திண்டுக்கல் அருகே கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு டூவீலரில் செல்ல தடை!

Default Image

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் சுற்றுள்ள பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர் .இதனால் மோதல்கள் அதிகமாக உள்ளது .எனவே கொடைக்கானல் பகுதியில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு பாதுகாப்பு கருதி டூவீலர்களில் செல்ல வனத்துறை தடை  விதித்துள்ளது. இந்தத் தடை இன்று முதல் அமலாகிறது. சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் மோயர் பாயிண்ட், பைன் ஃபாரஸ்ட், குணா குகை, தூண்பாறை ஆகிய இடங்கள் வனப் பகுதியில் உள்ளன.  இப்பகுதிகள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த இடங்களை கண்டு ரசிக்க இதுவரையில் இரு சக்கர வாகனம் உட்பட  அனைத்து  வாகனத்திலும் சுற்றுலாப்பயணிகள் சென்று வந்தனர்.
இப்பகுதியில் அண்மைக்காலமாக காட்டெருமையின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இதுதவிர, மனிதர் – விலங்கு மோதல்கள் அதிகரித்து  வருகின்றன. இந்த மோதல்களில் அதிகமாக இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். எனவே இன்று முதல் வனப் பகுதிகளில்  இருக்கும் சுற்றுலாத்தலங்களைக் காண பாதுகாப்புக் கருதி இரு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது என வனத்துறை தெரிவித்துள்ளது.
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்