதற்கும்,மாணவர் சேர்க்கை விகிதாச்சாரத்தை அதிகப்படுத்துவதற்கும்,விருதுநகர் மாவட்டம் – திருச்சுழி;கள்ளக்குறிச்சி மாவட்டம் – திருக்கோவிலூர்;ஈரோடு மாவட்டம் – தாளவாடி;திண்டுக்கல் மாவட்டம் – ஒட்டன்சத்திரம்;திருநெல்வேலி மாவட்டம் – மானூர்;திருப்பூர் மாவட்டம் – தாராபுரம்;தருமபுரி மாவட்டம் – எரியூர்;புதுக்கோட்டை மாவட்டம் -ஆலங்குடி;திருவாரூர் மாவட்டம் – கூத்தா நல்லூர்;வேலூர் மாவட்டம்-சேர்க்காடு ஆகிய இடங்களில் புதியதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் […]
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,தமிழகத்தில் இன்று நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதைப்போல,நாளையும் நீலகிரி,கோயம்புத்தூர், தேனி,திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.மேலும்,தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று […]
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,தமிழகத்தில் நீலகிரி,கோயம்புத்தூர்,திருப்பூர்,தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.. மேலும்,தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். […]
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,தமிழகத்தில் இன்று நீலகிரி,கோயம்புத்தூர்,திருப்பூர்,தேனி, திண்டுக்கல்,கிருஷ்ணகிரி,தருமபுரி,திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும்,இன்று முதல் நான்கு நாட்களுக்கு தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,நகரின் ஒருசில பகுதிகளில் இடி […]
கொடைக்கானலில் இன்று முதல் மதுபாட்டில்களை திரும்பப்பெறும் நடவடிக்கை அமல் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவு. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள 10 டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாக அம்மாவட்ட ஆட்சியர் விசாகன் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி,10 டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் காலி மதுபான பாட்டில்கள் திரும்ப பெறப்படும்.இதனால் மதுபானம் வாங்குவோர் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக செலுத்த வேண்டும் என்றும் […]
கொடைக்கானலில் நாளை முதல் மதுபாட்டில்களை திரும்பப்பெறும் நடவடிக்கை அமல் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள 10 டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருவதாக அம்மாவட்ட ஆட்சியர் விசாகன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 10 டாஸ்மாக் கடைகளில் நாளை முதல் காலி மதுபான பாட்டில்கள் திரும்ப பெறப்படும். இதனால் மதுபானம் வாங்குவோர் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக செலுத்த […]
ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறையில் திண்டுக்கல் மாவட்டத்துக்கு ரூ.121 கோடி விடுவிப்பு என முதலமைச்சர் தகவல். திண்டுக்கலில் ஏற்கனவே நிறைவடைந்த ரூ.40.45 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகளை தொடக்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.206.54 கோடி மதிப்பிலான 285 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மொத்தம் 54,230 பயனாளிகளுக்கு ரூ.364.95 கோடியில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதன்பின் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், திண்டுக்கல் மாவட்டத்துக்கான காவிரி கூட்டு குடிநீர் திட்டம் ரூ.95.5 கோடியில் மேம்படுத்தப்படும் […]
ஆம்வே இந்தியா நிறுவனத்தின் ரூ.758 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. மல்டி லெவல் மார்க்கெட்டிங் மூலம் மோசடி செய்த ஆம்வே இந்தியா நிறுவனத்தின் ரூ.758 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆம்வே நிறுவனத்துக்கு சொந்தமான கட்டடம், தொழிற்சாலை நிலங்கள் மற்றும் வங்கி வைப்புத் தொகை ஆகியவற்றையும் முடக்கம் செய்யபட்டுள்ளது. அதன்படி, ரூ.411.83 கோடி மதிப்புள்ள ஆம்வே நிறுவனத்தின் அசையும், அசையா செதுக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. 36 வெவ்வேறு […]
திண்டுக்கல் அருகே உள்ள கே.கீரனூர் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தை அடுத்த கள்ளிமந்தயம் அருகே கே.கீரனூர் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் கூறிய நிலையில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 10க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியேறி சாலையில் மக்கள் தஞ்சம் அடைந்தனர்.
திண்டுக்கல்:பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா பக்தர்கள் இன்றி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது.அதில்,ஜன.14 முதல் 18 வரை அனைத்து வழிபாட்டு தளங்களிலும் மக்களுக்கு அனுமதி இல்லை என்றும் பொங்கல், தைப்பூசம் நாட்களில் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டது. மேலும்,வரும் 16-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து,பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி […]
பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. தமிழகத்தில் நேற்றுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில், தமிழகத்தில் ஜனவரி 31-ஆம் தேதி வரை கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, தமிழகத்தில் ஜனவரி 31-ஆம் தேதி வரை இரவுநேர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. அதில், ஜன.14 முதல் 18 வரை […]
திண்டுக்கல்லில் இளைஞரை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது என ஐஜி அன்பு தகவல். திண்டுக்கல் மாலபட்டி அருகே ராகேஷ் (வயது 26) என்பவர் மீன் பிடிப்பதற்காக குத்தகைக்கு எடுத்த செட்டி குளத்தை காவல் காத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் அவரை சுட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞர் ராகேஷின் உடலில் ஆறு இடங்களில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளது. இதன்பின் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து, குளத்தை ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட […]
திண்டுக்கல் பாச்சலூரில் மர்மமான முறையில் இறந்த சிறுமி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக டிஜிபி உத்தரவு. திண்டுக்கல் மாவட்டம் பாச்சலூரில் 5-ஆம் வகுப்பு சிறுமி பள்ளி அருகே உயிரிழந்த சம்பவம் குறித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். பள்ளி அருகே தீயில் கருகி இறந்து கிடந்த சிறுமி வழக்கில் மர்மம் நீடிக்கும் நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியை அடுத்த தாண்டிக்குடி கிராமத்தை சேர்ந்த […]
திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 19-ஆம் தேதி நடைபெறும் என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திண்டுக்கல் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 19-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஒட்டன்சத்திரம் கிறிஸ்துவ பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 200-க்கும் அதிகமான வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு, […]
கனமழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று கல்லூரிகளுக்கும்,நீலகிரியில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது.இதன்காரணமாக,இன்று பள்ளிகளுக்கு மட்டும் முன்னதாக விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில்,தற்போது கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,கனமழை மற்றும் மழை பாதிப்பு காரணமாக தற்போது வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களின் விபரம் இதோ: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: இன்று நெல்லை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, […]
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வரும் 15-ஆம் தேதி தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதர மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது. நவம்பர் 16 மற்றும் […]