தருமபுரியில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…!!
தருமபுரியில் நடைபெற்ற மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர்.
மாநில அளவிலான இண்டோர் ஆர்சாரி கோப்பைக்கான வில்வித்தை போட்டி தருமபுரியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் சேலம், நாமக்கல், தருமபுரி கோவை, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மூன்று பிரிவுகளாக நடந்த வில்வித்தை போட்டியில் 10, 12 மற்றும் 14 வயதுக்குட்பட்ட வீரர்கள் பங்கேற்று தங்களது திறமையை வெளிபடுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.