திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் சுற்றுள்ள பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர் .இதனால் மோதல்கள் அதிகமாக உள்ளது .எனவே கொடைக்கானல் பகுதியில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு பாதுகாப்பு கருதி டூவீலர்களில் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. இந்தத் தடை இன்று முதல் அமலாகிறது. சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் மோயர் பாயிண்ட், பைன் ஃபாரஸ்ட், குணா குகை, தூண்பாறை ஆகிய இடங்கள் வனப் பகுதியில் உள்ளன. இப்பகுதிகள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த இடங்களை கண்டு ரசிக்க இதுவரையில் இரு சக்கர வாகனம் உட்பட அனைத்து வாகனத்திலும் சுற்றுலாப்பயணிகள் சென்று வந்தனர்.
இப்பகுதியில் அண்மைக்காலமாக காட்டெருமையின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இதுதவிர, மனிதர் – விலங்கு மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த மோதல்களில் அதிகமாக இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். எனவே இன்று முதல் வனப் பகுதிகளில் இருக்கும் சுற்றுலாத்தலங்களைக் காண பாதுகாப்புக் கருதி இரு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது என வனத்துறை தெரிவித்துள்ளது.
source: dinasuvadu.com
சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…
நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…