கடலூரில் தவறான அறுவை சிகிச்சை.? கர்ப்பபையை குடலுடன் சேர்த்து தைத்த அவலம்.. குடும்பத்தினர் போராட்டம்.!

கடலூர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக மனைவி பாதிக்கப்பட்டதாக கணவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மனைவி பத்மாவதிக்கு கடந்த 2022 செப்டம்பரில், கடலூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுக்கப்பட்டதால் அதன் பிறகு வயிறு வலி காரணமாக அடிக்கடி மருத்துவமனை சென்று வந்துள்ளார்.
அதன்பிறகு, கடலூர் ஜிப்மர் மருத்துவனையில் பரிசோதனை செய்த போது பிரசவ அறுவை சிகிச்சையின் போது கருப்பபையுடன் குடலையும் சேர்த்து தைத்தது தெரியவந்தது. இதனை அடுத்து கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் வெங்கடேசன் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து மருத்துவ அறிக்கை வேண்டும் என அரசு மருத்துவர்களிடம் ஆட்சியர் கேட்டுள்ளார்.
ஆனால், தற்போது வரையில் அரசு மருத்துவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்றும், இதுகுறித்து ஆட்சியரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி, இன்று கடலூர் அரசு மருத்துவமனைக்கு குடும்பத்துடன் வந்த வெங்கடேசன் கூட்டாக தீக்குளிக்க முயன்றார். மேலும் நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்கள் உடல் உறுப்புகளை தனமாக எடுத்துக்கொள்ளுங்கள் என உருக்கமாக கூறினார். உடனே அங்கிருந்த போலீசார் இந்த சம்பவத்தை தடுத்தி நிறுத்தி வெங்கேசன் குடும்பத்தாரிடம் பேசுவரத்தை நடத்தி இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025
ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!
February 24, 2025
NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..
February 24, 2025
தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?
February 24, 2025
தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?
February 24, 2025