சிறுவாணி குடிநீர்த் திட்டத்தின்மூலம் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் இத்திட்டப் பயனாளிகளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கிடநடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வருக்கு கடிதம். சிறுவாணி குடிநீர்த் திட்டத்தின்மூலம் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் இத்திட்டப் பயனாளிகளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கிட சிறுவாணி அணையின் சேமிப்பை பராமரிக்கவும், சிறுவாணி அணையிலிருந்து குடிநீர் விநியோகத்தை மேலும் அதிகரிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் […]
1,25,000 விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்திற்கு மாறியுள்ளனர் என்று காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் தகவல். கொரோனா பெருந்தொற்று காலத்திலும் காவேரி கூக்குரல் இயக்கம் 2.1 கோடி மரங்களை விவசாயிகள் மூலம் நடவு செய்து சாதனை படைத்துள்ளது. அத்துடன் சுமார் 1,25,000 விவசாயிகளை மரம் சார்ந்த விவசாய முறைக்கு மாற்றி உள்ளது. இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் இன்று (ஜனவரி 29) நடைபெற்றது. இதில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில […]
பொள்ளாச்சியில் வருமான வரித்துறையினர் போல நடித்து கல்குவாரி உரிமையாளர் வீட்டிலிருந்து 20 லட்சம் பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே உள்ள காந்தி நகர் பகுதியை சேர்ந்த கல்குவாரி உரிமையாளர் தான் பஞ்சலிங்கம். இவரது வீட்டிற்கு நேற்று மதியம் ஐந்து பேர் கொண்ட கும்பல் காரில் வந்துள்ளது. அவர்கள் தங்களை வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து வருவதாக அடையாளம் காண்பித்து வீட்டிற்குள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அதன் பின்பு அவர்கள் வீட்டை […]
கோவை ஆலந்துறை அருகே அரசுப் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவன் ஒருவர் உயிரிழந்தார். கோவை ஆலாந்துறை அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் 2 பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அப்போது, அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் உட்பட 2 பேர் 3 பள்ளி மாணவர்களை கத்தியால் குத்தினர். இதில் காயம் அடைந்த 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், […]
7 ஆண்டுகளாக கூலி உயர்வு முழுமையாக வழங்கப்படாததைக் கண்டித்து 9-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் என விசைத்தறியாளர்கள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு 7 ஆண்டுகளாக விசைத்தறிகளுக்கான கூலி உயர்வு முழுமையாகக் கிடைக்கவேயில்லை வெகுவாக உயர்ந்துவிட்ட விலைவாசி உயர்வால் இத்தொழிலை கைவிட்டுவிட்டு பலபேர் வேறு வழிகளைத் தேடியும் இத்தொழிலுக்காக வாங்கிய கடனைச் செலுத்த வழியின்றி மூதாதையர் சேர்த்து வைத்த சொத்துக்களை இழந்து […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 4 நாட்கள் நடைபெற இருந்த கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்திடவும், தற்போது பரவி வரும் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் பரவலை தடுத்திடவும் தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமுல்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து கொரோனா நோய் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் பரவி வரும் உருமாறிய கொரோனா ஓமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும். பொது […]
நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப்பெற அனைவரும் பாடுபட வேண்டும் என கோவையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு. கோவை காளப்பட்டியில் கழக உறுப்பினர் சேர்ப்பு முகாமை, கழக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். இதன் பின் பேசிய அவர், கோவையில் சிறப்பான வரவேற்பை பார்க்க முடிந்தது. கடந்த சட்டமனற்ற தேர்தலின்போது இங்கு 2 நாட்கள் தங்கியிருந்து பணியாற்றியதாகவும் தெரிவித்தார். கோவை மக்களுக்கு குசும்பு மட்டும் இல்லை, சில நேரங்களில் […]
கோவை:அகஸ்தியர் ஜெயந்தியை முன்னிட்டு ஆதியோகி சிவன் சிலை முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு காசியைச் சேர்ந்த 7 உபாசகர்கள் நேற்று (டிச 23) சப்தரிஷி ஆரத்தியை சிறப்பாக நடத்தினர். கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில்,ஈசாவில் 112 அடியில் ஆதியோகியின் மார்பளவு சிலைக்கு,சக்தியளிக்கும் விதமாக,யோகேஸ்வர லிங்கத்தை,சப்தரிஷிகளின் உருவங்களுடன் சத்குரு பிரதிஷ்டை செய்து உள்ளார்.இதனையடுத்து,வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில் பல நூறு வருடங்களாக நடத்தப்பட்டு வரும் சப்தரிஷி ஆரத்தியானது,அதற்கு அடுத்தப்படியாக ஆதியோகியில் தான் கடந்த […]
ஹெலிகாப்டர் விபத்து குறித்து நான் தான் பாலா என்ற முகநூல் கணக்கில் செய்தி பதிவிட்டவர் மீது 3 பிரிவுகளில் கோவைகாவல் துறை வழக்கு பதிவு. இதுகுறித்து கோவை மாநகரக்காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகரம், “நான் தான் பாலா” என்ற முகநூல் கணக்கில் கடந்த 08.12.2021-ஆம் தேதி இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தது குறித்து அநாகரீகமான முறையில் பிரதமர் அவர்களை தொடர்புபடுத்தி செய்தி மற்றும் கார்ட்டுன் […]
கோவை குற்றாலத்தில் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அண்மையில் பெய்த தொடர் மழை மற்றும் பருவ மழை காரணமாக நீர் வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.குறிப்பாக, கோவை குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக,கடந்த அக்டோபர் 4 முதல் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில்,கோவை குற்றாலத்தில் தற்போது நீர்வரத்து சீராக இருப்பதன் காரணமாக சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி,இன்று முதல் காலை 9 மணி – மதியம் 2 […]
சமூக ஆர்வலர் பெரியார் மணி, கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு நிதி உதவி மற்றும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் கர்ப்பிணி வேடம் அணிந்து வந்து மனு அளித்துள்ளார். கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் பெரியார் மணி. சமூக ஆர்வலரான இவர் வித்தியாசமான வேடம் அணிந்து வந்து பல முறை கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அந்த வகையில்,இன்று, கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு நிதி உதவி மற்றும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்க கோரி […]
கோவையில் வீட்டில் வைத்து பெண் ஒருவர் தானாக பிரசவம் பார்த்ததால், குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு. இன்று தொழில் நுட்பங்கள் வளர்ந்துள்ள காலகட்டத்தில், சமையல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை இணையத்தில் பார்த்து பலரும் தெரிந்து கொள்கின்றனர். ஆனால் பிரசவம் என்பது அப்படி அல்ல, மருத்துவர்களால் பார்க்கப் பட்டால் தான் அது பாதுகாப்பான ஒன்றாக இருக்கும். இல்லையென்றால், அது ஆபத்தில் தான் போய் முடியும். இந்நிலையில் கோவை செட்டி வீதியில் வசித்து வருபவர்கள் விஜயகுமார் -புண்ணியவதி தம்பதியினர். இவர்களுக்கு […]
வரும் 14-ம் தேதி வரை மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக மேலும் 3 இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டது. இதனால், மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் பாதையில் தொடர்ந்து மண்சரிவுகள் ஏற்படுவதால் வரும் 14-ம் தேதி வரை மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 7-ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது வரும் 14-ம் தேதி வரை […]
கோவையில் காதலன் மீது ஆசிட் வீசி கத்தியால் குத்திய காதலி கோவை பீளமேட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் காதலன் மீது ஆசிட்டை வீசிய காதலி கத்தியாலும் காதலனை குத்தியுள்ளார். லிவிங் டுகெதர் முறையில் இருவரும் வாழ்ந்து வந்த நிலையில் இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது.
கோவையில் ரயில் மோதி 2 குட்டி யானைகள் உட்பட மூன்று யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. கோவை மதுக்கரை அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க யானைகள் முயற்சித்துள்ளன. அப்பொழுது கேரளாவில் இருந்து வந்த ரயில் ஒன்று யானைகள் மீது மோதி உள்ளது. இதில் 2 குட்டி யானைகள் உட்பட 3 யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
கோவை மாணவி தற்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் மிதுனை 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க கோவை போக்சோ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கோவையை சேர்ந்த 17 வயது மாணவி பாலியல் தொல்லை காரணமாக கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து உயிரிழந்த நிலையில் மாணவியின் கடிதத்தின் அடிப்படையில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. […]
கோவை:ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடையும் லட்சியம் தொலைவில் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு சென்று, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். பின் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினா.ர் நிறைவுற்ற பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இந்நிலையில்,திமுக ஆட்சிக்கு வந்த முதல் மாதத்திலேயே சென்னை கிண்டியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறை […]
அரசு விழாவில் கீழே அமர்ந்திருந்த வானதி சீனிவாசனை மேடைக்கு அழைத்த முதல்வர். இன்று கோவை மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக சென்றிருந்தார். விழா நடைபெறும் அரங்கில் அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 10 எதிர்க்கட்சி எம்எல்ஏக்களுக்கு முன்வரிசையில் இருக்கை போடப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள பாரதிய ஜனதா கட்சியின் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அவர்களும் வருகை தந்துள்ளார். அப்பொழுது அவருக்கு […]
கோவை:’பேச்சை குறைத்து செயலில் உனது திறமையை காட்டு’ என்ற பழமொழிகேற்ப,நிச்சயமாக தமிழகத்திலேயே தலைசிறந்த மாவட்டமாக கோவை இருப்பதற்கு பணியாற்ற தொடங்கி விட்டதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,2 நாள் பயணமாக கோவை மற்றும் திருப்பூருக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.அந்த வகையில், கோவையில், வ.உ.சி மைதானத்தில் தற்போது நடைபெறும் நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்வில், ரூ.441.76 கோடி மதிப்பில், 23,534 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.ரூ.596 கோடி மதிப்பில் 67 […]
கோவை:பொதுப்பணித்துறையில் புதியதாக கோவை மண்டலம் உருவாக்கம் செய்ய உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த ஆக.27 ஆம் தேதியன்று தமிழக சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது,பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள், கோயம்புத்தூரை தலைமையிடமாக கொண்டு பொதுப்பணித்துறையில் புதிய மண்டலம் உருவாக்கப்படும் என்ற அறிப்பினை வெளியிட்டார். இந்நிலையில்,பொதுப்பணித்துறை,சென்னை மண்டலம் மற்றும் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அலுவலங்களை மறுசீரமைத்து பணி அடிப்படையிலும் மற்றும் புதிய பணியிடங்களை தோற்றுவித்தும்,கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக […]