விளை நிலத்தில் பள்ளி மாணவன் மலம் கழித்ததை கண்ட உரிமையாளர், சிறுவனிடம் மலத்தை அள்ள கூறி துன்புறுத்தியதற்காக கைது செய்யப்பட்டார். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கூட்டாரம்பள்ளியில் கடந்த ஜூலை 15-ம் தேதி மாலை 5-மணியளவில் 10-ம் வகுப்பு படிக்கும் 14-வயது சிறுவன் ஒருவன் மழை பெய்து கொண்டிருந்த காரணத்தால் அருகிலுள்ள புழுதி நிலம் ஒன்றில் மலம் கழிக்க சென்றுள்ளார். அந்த நேரத்தில் நில உரிமையாளரான ராஜசேகர் சிறுவன் மலம் கழிப்பதை கண்டு கோவமடைந்து கடுமையாக […]
5-8 வகுப்புகளுக்கு நடைபெற இருக்கும் பொதுத்தேர்விற்கு எதிர்ப்பு தலைமை ஆசிரியர் ஒருவர் தன் பெற்ற நல்லாசிரியர் விருதை திருப்பி ஒப்படைக்க முடிவு 5 மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 2019-2020 கல்வியாண்டு முதல் தமிழக அளவில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.இதற்கு பலத்த எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்ட நிலையில் கிராமபுற மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் மேலும் அவர்கள் தங்கள் கல்வியை பாதியிலேயே நிறுத்தும் நிலையை இந்த பொதுத்தேர்வு உருவாக்கும் என்று கூறப்படுகிறது. […]
கனமழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை என மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் அறிவித்தார்.
-மத்திய அரசானது வாகன சட்டம் திருத்தம் கொண்டு வந்த பிறகு, போலிசார் அனேக இடங்களில் வாகனச் சோதனையில் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தற்போது பெரும்பாலானோர் உரிய ஆவணங்களை வைத்து தான் வண்டி ஓட்டிக்கொண்டு செல்கின்றனர். முக்கியமாக ஹெல்மெட் போட்டு தான் வாகன ஓட்டிகள் வண்டி ஓட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று தர்மபுரி மாவட்டத்தில், பென்னாகரம், ஏரியூர் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் காவல் நிலைய அதிகாரிகள் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். […]
தர்மபுரி எம்.பி செந்தில் குமார் தனது ட்விட்டரில் சமீபத்தில் ஒரு பதிவு பதிவிட்டு இருந்தார். அந்த பதவியில் மொரப்பூர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் தெருவிளக்கு பிரச்சனை தொடர்பாக மக்கள் புகார் தெரிவித்தனர்.அதை சரிசெய்து விட்டதாக அவர் அந்த பதிவில் தெரிவித்து இருந்தார். இதில் என்ன இருக்கு Palani @MunusamyPalani எஙகே என்று சொலல்லுங்கள்., நானே நேரில் வந்து சரி செய்து தருகிறேன். இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல. புனிதமான செயல் தான்.???????? pic.twitter.com/6nVi8mjIJm — […]
தென்மேற்கு பருவக்காற்று மழையால் கர்நாடக மாநிலங்களில் பெய்து வந்த தொடர் மழையால் அங்கு உள்ள அனைத்து அணைகளிலும் நீர் நிரம்பியது. இதனால் காவிரி உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதனால் பரிசல் இயக்கவும் , சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது நீர் வரத்து குறைந்து இருப்பதால் 17 நாட்களுக்குப் பிறகு ஒகேனக்கல் மீன் மார்க்கெட் மற்றும் கோத்திக்கல் வரை பரிசில் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கொல்லக்கொட்டாய் பகுதியை சேர்ந்த வெங்கடாசலத்திற்கும், அவரின் தம்பி நரசிம்மனுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து உள்ளது.இதில் கோபத்தில் இருந்த வெங்கடாசலம் குமாரசாமிபேட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த தம்பி நரசிம்மனை வழிமறித்து சொத்து பற்றி பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.ஆத்திரம் அடைந்த வெங்கடாசலம் மறைத்து வைத்திருந்த கத்தியால் நரசிம்மனை குத்தினார்.தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், நரசிம்மன் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நரசிம்மனுக்கு […]
தமிழகத்தில் கட்டாயம் வாகனம் ஓட்டுபவர் தலைக்கவசம் அணிய வேண்டும் என உயர்நீதி மன்றம் உத்தரவு விட்டது.இதை தொடர்ந்து மக்களிடம் இதை கொண்டு சேர்க்கும் வகையில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நடத்தி வருகின்றனர்.மேலும் காவல்துறை சார்பில் பள்ளி , கல்லூரி மாணவர்களை வைத்து விழிப்புணர்வு பேரணி நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் வாகனம் ஓட்டுபவர் தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்காமல் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கி காவல் துறை எச்சரித்து அனுப்பினார்.தற்போது ஒரு புதிய முயற்சியை […]
தமிழகத்தில் தேர்தல் களம் பரபரப்பாகவே இருக்கிறது. நேற்று கோயம்புத்தூரில் இருந்து, பயன்படுத்தப்படாத வாக்கு பெட்டிகள் தேனிக்கு மாற்றப்பட்டன. இந்த மாற்றம் வழக்கமான ஒன்றுதான். ஒரு வேளை மறு வாக்குப்பதிவு நடைபெற்றால் தேவைபடும் என்பதால், இந்த மற்றம் என தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். இதனால், எதிர்க்கட்சியினர் பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். நேர்மையாக தேர்தல் நடத்த தேர்தல் அதிகாரிகள் தடுமாறுகின்றனர் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டில் […]
மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், பாமக கட்சியின் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தருமபுரி திண்டிவனம் வாக்குச்சாவடியில், தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொன்னகரம் பகுதிக்கு அடுத்துள்ளது வட்டுவனக்கல்லி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட மலைக்கிராமங்களில் சாலைவசதி எதுவும் இல்லை. இந்த பகுதியில் மூன்று மலைக்கிராமங்கள் உள்ளது. இந்நிலையில், இந்த மூன்று மலை கிராமங்களிலும் 672 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக கோட்டூர் மலை, ஏரி மலை உள்ளிட்ட பகுதிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த பகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கழுதையின் உதவியோடு கொண்டு செல்லப்படுகிறது.
அதிமுக-வின் கூட்டணி கட்சியான பாமக சார்பில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் வேட்பாளர் அன்புமணி போட்டியிடுகிறார். ஸ்டாலின் கனவுக்கு முதல் அடி தருமபுரி மக்களவை மற்றும் இடைத் தேர்தல் தொகுதிகளில் விழப்போகிறது என்று அன்புமணி தெரிவித்துள்ளார். அதிமுக-வின் கூட்டணி கட்சியான பாமக சார்பில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் வேட்பாளர் அன்புமணி போட்டியிடுகிறார். திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நேற்று தருமபுரி அதிமுக அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமை […]
புட்டிரெட்டிப்பட்டியில் உள்ள ரயில் நிலயத்தை கடந்து செல்ல மேம்பாலம் வேண்டுமென்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் உள்ளது பாப்பிரெட்டிப்பட்டி. இங்கே இருக்கும் புட்டிரெட்டிப்பட்டியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ரயில் நிலையம் செயல்பட்டு வருகின்றது.இந்த ரயில் நிலையம் வழியாக பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. இந்நிலையில் அந்த ரெயில் வழித்தடத்தில் ஒரு சில நேரங்களில் நீண்ட நேரம் ரயில்கள் தொடர்ந்து நிற்பதால் பொதுமக்கள் பாதையை கடந்து செல்ல மிகப்பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.காலை நேரங்களில் மட்டும் பள்ளி, கல்லூரி, அலுவலகத்திற்கு […]
தருமபுரியில் நடைபெற்ற மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர். மாநில அளவிலான இண்டோர் ஆர்சாரி கோப்பைக்கான வில்வித்தை போட்டி தருமபுரியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் சேலம், நாமக்கல், தருமபுரி கோவை, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மூன்று பிரிவுகளாக நடந்த வில்வித்தை போட்டியில் 10, 12 மற்றும் 14 வயதுக்குட்பட்ட வீரர்கள் […]
அரசு மேல்நிலைப்பள்ளியை மது அருந்தும் கூடாரமாக குடிகாரர்கள் பயன்படுத்தி வருவதாகப் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் சோமனஅள்ளியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளி அருகே மதுக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது இதனால் குடி பிரியர்கள் பள்ளி வளாகத்தை மது அருந்தும் கூடாரமாக மாற்றி அதனை பயன்படுத்தி வருவதாக பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள் அச்சதுடன் , ஆத்திரத்துடனும் குற்றஞ்சாட்டியுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு வட்டத்திற்குட்பட்ட சோமனஅள்ளியில் இந்த அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இருநூறு மீட்டர் தொலைவில் […]
3 கல்லூரி மாணவிகள் பலியான தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை முன்கூட்டியே விடுவிக்கக் கோரி அரசு அனுப்பிய மனுவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திருப்பியனுப்பினார். 2000 ஆம் ஆண்டில் பிப்ரவரி 2 ஆம் தேதி, கோவையைச் சேர்ந்த தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் சுற்றுலா சென்ற பேருந்துக்கு தீ வைக்கப்பட்டதில் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் உயிரோடு தீயில் கருகி இறந்தனர். இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் […]
புதிதாக போட்ட தார்சாலை, ஒரே நாளில் ஜல்லி ஜல்லியாக பெயர்ந்து சேதமானதால் கிராம மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட அச்சம் பட்டியிலிருந்து தண்டா வரை மூன்று கிலோ மீட்டர் சாலை 27 லட்சம் மதிப்பீட்டில் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது . டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் தார் சாலையை 20 mm க்கு பதிலாக தரமற்ற முறையில் நேற்று 10mm சாலை மட்டும் அமைத்துள்ளார். புதியதாக அமைக்கப்பட்ட தார்சாலை ஒரே நாளில் […]
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியுள்ளது.இதனால் மக்கள் மழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் குமரி, நாகை, தர்மபுரி மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ள நிலையில், சேலத்தில் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.இந்நிலையில் சேலத்தில் வெயில் வாட்டிய நிலையில் இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிக்கு ஆளாகினர். மேலும் தர்மபுரிமாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் நேற்றுமாலை கனமழை பெய்தது. சுமரர் ஒருமணி நேரம் […]
தருமபுரி அருகே ஆரூரில் தகுதியில்லாதவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கியதாக வட்டாட்சியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் பாப்பிரெட்டிபட்டி வட்டாட்சியர் சித்ராவை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் மலர்விழி உத்தரவு பிறப்பித்துள்ளார். DINASUVADU
அமைச்சர் கே.பி.அன்பழகன் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே வனப்பகுதியில் வசித்து வந்த 29 குடும்பங்களை சார்ந்த 102 பயனாளிகளுக்கு ரூ 64.69 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.