கோவையில் அம்மா உணவகத்தில் ஜூன்-30 வரை உணவு இலவசம். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்ட்டுள்ளதால், ஏழை எளிய மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,இந்த ஊரடங்கு காலங்களில் ஏழை மக்கள் உணாவிற்கு கஷ்டப்படாமல் இருக்க, அம்மா உணவகங்களில் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது. இதனையடுத்து, கோவை மாவட்டத்தில் ஜூன்-30ம் தேதி வரை […]
கோவையில் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் மே-31 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை மாநகராட்சி பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கையை, ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும், இதற்காக பிரத்யேகமாக ஒரு […]
கோவையில் சிறுவர்கள் பட்டம் விடுவதைக் தவிர்க்க வேண்டும் என்றும், மீறி பட்டம் விட்டால் அவர்களின் பெற்றோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் கடந்தசில நாள்களாக பட்டம் விடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பல தரப்பில் இருந்து புகார்கள் வந்துள்ளது. இவ்வாறு பட்டம் விடுவதால் பட்டம் அறுந்து அருகில் உள்ள உயர் அழுத்த மின் பாதையில் சிக்கி விடுகின்றது. இதனால், மின் தடை ஏற்படுகிறது […]
கொரோனா இல்லாத மாவட்டமானது கோவை. அம்மாவட்ட ஆட்சியர் ராஜா மணி. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸால், 74,925 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரையில், 8,718 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் 146 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், ஒரு நபர் மட்டும் உயிரிழந்துள்ளார். மீதமுள்ள 145 பேரும் தினமும் […]
கமலாத்தாள் பாட்டியை பாராட்டி ட்வீட் செய்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப். கோவை அருகே உள்ள ஆலாந்துறை வடிவேலம்பாளையத்தை சேர்ந்தவர் கமலாத்தாள் என்ற 85 வயது மூதாட்டி. இவர், தனது தள்ளாடும் வயதிலும் ரூ.1 க்கு இட்லி விற்பனை செய்வதால், இவரை இட்லி பாட்டி என்று அழைப்பர். இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக நாடே நிலைகுலைந்து இருக்கும் சூழலில் பம்பரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார் இட்லி பாட்டி கமலாத்தாள். ஊரடங்கு உள்ள நிலையிலும் வெளியூரில் இருந்து வந்தவர்கள் […]
தமிழகம் முழுவதும் பரவி வரும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இன்னமும் குறைந்த பாடில்லை. இந்த கொரோனா வைரஸ் தொற்று பெரியவர், சிறியவர்,கர்ப்பிணி என எந்த பாகுபாடிறி அனைவரையும் தாக்கும் பெருந்தொற்றாக அறிவித்து அரசு நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தி இருந்தது. இந்நிலையில் தற்போது தான் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கோயமுத்தூரில், கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணி பெண்ணுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. கோயமுத்தூர், கரும்புக்கடை பகுதியை சேர்ந்த, […]
கோவையை சேர்ந்த ரங்கநாதன் எனும் இளைஞர் ஒருவர் சிறார் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையதள பக்கத்தில் பதிவிட்டதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி வளையபாளையம் பகுதியை சேர்ந்த ரங்கநாதன் என்பவர் தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வருகிறார். இவர் தொடர்ச்சியாக சிறுவர் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தொலைபேசியில் பதிவிறக்கம் செய்துள்ளார். இதனை சென்னை சைபர் க்ரைம் போலீசார் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். அதன் பிறகு இவர் குறித்த தகவலை கருத்தம்பட்டி போலீஸ்க்கு கொடுத்துள்ளனர். அப்பொழுது […]
கோவையில் வாழைமர தோரணம் கட்டி, பூஜையுடன் மதுவிற்பனைக்கு தயார் நிலையில் உள்ள மதுக்கடை. இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்தியா அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும், மே-17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் மட்டும், 49 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,600-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஊரடங்கு […]
பிற மாவட்டங்களில் இருந்து கோவை வந்தால் யாராக இருந்தாலும், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இதனால் பாதிப்பு தினந்தோறும் அதிகரித்து வண்ணம் உள்ளது. அதும் நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2323 ஆக உள்ளது. குறிப்பாக நேற்று சென்னையில் மட்டும் 132 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், […]
கோவையில், ஆயுதப்படையை சேர்ந்த 2 பெண் காவலர்கள் மற்றும் ஒரு ஆண் காவலருக்கு கொரோனா தொற்று உறுதி. இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவி வருகிற நிலையில், கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸால் 1683 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 752 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. பாதுகாப்பிற்காக வெளியில் வந்து […]
கோவையில் சீல் வைக்கப்பட்ட பகுதியில் கண்காணிப்பு மேற்கொண்டபோது, பெண் காவலருக்கு கொரோனா இருப்பது உறுதி. கோயம்பத்தூர் மாவட்டத்தில் 40 வயது பெண் காவலர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள அன்னூர் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் இவர், அன்னூர் மற்றும் அவிநாசி சாலையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தார். அந்த சீல் வைக்கப்பட்ட பகுதியில் கண்காணிப்பு மேற்கொண்டபோது,அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மேட்டுப்பாளையம், அன்னூர், மதுக்கரை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, […]
பறவையினங்களிலேயே மக்களோடு மக்களாய் இசைந்து வாழ்கின்ற பறவைகளில் ஒன்று தான் காகம். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டு பறக்க முடியாமல் காக்கை ஒன்று தாவியபடி சுற்றிதிரிந்தது. இதனையடுத்து, அங்கு காவலர் சந்திரன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இந்த காக்கையை பார்த்த காவலர் சந்திரன், அந்த காக்கைக்கு உணவு மற்றும் தண்ணீர் அளித்து பராமரித்துள்ளார். இதனை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தவர்கள் தங்களது செல்போனில் பதிவு செய்தனர். மனிதநேயத்துடன் காக்கைக்கு உதவிய காவலரை, மக்கள் […]
கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சமூக பரவலை கட்டுப்படுத்துவதற்காக பாதிக்கப்பட்ட நபர்கள், அறிகுறி உள்ள நபர்கள் என அனைவரையுமே மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்குமே காலை மாலை இரவு ஆகிய மூன்று வேளைகளும் கீரை காய்கறிகள் சத்தான உணவுகள் மருத்துவமனை நிர்வாகம் வழங்கி வருகின்றது. இந்நிலையில், கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் 28 வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க […]
முதலில் சீனாவில் தனது ஆட்டத்தை தொடங்கிய கொரோனா வைரஸ், அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய நிலையில், தொடர்ந்து மற்ற நாடுகளிலும் இது பரவ தொடங்கியது. இந்தியாவிலும், இந்த நோய் பரவி வருகிற நிலையில், தற்போது இந்த வைரஸ் தமிழகத்திலும் பரவி வருகிறது. இந்நிலையில்,தமிழகத்தில் பல மாநிலங்களில் இந்த தொற்றினால், பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்நோயால் சென்னையில் 91 பேர் பாதிக்கப்பட்டு, தமிழகத்தில் முதல் இடத்தில் உள்ளது. இதனையடுத்து, கோவை மாவட்டத்தில் 58 பேர் பாதிக்கப்பட்டு, தமிழகத்தில் […]
கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதற்கு இடையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்களுக்கு தேவையான அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் தாலுகா அலுவலகத்தில் இறக்கப்பட்டது. கோவை மாவட்ட வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்துக்கு லாரியில் வந்து இறங்கிய ரேஷன் பொருட்களை வட்டாட்சியர் மகேஷ்குமார், ஊழியர்களுடன் சேர்ந்து நிவாரண மூட்டைகளை முதுகில் சுமந்து அலுவலத்திற்குள் கொண்டு சேர்த்தார். இதனை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.இது தொடர்பான […]
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது, தொடர்ந்து மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவ துவங்கியது. இந்த நோய் தற்போது இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து, பாரத பிரதமர் மோடி அவர்கள் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய அரசு இந்த நோயை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், கொரோனா தடுப்பு பணிக்காக பிரபலங்கள் பலரும் நிதியுதவி வழங்கி வருகின்றனர். இந்நிலையில், கோவையில், பள்ளி சிறுவன் தனது பள்ளி கட்டணத்திற்காக […]
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது, தொடர்ந்து மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவ துவங்கியது. இந்த நோய் தற்போது இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து, பாரத பிரதமர் மோடி அவர்கள் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் நோயானது தமிழகத்திலும் 50-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. இந்நிலையில், கோவையில், 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ள நிலையில், தற்போது இக்குழந்தையின் உடல்நலம் தேறியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் இன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸுக்கு பலர் பலியாகி வரும் நிலையில், தற்போது கடைகள், ஆலயங்கள், கல்வி கூடங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அடுத்தகட்டமாக சிறையிலிருக்கும் கைதிகளை விடுதலை செய்து வருகின்றனர். தற்போதும் கோவை மத்திய சிறையிலிருந்து சொந்த ஜாமினில் 5 பெண்கள் உட்பட மொத்தம் 136 பேர் விடுதலை செய்துள்ளனர். மற்றவர்களுக்கும் இந்த கொரோனா தோற்று ஏற்பட்டு விட கூடாது என்பதற்காக கைதிகள் தங்களது சொந்த […]
கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பாதிப்பு மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த நோயின் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து இந்த நோயின் பாதிப்பு மற்ற நாடுகளிலும் பரவி வருகிற நிலையில், அனைத்து நாடுகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாவட்ட ஆட்சியர், தமிழக – கேரள எல்லையை மூட உத்தரவிட்டுள்ளார். மேலும், கேரளாவில் இருந்து வரும் […]
கோவை மாவட்டம் விளாங்குறிச்சியில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு 1000 பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கலந்துகொண்டு புடவை, வளையல் உள்ளிட்ட பல்வேறு சீர்களை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் 50 ஆண்டு கால வளர்ச்சியை 5 ஆண்டுகளில் அதிமுக அரசு தந்துள்ளதாக குறிப்பிட்டார். மேலும் திமுக ஆட்சியில் இருந்தபோது ஸ்டாலின் எதுவும் செய்யாமல் தற்போது குறுக்கு வழியில் முதல்வராக நினைக்கிறார் என குற்றம்ச்சாட்டினார்.