“குப்பை அள்ளுற உனக்கு அவ்வளவு எகத்தாளமாடான்னு செருப்பால் அடிச்சார் அந்த பையன்..! – கோவை துப்புரவு பணியாளருக்கு நேர்ந்த சோகம்…

Default Image

கோவை மாநகராட்சியில், 14 வருடங்களாக குப்பை லாரி டிரைவராகப் பணிபுரிபவர் மணி. நாற்பதுகளை கடந்த வயதுக்காரர். `சென்ற வாரம் குப்பை அள்ளும் இடத்தில், ஒரு பெண்ணுக்கு `லாரியில் அமர்ந்தவாரே பதில் சொன்னார்’ என்ற காரணத்துக்காக..
மணியை செருப்பால் அடுத்திருக்கிறார் அந்தப் பெண்ணின் மகன்’ என்ற தகவலைக் கேட்கவே நெஞ்சம் பதைபதைக்கிறது. `மணியை சாதிப் பெயரைச் சொல்லி செருப்பால் அடித்து இழிவுப்படுத்தியவரை, கைதுசெய்ய வேண்டும்’ என்று மணியும் அவரோடு பணிபுரியும் சக துப்புரவுப் பணியாளர்களும் சேர்ந்து வழக்கு பதிந்துள்ளனர்

நடந்தது என்ன? மணியிடம் பேசினோம்…
“1-ம் தேதி காலையில ஜீவா நகர் டீச்சர்ஸ் காலனியில குப்பை அள்ளிக்கிட்டிருந்தோம். என்னோடு சேர்ந்து மொத்தம் எட்டுத் துப்புரவுப் பணியாளர்கள் அங்கே இருந்தாங்க. நான் லாரிக்குள்ள உட்கார்ந்திருந்தேன். மத்த எல்லாரும் குப்பை அள்ளிக்கிட்டிருந்தாங்க.

அப்போ விறுவிறுனு லாரியை நோக்கி வந்த ஒரு லேடி, `இங்கெல்லாம் குப்பையைக் கொட்டாதீங்கனு எத்தனைமுறை சொன்னாலும், நீங்க கேட்க மாட்டீங்களா?’னு என்கிட்ட சத்தம்போட்டாங்க. எனக்கு ஒண்ணுமே புரியலை. `நாங்க இங்கே குப்பை போடுறதுக்கு வரலம்மா…

நீங்களெல்லாம் போடும் குப்பைகளை அள்ளிக்கிட்டுப் போறதுக்கு வந்திருக்கோம்’னு சொன்னேன். அந்த ஏரியாவோட குப்பைகளை எல்லாம் அந்த அம்மா வீட்டுக்குப் பக்கத்துல உள்ள காலி இடத்துல ஒண்ணுசேர்க்கவே கூடாதுனுதான் அவங்க பஞ்சாயத்துப் பண்றாங்கனு எனக்குக் கொஞ்சம் லேட்டாதான் புரிஞ்சது.

இப்படி பிரச்னை பண்ணினா,ன எங்களால எந்த இடத்துலயுமே குப்பைகளை ஒண்ணுசேர்த்து அள்ள முடியாதும்மா’னு அவங்ககிட்ட சொன்னேன். அப்போது வந்த அம்மாவோட மகன் என்ன நினைச்சாரோ தெரியலை, `குப்பை அள்ளுற உனக்கு அவ்வளவு எகத்தாளமாடா? எறங்கி வந்து பேச மாட்டியா?’னு சாதிப்பேரைச் சொல்லி கேவலமா பேசினார்.

எனக்கு ஆத்திரம் பொத்துக்கிட்டு வந்திருச்சு. `எதுக்கு இப்ப சாதியை இழுத்துப் பேசுறீங்க?’னு இறங்கி வந்து கேட்டேன். அதுக்கு, `குப்பை அள்ளி வயித்தைக் கழுவுற உனக்கு இவ்வளவு திமிரு ***** ஆ!’னு சொல்ல முடியாத வார்த்தைகளால ரொம்ப கேவலமா திட்டினார். நானும் பதிலுக்கு நாலு வார்த்தை பேசினேன்.

மறுபடியும் சாதிப் பெயரைச் சொல்லி `என்னையே எதிர்த்துப் பேசுறியா?’னு செருப்பைக் கழட்டி படார்னு அடிச்சுப்புட்டார். நான் அதை கொஞ்சம்கூட எதிர்பார்க்கலை. அந்த நிமிஷமே நான் செத்துப்போயிட்டேன். இப்போ இருக்கிறது வெறும்கூடுதான். நாங்களெல்லாம் சொரணையே இல்லாம வாழணும்னு எங்களை படைச்சிருக்கானா

அந்த ஆண்டவன்? சொல்லுங்க சார்!” என்று கோபம் பொங்க கேட்ட மணி, “அந்த ஆளை அரெஸ்ட் பண்ணணும் சார். நாங்க என்ன நாதியத்தவங்களா? நாங்களும் மனுஷங்கதான் சார்!” ஆற்றாமையில் மீண்டும் பொங்குகிறது மணியின் கண்கள்.

“நீ எதுக்கும் கவலைப்படாதண்ணே… நாங்க இருக்கோம் உனக்கு. மனசை தளரவிட்ராதண்ணே!” என்று மணிக்கு ஆறுதல் சொல்லிய சக துப்புரவுப் பணியாளரான மஞ்சுளா, தனது ஆத்திரத்தைக் கொட்ட ஆரம்பித்தார், “என்ன பாவம் செஞ்சோமோ… எங்களுக்கு இப்படி ஒரு ஈனப்பொறப்பு. பொறந்துட்டோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Live Coverage 1
sarathkumar
Thirukarthigai (1)
ipl 2025 yuvraj singh
rahul gandhi helicopter
appam (1) (1) (1)
amaran ott release date