கடலூர் புதுப்பாளையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக கூடிய டிடிஎப் வாசனின் ரசிகர்களை போலீசார் விரட்டியடித்து கலைத்துள்ளனர். யூடியூபில் விதமான பைக்குளில் வெவ்வேறு இடங்களுக்கு சென்று வீடியோ பதிவிட்டு இளைஞர்கள் மத்தியில் குறிப்பாக 2K கிட்ஸ்கள் மத்தியில் மிக பிரபலமான யு-டியூர் டிடிஎஃப் வாசன். இவர் இன்று கடலூர் புதுப்பாளையம் அருகே வந்துள்ளார். இவரை காணுவதற்காக அப்பகுதியில் உள்ள இவரது ரசிகர்கள் குவிந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் வந்து போக்குவரத்தை சரிசெய்யும் […]
கடலூரில் தரைக்காற்று வீசும் வேகம் அதிகரித்துள்ளது. அங்கு கடலோர பகுதிகளில் மணிக்கு சுமார் 60கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருகிறது. சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கே 270 கி.மீ தொலையில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. காரைக்காலில் இருந்து கிழக்கு தென்கிழக்கே 200 கி.மீ தொலையில் புயல் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 13 கி.மீ வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் அடுத்த 3 மணி நேரத்தில் சாதாரண […]
கடலூர் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து நிவாரணம் வழங்கிய முதலமைச்சர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு அதி கனமழை கொட்டி தீர்த்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவாக 44 செ.மீ மழை ஒரே நாளில் பதிவானது. கனமழையால், விலை நிலங்கள் […]
கடலூர், டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. வடகிழக்கு பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தாலும், தமிழகத்தில் மிக கனமழை தொடரும் என்றும் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று சென்னை உள்பட 17 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, தேனி, சிவகங்கை, பெரம்பலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, […]
கடலூர், விருத்தாசலத்தில் நிழற்குடை அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கி இருந்த நீரில் வினோத் என்ற சிறுவன் விழுந்து உயிரிழப்பு. கடலூர், விருத்தாசலத்தில் நிழற்குடை அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் நீர் தேங்கி இருந்துள்ளது. இந்த நிலையில், அந்த பள்ளத்தில் தேங்கி இருந்த நீரில் 11 வயது சிறுவன் வினோத் என்பவர் விழுந்த நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சிறுவன் வினோத், விஜய மாநகரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜெயமூர்த்தி என்பவரின் மகன். வினோத் உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரணை […]
சிறை அலுவலர் வீட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்த விவகாரத்தில் இருவர் கைது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, கடலூர் மத்திய சிறை அருகே உள்ள உதவி ஜெயிலர் வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து, அவரது குடும்பத்தினரை உயிருடன் எரித்து கொல்ல மர்ம நபர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். உதவி ஜெயிலர் மணிகண்டன் குடியிருக்கும் காவலர் குடியிருப்புக்கு வந்த மர்ம நபர்கள் சிலர், அவர் வீட்டின் சமையல் அறையின் ஜன்னல் வழியாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். அறை […]
கபடி போட்டியின்போது உயிரிழந்த வீரர் சஞ்சய் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர். கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கபடி விளையாட்டு போட்டியில் பங்கேற்று உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், வல்லம் மதுரா மானடிகுப்பம் கிராமம், தெற்கு தெருவில் உள்ள புளியந்தோப்பு மைதானத்தில் கடந்த 24 அன்று மாவட்ட அளவில் கபடி போட்டி நடைபெற்றுள்ளது. இந்த கபடிப் போட்டியில் பங்கேற்ற […]
தமிழகத்தில் 3வது மாணவி தற்கொலை, விருத்தாசலத்தில் 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை. கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி உயிரிழப்பு விவகாரத்தின் அதிர்வலைகள் முடிவதற்குள்ளாகவே தொடர்ந்து இரு மாணவிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளது தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பை தொடர்ந்து நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அருகே கீழச்சேரியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் பிளஸ் 2 பயிலும் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இது மேலும் பெரும் […]
கடலூர் எம்.புதூரில் நடந்த வெடி விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு. கடலூர் மாவட்டம் எம்.புதூரில் வாண வெடிக்கை பட்டாசு தயாரிக்கும் ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில், வெடிகள் வெடித்து சிதறி 3 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் தீயணைப்புத்துறையினர் சம்பா இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோயிலான சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் நிர்வகித்து வரும் நிலையில்,சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இதனால்,சிதம்பரம் நடராஜர் கோயிலில் வரவு செலவு கணக்கு உள்ளிட்ட முக்கிய விவரங்களை ஆய்வு செய்வதற்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஆனால்,இதற்கு தீட்சிதர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனையடுத்து,சிதம்பரம் நடராஜர் கோயிலில் அறநிலையத்துறைத் குழுவால் ஆய்வு நடத்தப்பட இருந்த நிலையில்,தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.அதன்பின்னர்,சட்டப்படி உறுதியாக ஆய்வு […]
கந்துவட்டி பிரச்சனையால் ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், கந்துவட்டி அனிதா கைது. கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியை செல்வகுமார். இவர் கடந்த 1-ஆம் தேதி கந்துவட்டி பிரச்னை காரணமாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து இவர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், செல்வகுமார் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவலர் செல்வகுமாருக்குரூ.5 லட்சம் வழங்கிய நிலையில்,ரூ.12 லட்சம் கேட்டு மிரட்டியதால் தற்கொலை செய்து […]
சிதம்பரம் நடராஜர் கோயில் வரவு, செலவு கணக்கு விவரங்களை அறநிலையத்துறையின் விசாரணை குழுவிடம் தர தீட்சிதர்கள் எதிர்ப்பு. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் வரவு செலவு கணக்கு விவரங்களை அறநிலையத்துறையின் விசாரணை குழுவிடம் தர தீட்சிதர்கள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. தீட்சிதர்கள் கோயில் கணக்கு விவரங்களை தர மறுத்ததால் அறநிலையத்துறையின் விசாரணை குழுவினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ள நடராஜர் கோயிலில் வரவு செலவு கணக்குகள் தொடர்பாக ஆய்வு நடத்த அறநிலையத்துறையின் விசாரணை குழு […]
கடலூர் மாவட்டம் கீழ்அருங்குனத்தில் உள்ள கெடிலம் ஆற்றில் குளிக்க சென்ற சிறுமிகள் உட்பட 7 பேரும் நீரில் மூழ்கியுள்ளனர்.இதனைத் தொடர்ந்து,7 பேரும் மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து,அவர்களின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக கூறப்பட்டது.இதனால் அவர்களது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து 7 போரையும் காப்பாற்ற முடியுமா? முடியாதா?என்று கண்ணீர் விட்டு அழுது வருகின்றனர். இந்நிலையில்,சிகிச்சை பலனின்றி நீரில் மூழ்கிய இரண்டு சிறுமிகள் மற்றும் 5 பெண்கள் உட்பட 7 பேர் […]
கடலூர் அரசுப்பள்ளி ஆசிரியர் கார்த்திக் ராஜாவுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு பாராட்டு தெரிவித்து கடிதம். கடலூர் அரசுப்பள்ளி ஆசிரியர் கார்த்திக் ராஜா கல்வி ரேடியோ இணையதளம் மூலம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் – கற்பித்தல் பயிற்சி வழங்கிவருவதற்கு பாராட்டு தெரிவித்து தலைமைச் செயலாளர் இறையன்பு பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘இக்கட்டான கொரோனா தொற்று நோய் காலத்தில் கல்வி கற்கக்கூடிய சூழ்நிலையில் இல்லாத மாணவ, மாணவிகளுக்கு கடலூர் மாவட்டம் புவனகிரி ஒன்றிய ஆசிரியர் திரு […]
கடலூரில் கணவர் வீட்டில் கழிவறை இல்லாததால் தற்கொலை செய்து கொண்ட புதுமணப்பெண். கடலூரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரும், அரிசி பெரியாங்குப்பத்தை சேர்ந்த ரம்யா என்பவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இரு வீட்டார் ஒப்புதலுடன் கடந்த மாதம் ஆறாம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் திருமணத்திற்கு பின் கணவர் வீட்டிற்கு சென்ற ரம்யாவுக்கு அங்கு கழிவறை இல்லாதது குறையாக இருந்த நிலையில், கழிவறை இருக்கும் வீட்டை ரம்யா தனது கணவரிடம் அறிவுறுத்தி பார்க்குமாறு […]