கோவையில் தொடர்ந்து 3வது ஆண்டாக நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். கோவையில் செட்டிப்பாளையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த நிலையில் இந்த வருடம் 3வது ஆண்டாக நடைபெறும் ஜல்லிக்கட்டில் காளைகளுக்கும் காளையர்களுக்கும் இடையேயான மல்லுக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகம் மற்றும் ஜல்லிக்கட்டு சங்கம் இணைந்து நடத்தும் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். இப்போட்டியில் முதல் காளையாக கோவை சரவணம்பட்டி கரிவரதராஜ பெருமாள் கோயில் காளை வாடி […]
கோவை ஈஷா யோகா மையத்தில் 26-ம் ஆண்டு சிவராத்திரி விழா பிரமாண்டமாகவும், வெகு விமர்சியாகவும் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு கலந்துகொண்டார். கோவை ஈஷா யோகா மையத்தில் 26-ம் ஆண்டு சிவராத்திரி விழா மிக பிரமாண்டமாகவும் நடைபெற்றது. இதில் மாண்புமிகு குடியரசு துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர். இந்த நிலையில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் […]
கோவையில் அடிப்படை வசதிகள் செய்து தராத கோவை மாநகராட்சியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக எம்எல்ஏ உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். கோவை மாநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 74 வட்டம் கலைஞர் நகரில் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் அருகே பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளை பூர்த்தி செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எம்எல்ஏ நா.கார்த்திக் தலைமையிலும், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முமச.முருகன், […]
ஈஷாவில் பிப்ரவரி 21-ம் தேதி மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டம் ருத்ராட்சமும், சர்ப்ப சூத்திரமும் பிரசாதமாக வழங்கப்படும் கோவையில் உள்ள ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா பிப்ரவரி 21-ம் தேதி மிக பிரமாண்டமாகவும் விமர்சையாகயும் கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு ஆதியோகி ஒரு வருடமாக அணிந்திருந்த ருத்ராட்சமும், சர்ப்ப சூத்திரமும் பிரசாதமாக வழங்கப்படும். “சிவனின் அருள் நிறைந்த இரவு” என்று வழங்கப்படும் மஹாசிவராத்திரி இரவு, நம் இந்திய ஆன்மீகக் கலாச்சாரத்தில் மிக மிக முக்கியமான ஒரு விழாவாக இருந்து […]
வெள்ளியங்கிரிமலையில் அமைந்துள்ள சுயம்பு சிவலிங்கத்தை தரிசனம் செயவதற்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. கோவை மாவத்தின் மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் பூண்டி கோயிலை ஒட்டியுள்ள மலைத் தொடரில் 7வது மலையில் சுயம்புசிவலிங்கமாக காட்சித்தரக்கூடிய வைகையில் சிவலிங்கம் அமைந்துள்ளது. இக்கோவில் ஆனது வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆண்டுதோறும் சுயம்பு லிங்கத்தை தரிசிக்க சிவராத்திரி மற்றும் சித்ரா பௌா்ணமி உள்ளிட்ட காலங்களில் பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் பிப்ரவரி முதல் மே மாதம் வரை 4 […]
குடிபோதையில் அடித்துக்கொண்ட இரண்டு குடிகாரார்களில் ஒருவர் மற்றொருவரது விரலை கடித்து துப்பி மிக மூர்க்கமாய் சண்டையிட்ட காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தை அடுத்த புலியகுளம் பகுதியில் இரு தினங்களுக்கு முன் நடந்துள்ளது இந்தச் சம்பவம் இது தொடர்பான காட்சிகள் எல்லாம் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் குடிபோதையில் அடித்துக்கொண்ட இரண்டு குடிகாரார்கள் இருவர் மிக நீண்ட நேரமாக சண்டையிட்டுக் கொண்டே உள்ளனர். சண்டை அதிகமாகவே […]
காதலி தன்னை விட்டு விலகுவதை உணர்ந்த காதலன் செய்த செயல். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் காதலனை கைது செய்துள்ளனர். கோவையில் உள்ள சிங்கா நல்லூர் பகுதியை சேர்ந்தவர் ரூபன் ஆவார்.இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.இந்நிலையில் அந்த பெண் ரூபனின் நடவடிக்கை பிடிக்காமல் அவரை விட்டு விளகியுள்ளார். இந்நிலையில் காதலி தன்னை விட்டு விலகுவதை ஏற்கமறுக்காத ரூபன் அவரை பழிவாங்க திட்டமிட்டுள்ளார்.இதன் காரணமாக காதலி […]
பண்ணை வீட்டில் பரவசமான உல்லாசத்தை அனுபவித்த தொழில் அதிபர்.மறைந்திருந்து வீடியோ எடுத்த மர்ம கும்பல். காத்திருந்து குற்றவாளிகளை வளைத்து பிடித்த காவல்துறையினர். கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபல துணிக்கடை உரிமையாளர் வினோத்குமார் ஆவார்.இவருக்கும் திருப்பூரை சேர்ந்த நடன அழகி சுதா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருவரும் உல்லாசமாக இருக்க முடிவு செய்துள்ளனர்.இதன் காரணமாக கடந்த டிசம்பர் 31-ம் தேதி வினோத்குமாரும் நடன அழகி சுதாவும் ஆனைமலை அருகே உள்ள பூவலப்பருதி பகுதியில் உள்ள பண்ணை […]
கோயம்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவருக்கு அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் வயிற்றில் மருத்துவர் கோகுல் கிருபா தலைமையில் அறுவை சிகிச்சையில் வயிற்றில் அரை கிலோ எடையில் தலை முடியும், ஷாம்பு பாக்கெட் உள்ளிட்ட சில பொருட்களும் இருப்பது தெரியவந்தது. கோயம்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவருக்கு அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு […]
கோவை மாவட்டத்தில் மீனாட்சி கார்டன் குடியிருப்பு பகுதியில் சமீபகாலமாக யாரோ ஒருவர் பெண்களின் உள்ளாடைகள், செருப்புகள் உட்பட திருடி ஆளில்லா இடத்தில் போட்டு எரித்துள்ளார். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு பார்த்தபோது திருடன் ஒருவன் பெண்கள் அணியும் நைட்டி அணிந்தபடி திருட வரும் காட்சிகள் பதிவாகியிருந்தன. பின்னர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி அந்த சைக்கோ திருடனை வலைவீசி தேடி வருகிறார்கள். கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ளது மீனாட்சி கார்டன் குடியிருப்பு பகுதியில் 245 வீடுகள் […]
நள்ளிரவில் சுவர் எறிக்குதித்து படுக்கை அறையை நோட்டமிடும் மர்மநபர் சிசிடிவி காட்சிகளில் வெளியான பதிவுகளால் மக்கள் பீதி கோவை மாவட்டம் கவுண்டம்பாளைய பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத ஒரு நபர் நடமாடி கொண்டு இருக்கும் வீடியோ வெளியாகி அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.அந்த வீடியோவில் இரு சக்கர வாகனத்தில் அப்பகுதிக்கு வரும் மர்ம நபர், வீட்டிற்குள் செல்ல சுவர் ஏறி குதித்து வந்து ஜன்னல் வழியாக அறைகளை எட்டி பார்க்கிறார் இது […]
தனது பேத்தியான 10 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட 53 வயது முதியவர். வளைத்து பிடித்து போக்சோ பிரிவில் கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறையினர். கோவை என்றழைக்கப்படும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் 10 வயது சிறுமி ஆவார்.இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பயின்று வருகிறார். அதே பகுதியில் பொன்னுசாமி என்பவரும் வசித்து வந்துள்ளார். சுமார் 53 வயதான இவர் சிறுமிக்கு தாத்தா முறையில் தூரத்து உறவினர் ஆவார்.இதனால் அடிக்கடி […]
கோவையில் மாணவர்கள் மூவரும் ஆற்றுப் பாலத்தில் இருந்து போத்தனூர் நோக்கி பைக்கில் சென்றுள்ளனர். திடீரென பைக் டயர் வெடித்து, பள்ளத்தில் விழுந்து பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொத்தனூர் அருகே சாய் நகரை சேர்ந்தவர் 17 வயதான ஆஷிக் பாட்ஷா. இவரது நண்பர்கள் முகமது நசீர், முகமது அஸ்கர் மூன்று பேரும் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பயின்று வந்துள்ளனர். இந்த நிலையில் இரவு 12 மணியளவில் மாணவர்கள் மூவரும் ஆற்றுப் பாலத்தில் […]
கோவை இடையர்பாளையம் பகுதியில் முடிவெட்டும் கடை வைத்து நடத்தி வரும் தேவராஜ், ரஜினி ரசிகர் என்பதால் அவரது பெயரை ரஜினி தேவராஜ் என மாற்றிக்கொண்டார். கிறிஸ்துமஸ்ஸை முன்னிட்டு ஆதரவற்றவர்களுக்கு கட்டிங், ஷேவிங் என இலவசமாக செய்து வந்தார். இதை செய்யும் போது மனது நிம்மதியாகவும், அன்றைய பொழுது சிறப்பாகவும் அமையும் என்றார். கோயம்பத்தூர் மாவட்டம் சீரநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த தேவராஜ். இவர் ரஜினியின் தீவிர ரசிகர் என்பதால் அவரது பெயரை ரஜினி தேவராஜ் என மாற்றி அனைவரிடமும் […]
தமிழகத்தில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. கோவையைச் சேர்ந்த 21 வயதான கல்லூரி மாணவர் ஒருவர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. அதனால் இந்த தேர்தலில் கோவையைச் சேர்ந்த நாகர்ஜூனா என்ற 21 வயதான கல்லூரி மாணவர் சூலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நீலாம்பூர் கிராம ஊராட்சி மன்ற மூன்றாவது வார்டு உறுப்பினர் […]
பெற்றோர்கள் சண்டை போட்டதால் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட மகள். காப்பாற்ற சென்ற அவளின் அண்ணனும் நீச்சல் தெரியதால் இறந்தார். கோவை அருகே உள்ள போடிபாளையத்தில் செந்தில் குமார் என்பவருக்கு சொந்தமாக ஒரு தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் முத்துசாமி-வேலுமணி என்ற தம்பதி தங்கி கூலி வேலை பார்த்து வந்தனர். அவர்களுக்கு அருண்குமார் என்ற மகனும், சித்ரா என்ற மகளும் உண்டு. முத்துசாமி-வேலுமணி தம்பதி இடையே அடிக்கடி சண்டை நடக்கும். சண்டை நாடாகும் போதெல்லாம் அவரின் […]
தாய் தந்தை சண்டையை தடுக்க முயன்று, அது முடியாததால் 17வயது சிறுமி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். தன் தங்கையை காப்பாற்ற அண்ணன் அருண்குமாரும் கிணற்றில் குதித்து விட்டார். இருவருமே நீரில் மூழ்கி இறந்து விட்டனர். கோயம்புத்தூர் மாவட்டம் வழுக்குப்பாறை பகுதியை சேர்ந்த முத்துச்சாமி – வேலுமணி தம்பதியினர் ஒரு தோட்டத்தில் தங்கி கூலி வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் அன்றும் வழக்கம் போல சண்டை போட்டு கொண்டிருந்தனர். அவர்களது […]
தமிழக அரசால் நடத்தப்படும் யானைகள் நலவாழ்வு முகாம் இந்த ஆண்டு மேட்டுப்பாளையம் அருகே நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 28 யானைகள் பங்குபெற்று முகாமில் அமைக்கப்பட்டுள்ள ஷவரில் ஏராளமான யானைகள் வந்து குளித்து மகிழ்ச்சியடைந்தன. தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் யானைகள் நலவாழ்வு முகாம் இந்த ஆண்டு மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் நடைபெற்று வருகிறது. இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் யானைகள், முகாமில் கலந்து கொண்டுள்ளன. இதில் மொத்தமாக 48 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில், […]
கோவையை சேர்ந்த 16 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த இளைஞர்கள். அந்த இளைஞர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டத்தில் உள்ள சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 11 -ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.அந்த மாணவியும் அதே பகுதியை சேர்ந்த இளைஞரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 26-ம் தேதி அப்பகுதியில் அந்த சிறுமி தனது காதலனுடன் தெருவில் நடந்து சென்றுள்ளன.அப்போது அங்கிருந்த 6 பேர் கொண்ட […]