தருமபுரி ஆட்சியரிடம் குடும்பத்துடன் சென்று வீட்டிற்கு ஹெலிகாப்டரில் சென்று வர அனுமதி வழங்க வேண்டும் என மனு. தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த கணேசன் (57) என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்துடன் சென்று வித்தியாசமான மனு ஒன்று அளித்துள்ளார். அதில் தான் குடியிருந்து வரும் வீட்டிற்கு ஹெலிகாப்டரில் சென்று வர அனுமதி வழங்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். தங்களுக்கு நடந்து செல்ல வழி விடாமல் வீட்டின் நான்கு புறமும் அக்கம் பக்கத்தினர் சுற்றுச்சுவர் எழுப்பியதால் கடந்த நான்கு […]
தருமபுரி சந்தைப்பேட்டை அருகேஇரண்டாவது மாடியில் இருந்து இரும்பு பீரோவை இறக்கியபோது மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு. தருமபுரி சந்தைப்பேட்டை அருகே இலியாஸ் என்பவர் வாடகை வீட்டில் குடியிருந்த நிலையில், தனது வீட்டை காலி செய்வதற்காக இரண்டாவது மாடியில் இருந்து இரும்பு பீரோவை இறக்கியபோது பீரோவில் மின்கம்பில் உரசியதால் மின்சாரம் தாக்கி உள்ளது. மின்சாரம் தாக்கியதில், பச்சையப்பன், இலியாஸ், கோபி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மின்சாரம் தாக்கிய படுகாயம் அடைந்த குமார் என்பவர் தர்மபுரி அரசு […]
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று வரை விநாடிக்கு 6,000 கனஅடி நீர்வரத்து இருந்த நிலையில்,அங்குள்ள அருவியில் குளிப்பதற்காக வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.அதன்படி,எண்ணெய் மசாஜ் செய்து ஒகேனக்கல் அருவி மற்றும் ஆற்றில் பலர் குளித்து மகிழ்ந்தனர்.மேலும்,சுற்றுலாப் பயணிகள் பலர் பரிசலில் பயணித்து காவிரி ஆற்றின் பல்வேறு பகுதிகளையும் கண்டு ரசித்தனர். குறிப்பாக,பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் ஒகேனக்கல் பகுதிக்கு வருகின்ற பயணிகளின் எண்ணிக்கை வழக்கமான நாட்களை விட அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,நீர் […]
தர்மபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் மூலம் வேலைவாய்ப்புமுகாம் நடைபெறவுள்ளது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) DDU-GKY திட்டத்தின் கீழ் நடத்தும் வேலையற்ற ஆண், பெண் இருபாலருக்கும் (இளைஞர்களுக்கு) பல்வேறு தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள […]
தருமபுரி:முத்தம்பட்டி அருகே நடுவழியில் கன்னூர் – யஷ்வந்த்பூர் பயணிகள் ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு. வடகிழக்கு பருவ மழையினால் கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால்,பல பகுதிகளில் மழைநீர் வெள்ளம் தேங்கியுள்ளது. இந்த நிலையில்,கேரளா மாநிலம் கண்ணூரில் இருந்து கர்நாடகா மாநிலம் யஷ்வந்த்பூருக்கு இன்று அதிகாலையில் பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது.இந்த ரயில் தருமபுரி முத்தம்பட்டி அருகே வந்தபோது நடுவழியில் அங்கு மண்சரிவினால் தண்டவாளத்தில் விழுந்த பாறைகள் மீது மோதியது.இதனால்,கண்ணூர் […]
தர்மபுரியில் மாற்றுத்திறனாளி ஒருவரின் வீட்டிற்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ள மருத்துவ குழுவினர். தருமபுரி மாவட்டம் அரூரில் வசிக்கும் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் மதிவாணன். மாற்றுத்திறனாளியான இவர் பாட்சாபேட்டையில் வசிக்கிறார். இவருக்கு தடுப்பூசி போடும் முகாமிற்கு செல்வதில் சிரமங்கள் இருப்பதாக அந்த ஊர் மருத்துவ அதிகாரியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தனது இயலாமையை தெரிவித்த மதிவாணனின் அழைப்பை ஏற்று, அரூர் பகுதியின் மருத்துவ அலுவலர் தொல்காப்பியன் தலைமையிலான மருத்துவ குழு ஒன்று அவரது வீட்டிற்கே சென்று […]
தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய வேளாண்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள் திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக வர முடியாது எனக் கூறியுள்ளார். அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் பொது கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக உயர் கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார். அப்போது பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு ஒகேனக்கல் […]
தர்மபுரியில் பிரச்சாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் ஊழலற்ற தமிழகத்தை இளைஞர்களால் தான் உருவாக்க முடியும் என கூறி உள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், ஆளும் கட்சி எதிர்க்கட்சி மற்றும் பிற கட்சிகளும் தங்களுக்கான வாக்குகளை தற்பொழுது முதலே சேகரிக்க துவங்கிவிட்டனர். பல இடங்களில் அந்தந்த கட்சியின் தொண்டர்களும் தலைவர்களும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்களும் ஒவ்வொரு மாவட்டமாக […]
தர்மபுரியில் 50 அடி ஆழ தண்ணீர் இல்லாத கிணற்றில் யானை ஒன்று தவறி விழுந்துள்ளது. தருமபுரி மாவட்டம் ஏலக்குண்டூர் அருகேயுள்ள பஞ்சப்பள்ளி காப்புக்காடு பகுதியில் அமைந்திருந்த விவசாய கிணற்றில் காட்டு யானை ஒன்று தவறி விழுந்துள்ளது . 7 வயது மதிக்கத்தக்க அந்த காட்டு யானை இரையை தேடி சென்ற போது தண்ணீர் இல்லாத 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்துள்ளது . அதனையடுத்து யானையின் சத்தத்தை கேட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . தற்போது […]
மனைவி சண்டையிட்டு அம்மா வீடு செல்ல, 10 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது. கணவன் மனைவி என்றால் இருவருக்குள்ளும் சில சமயங்களில் புரிந்துணர்வு இல்லாததால் அல்லது கருத்து வேறுபாடு ஏற்படுவதன் காரணமாக சண்டைகள் வருவது வழக்கம். இதற்காக அடிக்கடி கணவரை விட்டு செல்வது தான் கணவர் வழி மாறுவதற்கும் பல இடங்களில் காரணமாக அமைகிறது. அதுபோல தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் சேர்ந்த பள்ளி ஊராட்சிக் கோட்டை கிராமத்தில் வசித்து வரக்கூடிய […]
வருகின்ற அக்.15 முதல் ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிப்பு. கொரோனா ஊரடங்கால் கடந்த சில மாதங்களாக சுற்றுலாத் தளங்கள் அனைத்துமே மூடப்பட்ட நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றில் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் நேற்று மாவட்ட கலெக்டர் மலர்விழி அவர்கள் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். பிரதான அருவி மற்றும் நடைபாதை அதிக நீர்வரத்து காரணமாக சேதமடைந்து இருப்பதைக் கண்ட அவர் ஒரு வாரத்திற்குள் இவற்றை […]
ஒகேனக்கல் காவிரியாற்றில் வினாடிக்கு 70 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. கேரளா கர்நாடகா ஆகிய மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே கடந்த மாதத்தில் பெய்த கனமழையால் கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகள் முழுமையாக நிரம்பி இருந்தன. அப்பொழுது முதல் உபரிநீர் திறந்து விடப்பட்டு தமிழகத்தை நோக்கி காவிரி ஆற்றில் இன்று வரையிலும் பாய்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் வறுமையால் பூவிற்ற பள்ளிக்குழந்தைகளுக்காக 1லட்சம் நிதி திரட்டி கொடுத்துள்ள திமுக எம்பிக்கு குவியும் பாராட்டுக்கள். கோயம்புத்தூர் மாவட்டத்தில் மருதமலை சாலையில் சபீர் என்பவர் தனது மகன் மற்றும் மகளுடன் இணைந்து தனது பூ விற்கும் தொழிலை நடத்தி வந்துள்ளார். இவர் பூவை எடுத்துக் கொடுக்க குழந்தைகள் சாலையோரம் செல்லும் வாகன ஓட்டிகளிடம் சென்று பூக்களை விற்று வருகின்றனர். இந்நிலையில் குழந்தைகளுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடந்தாலும் எப்படி கல்விக் கட்டணம் செலுத்துவது என வழி தெரியாமல், […]