பேருந்துடன் 3 மாணவிகளை எரித்த குற்றவாளிகளை விடுவிக்கக் வேண்டும்..ஆளுநர் நிராகரிப்பு…!!
3 கல்லூரி மாணவிகள் பலியான தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை முன்கூட்டியே விடுவிக்கக் கோரி அரசு அனுப்பிய மனுவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திருப்பியனுப்பினார்.
2000 ஆம் ஆண்டில் பிப்ரவரி 2 ஆம் தேதி, கோவையைச் சேர்ந்த தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் சுற்றுலா சென்ற பேருந்துக்கு தீ வைக்கப்பட்டதில் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் உயிரோடு தீயில் கருகி இறந்தனர்.
இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில், குற்றவாளிகள் யாரும் உள்நோக்கத்தோடு குற்றச்செயலில் ஈடுபடவில்லை என்று கூறி, அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் ஆளுநருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.அரசு அனுப்பிய மனுவை ஆளுநர் திருப்பியனுப்பியதாக, தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
dinasuvadu.com