திருச்சியில் நத்தம்மாடிபட்டியில் விமர்சையாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டி!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள நத்தம்மாடிபட்டியில் இன்று காலை முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 300 காளைகளும் 250 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
வாடிவாசல் வழியாக சீறி வந்த காளைகளை மாடுபிடிவீரர்கள் திமிலை பிடித்து அடக்க முயன்ற போது மாடுபிடி வீரர்களுக்கு பிடியில் சிக்காமல் மாடுகள் துள்ளிச் சென்றன. காளைகளை அடிக்கிய மாடுபிடிவீரர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டு வருகின்றது.
அதே போல் பிடிபடாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கபட்டது. சைக்கிள், அண்டா, தங்க காசுகள், கட்டில், பீரோ என 2 இலட்சம் ரூபாய் வரையிலான பரிசுகள் வழங்கபட்டன. பாதுகாப்பிற்க்காக 200க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 25-க்கும் மேற்பட்ட மருத்துவ உதவி குழுவினர் 10 மேற்ப்பட்ட தீயணைப்பு வீரர்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புதுச்சாவடி கிராமத்தில் 167-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது, இதில் 200 காளைகளும் 150 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டு வருகின்றனர்.
திருச்சி, மணப்பாறை, அரியலூர், மீன்சுருட்டி, கும்பகோணம் ஆகிய பகுதிகளில் இருந்தும் காளைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் வெற்றி பெரும் வீரர்களுக்கும், காளைகளுக்கும் கட்டில், பீரோ, சைக்கிள், தங்க காசு ஆகியவை பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. .
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …