திண்டுக்கல் : அறநிலையத்துறை சார்பில் இன்றும் (ஆகஸ்ட் 24) நாளையும் (ஆகஸ்ட் 25) பழனியில் நடைபெறும் முத்தமிழ் முருகன் மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தமிழ்க் கடவுள் என போற்றப்படும் முருகன் புகழை போற்றும் விதமாக “முத்தமிழ் முருகன் மாநாடு” எனும் நிகழ்வு தமிழக அரசின் அறநிலையத்துறை சார்பில் இன்றும், நாளையும் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பழனியாண்டவர் கல்லூரி வளாகத்தில் தொடங்கி உள்ளது. இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் […]
திண்டுக்கல் : கேரள மாநிலம் வயநாட்டில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தால் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் தற்போது வரையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. வயநாடு பகுதி மக்கள் தங்கள் வீடுகளை , உடமைகளை இழந்து தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க போராடும் நிலையில் உள்ளனர். வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு மாநில அரசுகள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள், தன்னார்வலர்கள் என பலரும் தங்களால் இயன்ற நிதியுதவி மற்றும் பொருளுதவிகளை அளித்து வருகின்றனர். […]
திண்டுக்கல்: தமிழக அறநிலையத்துறை சார்பில் வரும் ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தினங்களில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள, முருகரை பற்றி ஆய்வு கட்டுரைகள் எழுதி அனுப்ப muthamizhmuruganmaanadu2024.com எனும் இணையதளத்தில் பதிவு செய்ய முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், முருகன் மாநாடு பற்றியும், அதற்கான முன்னேற்பாடுகள், ஆய்வு கட்டுரைகள், விருதுகள் பற்றியும் அமைச்சர் சேகர்பாபு இன்று சென்னையில் செய்தியாளர்கள் […]
சின்னாளம்பட்டி பகுதியில் டீக்கடை ஒன்றில் வாங்கிய வடைக்குள் கருகிய நிலையில் சுண்டெலி இருந்துள்ளது. திண்டுக்கல் சின்னாளம்பட்டி பகுதியில் டீக்கடை ஒன்று உள்ளது. அந்த டீக்கடையில் பலகாரங்களை பொதுமக்கள் வாங்கி சொல்வது வழக்கம். அந்த வகையில் நேற்று அந்த கடையில் 10 வயது சிறுமி ஒருவர் வடை வாங்கி சென்றார். பருப்பு வடையை எடுத்து சாப்பிடுவதற்க்காக வடையை பிய்த்துள்ளார். அப்போது அந்த வடைக்குள் கருகிய நிலையில் சுண்டெலி ஒன்று இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமி, பெற்றோரிடம் காண்பித்துள்ளார். […]
குண்டர் தடுப்பு சட்டத்தை காவல்துறையினர் இயந்திரத்தனமாக செயல்படுத்தி உள்ளனர் என நீதிபதிகள் குற்றச்சாட்டு. கொலை வழக்கில் கைதான திண்டுக்கல்லை சேர்ந்த 5 பேர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஸ்ரீதர், ராஜ்குமார், ராஜேஸ்வரன், கருணாகுமார், ரஞ்சித் ஆகியோர் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. குண்டர் தடுப்பு சட்டத்தை காவல்துறையினர் இயந்திரத்தனமாக செயல்படுத்தி உள்ளனர் என்றும் குண்டர் தடுப்பு காவல் விதிகளை மனதில் கொள்ளாமல் […]
திண்டுக்கல் பழனி அருகே சாமிநாதபுரம் பகுதியில் தனியார் நூல் ஆலையில் தீ விபத்து. திண்டுக்கல் பழனி அருகே சாமிநாதபுரம் பகுதியில் தனியார் நூல் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயில் கேன் மூலம் தீ பற்றி பாய்லர் வெடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் […]
சுமைதூக்கும் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது திண்டுக்கல் நீதிமன்றம். முத்தழகுபட்டியை சேர்ந்த செபஸ்தியாரை முன் விரோதத்தால் கடந்த 2014-ஆம் ஆண்டு மே 5-ஆம் தேதி 10 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொன்றது. வழக்கை விசாரித்த திண்டுக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் அந்தோணி விமல், சின்னப்பராஜ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. அருள் ஆரோக்கிய தாஸ், தங்கம், ஜஸ்டின் தாஸ், ஜான் பிரபாகர், விக்னேஷ் இன்பராஜ், தாமரைக்கண்ணன் ஆகியோருக்கும் […]
சித்தரேவு கிராமத்திலுள்ள உச்சி காளியம்மன், செல்வ விநாயகர் கோயிலில் வழிபாடு நடத்த அனுமதி கோரிய வழக்கில் உத்தரவு. பழனி அருகே செல்வா விநாயகர், உச்சிகாளியம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் சென்று வழிபட உயர் நீதிமன்றம் மதுரை கிளை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக கூறி பட்டியலின மக்கள் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் திண்டுக்கல் ஆட்சியர், புகாருக்குள்ளான மோதில்ராம், சின்னசாமி மற்றும் ராமசாமி பதில்தர வேண்டும் […]