தருமபுரியில் பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 9,000 கன அடியில் இருந்து 60,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கலில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க, பரிசல்களை இயக்க 33வது நாளாக தடை நீடிக்கிறது. மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.
தருமபுரியில் பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 19,000ல் இருந்து 14,000 கனஅடியாக குறைந்தது.சுற்றுலாப் பயணிகள் குளிக்க, பரிசல்களை இயக்க ஒகேனக்கல்லில் 28ஆவது நாளாக தடை நீடிக்கிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தருமபுரியில் புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார். உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தருமபுரியில் 10 நாட்களுக்கு நடைபெறும் புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தருமபுரி மாவட்டத்திற்கு ஆடிபெருக்கு விழாவையொட்டி நாளை (ஆகஸ்ட் 03) உள்ளூர் விடுமுறை என்று தருமபுரி ஆட்சியர் மலர்விழி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.மேலும் ஆகஸ்ட் 03 ஆம் தேதி விடுமுறைக்கு பதில் வரும் 11ஆம் தேதி வேலைநாளாகும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தருமபுரி பாலக்கோடு அருகே சென்னம்பட்டியில் குடும்பத் தகராறு காரணமாக, 4 குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தாய் தற்கொலை செய்து கொண்டனர்.இது குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தருமபுரி ஒகேனக்கல்லில் 6-வது நாளாக பரிசல் இயக்கவும், சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 75,000 கன அடியில் இருந்து 80,000 கன அடியாக உயர்ந்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து விநாடிக்கு 80,000 கன அடியாக உள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
காவேரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கலில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவிட்டார் .இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது . ஒகேனக்கல் பகுதியில் வெள்ளம் ஏற்படும் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைவதை தவிர்க்க செயற்கை நீர்வீழ்ச்சி ஏற்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக – அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .
வெள்ள அபாய எச்சரிக்கை தருமபுரியில் உள்ள ஒகேனக்கல், காவிரி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு விடப்பட்டுள்ளது என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார் .மேலும் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார் . இதேபோல் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ளது.மேலும் கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 40,000 கன அடி உபரி நீர் வெளியேறி வருகின்றது.கே.ஆர்.எஸ், கபினி அணைகள் […]
தருமபுரி அருகே அருகே மண் சரிந்து 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே மண் சரிந்து 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மோட்டுபட்டியில் சிவகுமார் என்பவர் நிலத்தில் கிணறு வெட்டும் பணியின் போது இருவரும் மண் சரிந்து உயிரிழந்துள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தருமபுரியில் உள்ள ஒகேனக்கலில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 3 ஆம் நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக பாதுகாப்பு கருதி வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளது.இதனால் ஒகேனக்கலில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 3 ஆம் நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே உள்ள தொப்பையாறு வனப்பகுதியில் நேற்று வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து பெரும்பாலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.அப்போது பிணமாக கிடந்தவரின் முகம் கல்லால் தாக்கி சிதைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கொலை செய்யப்பட்டு கிடந்தவர் ஏரியூர் அருகே உள்ள மலையனூரை சேர்ந்த பச்சமுத்து மகன் இந்திய குடிமகன் […]
சிபிஎம் கட்சியின் மாநில மாநாடானது தூத்துக்குடியில் பிப்ரவரி 17 முதல் 20வரை நடைபெற்றது. இந்நிலையில் மாநாட்டின் இறுதி நாளான 20 ஆம் தேதியன்று முறையான அனுமதி பெற்று செந்தொண்டர் அணிவகுப்பு,பேரணி நடைபெற்றது. அப்போது நடைபெற்ற பேரணியின் போது தூத்துகுடி காவல்துறையின் தாக்குதலை கண்டித்தும், அந்த தாக்குதலுக்கு காரணமான தூத்துக்குடி மாநகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் செல்வன் நாகரத்தினம் பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி தர்மபுரி சிபிஎம் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் டில்லிபாபு […]
பொங்கல் பண்டிகை வருவதை ஒட்டி மாட்டு சந்தை தருமபுரி மாவட்டத்தில் மாட்டு வியாபார சந்தை நடந்தது. இந்த சந்தை அரூர் அருகே உள்ள கொபிநாதம்பட்டி கூட்டு ரோட்டில் வாரசந்தை நடைபெற்றது. இந்த சந்தையில் சுமார் 1500 மாடுகள் விற்பனைக்கு வந்ததாகவும், அவை அனைத்தும் நல்ல விலைக்கு விற்பனையானதாகவும், இந்த சந்தையில் 1 கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் ஆனதாகவும் வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். source : dinasuvadu.com
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.இதனால் அங்கு அண்மையில் பெய்த மழை காரணாமாக ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் புத்தாண்டு தினமான இன்று தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் பரிசல் சவாரி செய்தும் எண்ணெய் மசாஜ் செய்து அருவிகளில் குளித்தும் மகிழ்ந்தனர். அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையை அடுத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். source: dinasuvadu.com
இன்று தருமபுரி பாராளுமன்ற தோகுதிக்குட்பட்ட, தருமபுரி சட்டமன்ற தோகுதியில் உள்ள குமாரசாமிபேட்டை இரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகளை பர்வையிட்டு ஆய்வுசெய்தார் பாமகவின் பாராளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை’ எனத் தெரிவித்துள்ளார்.
தரும்புரி; புலிகரை என்ற ஊரில் கார் லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலி. இதில் சதீஷ் குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தருமபுரி மத்திய கூட்டுறவு வங்கியில் கணிணி உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் இவர் . படுகாயமடைந்த அவரது மனைவி அவசர சிகிச்சைக்காக பெங்களூரு கொண்டு செல்லும்போது உயிரிழந்தார்.
‘ஒகி‘ புயலால் பாதிக்கப்பட்டு கடலில் மாயமான 500-க்கும் மேற்பட்ட மீனவர்களை மீட்க கோரி பா.ம.க. சார்பில் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க. மாநில துணைபொதுச்செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். கட்சியின் தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் டாக்டர் செந்தில், உழவர் பேரியக்க மாநில தலைவர் வேலுச்சாமி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர். மாநில துணைத்தலைவர்கள் சாந்தமூர்த்தி, பாடிசெல்வம், அரசாங்கம், மாவட்ட செயலாளர்கள் சண்முகம், இமயவர்மன், சார்பு அமைப்பு நிர்வாகிகள் பெரியசாமி, வணங்காமுடி உள்ளிட்டோர் […]