கோவை:இரு தினங்களுக்கு ட்ரோன் கேமரா பறக்க தடை விதித்து கோவை மாநகர காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவையில் நாளை மற்றும் நாளை மறுதினம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் இருப்பதால் இரு தினங்களுக்கு கோவை நகரில் ட்ரோன் கேமரா பறக்க தடை விதித்து கோவை மாநகர காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக,கோவை மாநகர காவல்துறை பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: “வருகின்ற 22.11.2021 மற்றும் 23.11.2021 ஆகிய தேதிகளில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் […]
கோவையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கில் ஜாமீன் கோரி பள்ளி முதல்வர் மீது ஜாக்சன் மனு தாக்கல் செய்துள்ளார்.
கோவை:பள்ளி மாணவ,மாணவியர் எந்த பிரச்சினையாக இருந்தாலும் உடனடியாக உதவி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கோவை சின்மயா வித்யாலயா என்ற தனியார் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கொடுத்த பாலியல் தொல்லை காரணமாக மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நேற்று முன்தினம் சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பெற்றோர்,பல்வேறு அமைப்புகள்,மாணவர்கள் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து,தற்கொலைக்கு துண்டிய இயற்பியல் ஆசிரியர் மிதுன் […]
சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன், பெங்களூரில், தலைமறைவாக இருந்த நிலையில், மீரா ஜாக்சனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு வரை படித்திருந்தார். இதனை அடுத்து இவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு, கடிதம் எழுதி வைத்துவிட்டு, ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து […]
கோவை:மாணவி தற்கொலை மற்றும் பாலியல் புகார் தொடர்பாக சின்மயா பள்ளி முதல்வர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு வரை படித்திருந்தார்.இதனை அடுத்து,இவர் நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு, ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து, மாணவியின் பெற்றோர் உக்கடம் போலீசாரிடம் புகார் […]
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வரும் 15-ஆம் தேதி தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதர மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது. நவம்பர் 16 மற்றும் […]
மாணவர்களின் குரலுக்குச் செவி கொடுத்திருந்தால், குற்றம் நிகழ்வதைத் தக்க நேரத்தில் தடுத்திருக்க முடியும் என கனிமொழி ட்வீட். கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு வரை படித்திருந்தார். வேறு பள்ளிக்கு மாற்றம் செய்ய பெற்றோர் முயற்சி செய்து வந்த நிலையில், நேற்று முன்தினம் மாணவி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. மாணவிக்கு […]
கோவையில், சுல்தான்பேட்டை அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி தமிழகத்தில் தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து செயல்பட வேண்டும் […]
ஈமு கோழிப்பண்ணை உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கோவையில் “ஸ்ரீ குபேரன்” என்ற பெயரில் ஈமு கோழிப்பண்ணையை கடந்த 2014-ஆம் ஆண்டு குமார் என்பவர் நடத்தி வந்தார். ரூ.1.5 லட்சம் முதலீடு செய்தால் ஈமு கோழி குஞ்சுகள் கொடுத்து, பராமரிப்பு தொகையாக மாதம் ரூ.7000 வழங்கப்படும் எனவும், 2 ஆண்டுகளில் முதலீடு தொகை கொடுக்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பை நம்பி 41 பேர் முதலீடு செய்யப்பட்டதில் ரூ. 62.5 லட்சம் பணத்தை பெற்று மோசடியில் […]
தெற்கு ரயில்வேயில் முதன் முறையாக கோவை ரயில் நிலையத்துக்கு பசுமைக்கான பிளாட்டினம் சான்று வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து ஏ 1 தர மற்றும் அதற்கு அடுத்த நிலையில் உள்ள ரயில் நிலையங்கள் பசுமை சான்றிதழ் பெற வேண்டும் என கடந்த 2018 ஆம் ஆண்டு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதனை அடுத்து தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை சென்ட்ரல், எழும்பூர், திருவனந்தபுரம், திருச்சூர், எர்ணாகுளம், மதுரை, கோவை, கோழிக்கோடு ஆகிய ரயில் நிலையங்கள் ஏ […]
கோவை மாவட்டத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கோவையில் கடந்த 5 நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி,தமிழக அரசால் ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் கோவை மாவட்டத்திற்கு கூடுதலாக கீழ்கண்ட கட்டுப்பாடுகள் 02.08.2021 முதல் விதிக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற 4 கோயில்களில் 8 ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை. அத்தியாவசிய கடைகளான பால், மருத்தகம், […]
கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் கோவையில் 30 பேருக்கு ஒரு கண் பார்வையிழப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்றரை வருடத்திற்கு மேலாக உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. குறிப்பாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் ஏற்பட்ட கொரோனா இரண்டாம் அலை காரணமாக கொரோனவிலிருந்து மீண்டவர்களுக்கு மிக பெரும் சிக்கலாக கருப்பு பூஞ்சை தொற்று நோய் பரவி வருகிறது. இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் இதுவரை 264 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் […]
கோவை,தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தில் காவி உடை திருவள்ளுவர் படத்தை அகற்றி,வேறு படம் பொருத்தப்பட்டு இருப்பதாக,வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கோவை,தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகளின் போது,காவி உடையில் திருவள்ளுவர் படம் பொருத்தப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.இந்நிகழ்வு தற்போது சர்சையை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து,காவி உடையில் பொருத்தப்பட்ட திருவள்ளுவர் படத்தை நீக்கி,தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட வெள்ளை உடை அணிந்த திருவள்ளுவர் படைத்தை மீண்டும் பொருத்த […]
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிக அளவு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அங்குள்ள மலைப்பிரதேசமான வால்பாறையிலும் கொரோனா பாதிப்பு தீவிரமடைவதால் இதனை தடுக்கும் பொருட்டு வெளியில் யாரும் சுற்றித்திரியாமல் பாதுகாக்கும் பணியில் காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். வால்பாறையில் உள்ள அரசு கல்லூரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்கு 32 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சையை மருத்துவர்கள் வழங்கி வருகின்றனர். […]
கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு கொரோனா தடுப்பு பணிக்கென 100 தற்காலிக செவிலியர்கள் மூன்று மாத காலத்திற்கு நேர்காணல் மூலம் நியமிக்கப்பட உள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள் முன் களப் பணியாளர்கள் அனைவரும் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கிறது கோயம்பத்தூர். இங்கு ஒரே நாளில் 978 ஊடங்கு வழக்குகள் பதிவாகியுள்ளது. கொரோனா பாதிப்பால் தமிழக முதல்வர் ஊரடங்கை பிறப்பித்துள்ளார். அதன்படி, ஊரடங்கில் தேவையின்றி வெளியில் செல்பவர்கள் மீது கோவை காவல் துறையினர் நேற்று ஒரே நாளில் 978 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். கோவையில் தொற்று எண்ணிக்கை ஒரு புறம் அதிகரித்துக்கொண்டிருக்க, மறுபுறம் ஊரடங்கின் நோக்கம் புரியாமல் மக்கள் வெளியே சுற்றி திரிகின்றனர். இதனால் நேற்று முகக்கவசம் அணியாமல் வெளியே வந்த […]
கோவை மாவட்டத்தில் முதல் முறையாக தங்கக்காசுகளைத் தரும் ATM மெஷினானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோவையில் உள்ள ஃபுல்மூன் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம்,’கோல்ட் ஆன் தி கோ’ என்ற பெயரில் தங்க நாணயங்களை வழங்கும் ஏடிஎம் மெஷினை சிங்கப்பூர் பிளாசாவில் உள்ள மென்ஸ் அவென்யூவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஃபுல்மூன் எக்ஸ்போர்ட்ஸின் பங்குதாரர் எல்.எஸ். சீனிவாசன் கூறுகையில்,”கொரோனா தொற்று அதிக அளவில் பரவுவதால்,கடைகளில் நகைகளை நேரடியாக வந்துப் பார்க்க வாடிக்கையாளர்கள் தயங்குகிறார்கள்.எனவேதான்,இந்த தங்க நாணயங்களை வழங்கும் ஒரு புதுமையான ATM மெஷினை […]
கோவை மாவட்டத்தில் இரயில் முன் பாய்ந்து ஒரு காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தின் இருகூர் பகுதி அருகே, இன்று அதிகாலை 3 மணியளவில் ஒரு காதல் ஜோடி பெங்களூரில் இருந்து கன்னியாக்குமரி நோக்கி சென்று கொண்டிருந்த இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.இதில்,இருவரது உடலும் தனித்தனியாக சிதறியது. இதுகுறித்து இரயில்வே போலீஸ் விசாரணை செய்ததில்,ஒன்டிப்புதூர் பகுதியில் வசிக்கும் பிரவீன் குமார்(வயது 31) மற்றும் வடவள்ளியை […]
பிப்ரவரி 28ஆம் தேதி கோவை தனியார் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து வடிவமைத்த 460 கிராம் மட்டுமே கொண்ட செயற்கைக்கோள் விண்ணில் பாய உள்ளது. கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப தனியார் கல்லூரியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து வடிவமைத்த460 கிராம் மட்டுமே எடை கொண்ட செயற்கைக்கோள் பிப்ரவரி 28ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் ஏவப்பட உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டவுள்ள இந்த மாணவர்களின் தயாரிப்பான செயற்கைக்கோளுக்கு ஸ்ரீசக்தி ஷார்ட […]
கீழே விழுந்து கையில் ஏற்பட்ட காயத்திற்கு கோவை முத்தூஸ் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனுப்பர்பாளையம் கோவில் வீதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் – திவ்யபாரதி தம்பதிகளின் மூன்றரை வயது மகள் தான் பிரியதர்ஷினி. கடந்த வாரம் வீட்டில் இருந்து கழிவறைக்கு செல்லும் படியில் ஏறும்போது பிரியதர்ஷன் தடுமாறிக் கீழே விழுந்ததில் அவரது இடது கை மட்டும் முட்டியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது கை வீங்கி காணப்பட்டுள்ளது. […]