கோவையின் பீளமேட்டில் உள்ள ஃபன்மால்(FUN MALL) அருகே,ஸ்விகியில் உணவு டெலிவிரி செய்யும் இளைஞர் ஒருவரை போக்குவரத்து காவலர் ஒருவர் தாக்கும் வீடியா சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து,இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஸ்விக்கி ஊழியர் மோகனசுந்தரம் என்பவர் கோவை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:”நான் ஒரு பட்டதாரி,எனக்கு பிசினஸ் செய்ய விருப்பம்.எனவே ஸ்விக்கியில் வேலை பார்த்துக் கொண்டே சுய தொழில் செய்து வருகிறேன்.மேலும்,சுய தொழிலால் ஏற்பட்ட கடனை உணவு டெலிவரி வேலை செய்து கொண்டே […]
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த பெண் மருத்துவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அபிஷேக் என்பவரது மனைவி ராசி. அபிஷேக் கோபிசெட்டிபாளையத்தில் ஜவுளி கடை வைத்து நடத்தி வருகிறார். இவர்கள் இருவருக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடந்தது. ராசி 2020 ஆம் ஆண்டு இளநிலை மருத்துவப் பட்டம் பெற்ற நிலையில், மேற்கொண்டு பிஜி படிப்பிற்காக நீட் தேர்வு எழுத தயாராகி வந்துள்ளார். மேட்டுப்பாளையம் காட்டூர் பகுதி உள்ள தனது […]
கோவையை மேம்படுத்த ஒரு மாஸ்டர் பிளான் திட்டம் உருவாக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு. கோவையில், ஈரோடு, திருப்பூர், கோவை தொழில்முனைவோர்கள் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உரையாற்றியுள்ளார். இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கோவை மக்கள் தொடாத துறையும் இல்லை, அவர்கள் தொட்டும் துலங்காத துறையும் இல்லை; ஜவுளி, பொறியியல், ஆட்டோ மொபைல் என அனைத்து தொழில்களுக்கும் சிறந்த நகரம் கோவை. சென்னைக்கு அடுத்தபடியாக தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறந்த நகரமாக […]
கோவையை சேர்ந்த ரூ.1 இட்லி பாட்டிக்கு அன்னையர் தினத்தில் கிடைத்த புதிய வீடு. கோவை ஆலாந்துறை அருகே உள்ள வடிவேலாம்பாளையத்தை சேர்ந்தவர் கமலாத்தாள். இவர் கடந்த 30 வருடங்களாக அந்த பகுதியில் இட்லி கடை வைத்து நடத்தி வருகிறார். முதலில் 25 பைசாவுக்கு இட்லி வியாபாரத்தை தொடங்கிய கமலாத்தாள், விலைவாசி உயர்வால் தற்போது ஒரு இட்லி ரூ.1-க்கு விற்பனை செய்து வருகிறார். இவருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வந்த நிலையில், மஹிந்திரா குழுமம் கடந்த ஆண்டே ஆனந்த் […]
கோவையி அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ஊழியர்களின் அலட்சியத்தால் சிறுவனின் உயிர் பறி போனதால் இதுதொடர்பாக சட்டப்பிரிவு 304A-ன் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை மாவட்டம் வடவள்ளி அடுத்த தொண்டாமுத்தூர் சாலையில் தக்ஷ நிறுவனத்திற்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்புக்குள் சிறுவர்கள் விளையாடகூடிய விளையாட்டு பூங்கா ஒன்று உள்ளது. இதில் நேற்று 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். பூங்காவில் உள்ள மின் விளக்குகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு பணியாற்றும் பூங்கா பராமரிப்பாளர் […]
ஒன்றிய அரசின் திறமையற்ற நிர்வாகத்தால், நாடு முழுவதும் உள்ள 178 அனல் மின் நிலையங்களில், சுமார் 100ல் மிகவும் குறைவாக உள்ள நிலக்கரி கையிருப்பு நாட்டில் 150 அனல் மின் நிலையங்களில் 81 நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு மிகவும் குறைவாக இருப்பதாக மத்திய மின்சார ஆணையம் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளனர். கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் நடப்பு மாதத்தில் மட்டுமே மின்தேவை 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், எனவே பல மாநிலங்களில் மின்வெட்டு ஏற்படுவதாகவும் செய்திகள் […]
ஃப்ரீ பயர் விளையாட செல்போன் கொடுக்க மறுத்ததால் 6-ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை. கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள கண்ணப்பன் நகரை சேர்ந்த தம்பதிகள் பழனி கிட்டனம்மாள். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் உள்ளன. மூன்று பெண்களும், இரண்டு மகன்களும் உள்ளனர். இதில் ஈஸ்வரன், அர்ஜுனன் இருவரும் கிணத்துக்கடவு அருகே உள்ள அரசு பள்ளிகளில் பயின்று வருகின்றனர். ஈஸ்வரன் எட்டாம் வகுப்பும், அர்ஜுனன் ஆறாம் வகுப்பும் படித்து வந்துள்ளனர். இருவரும் அடிக்கடி செல்போனில் ஃப்ரீ பையர் கேம் […]
கோவையில் ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் குழந்தை இருவரும் உயிரிழப்பு. கோவை மாவட்டம் உடுமலை பேட்டையில் இருந்து, அம்புலன்ஸ் ஒன்று பிறந்த குழந்தையுடன், கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளது. ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த போது, மலுமிச்சம்பட்டி அருகே கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் குழந்தை இருவரும் உயிரிழந்துள்ளனர். ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளாகி குழந்தை மற்றும் ஓட்டுநர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் மீது திமுக கவுன்சிலர்கள் தாக்குதல். கோவை மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் பிரபாகரனை தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சொத்து வரி மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர்கள் வாக்குவாதம் செய்யும்போது பிரபாகரனை தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. கவுன்சிலர் பிரபாகரனை தள்ளிவிட்டதால், அதிமுக உறுப்பினர்கள் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும், மாநகராட்சி கூட்டத்தில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக மாமன்ற உறுப்பினர்களுக்கு தொடர்ந்து பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும், […]
தமிழகத்தின் பல பகுதிகளிலும் யானைகள் ரயிலில் மோதி உயிரிழக்கும் சம்பவமும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கோவையில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள் தாமாகவே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அது மட்டுமில்லாமல், கோவை பாலக்காடு ரயில்வே சாலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்ரமணியன், இளந்திரையன் மற்றும் சதீஷ்குமார் ஆகிய மூன்று நீதிபதிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 24 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள 2 பேரை பிடிக்க தனிப்படை அமைப்பு. கடந்த 1998-ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வருபவர்களை பிடிக்க 3 தனிப்படைகளை சிபிசிஐடி போலீசார் அமைத்துள்ளனர். கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 24 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள டெய்லர் ராஜா, முஜிப்பூர் ரகுமான் ஆகிய 2 பேரை பிடிக்க சிபிசிஐடி தீவிரம் காட்டி வரும் நிலையில், தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த 1998-ஆம் […]
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தராக கீதாலக்ஷ்மியை நியமித்து, தமிழக ஆளுநர் ஆர்என் ரவி உத்தரவிட்டுள்ளார். 26 ஆண்டுகள் அனுபவம் கொண்ட கீதாலக்ஷ்மி, 3 ஆண்டுகள் துணை வேந்தர் பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி. அடிதடி, ரகளைகளுக்கிடையே கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தலில் அதிமுகவின் மருதாசலம் வெற்றி பெற்றார். இதுபோன்று வெள்ளலூர் பேரூராட்சியின் துணை தலைவர் தேர்தலில் அதிமுகவின் கணேசன் தேர்வு செய்யப்பட்டார். ரகளை, மோதல், போலீஸ் தடியடிக்கு இடையே கோவை வெள்ளலூர் பேரூராட்சிக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது. முன்னதாக தேர்தல் நடைபெற்றபோது, திமுக – அதிமுக இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் போலீஸ் தடியடி நடத்தி […]
வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் தேர்வுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றபோது அதிமுக – திமுகவினர் இடையே கடும் மோதல். கோவை மாவட்டத்தில் வெள்ளலூர் பேரூராட்சியில் கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற மறைமுக வாக்குபதிவின்போது, பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. இறுதியில் வாக்குப்பெட்டி உடைத்து தூக்கி வீசப்பட்டது. இந்த சூழலில், இன்று கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சிக்கு மறைமுகத்தேர்தல் நடைபெற்று வருகிறது. வெள்ளலூரில் மறைமுக தேர்தலின்போது அதிமுக – திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால், அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. […]
கோவை சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலை நடத்தக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு. கோவை சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலை நடத்தக்கூடாது என திமுக போட்டி வேட்பாளர் வனிதா தாக்கல் செய்த வழக்கில் மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மறைமுக தேர்தலை நடத்தினால் ஜனநாயகத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை தோல்வி அடைந்துவிடும் என நீதிபதி தெரிவித்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுகவைச் சேர்ந்த வனிதா என்பவர் தாக்கல் […]
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வருமானத்தை விட 3,928% கூடுதலாக சொத்து சேர்த்ததாக அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை நடத்தி வருகிறது. அதிமுக முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி,தான் பதவி வகித்த காலங்களில் முறைகேடாக நிறுவனங்களுக்கு டெண்டர் ஒதுக்கிய புகாரின் அடைப்படையில் அவருக்கு சொந்தமான இடங்கள், அவரது சகோதரர் வீடு, அவருக்கு நெருக்கமாக உள்ள நிறுவனங்கள் என மொத்தம் 60 இடங்களில் கடந்த ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை […]
கோவை வெள்ளலூர் பேரூராட்சியின் திமுக,அதிமுக ஆகிய கட்சிகளை சேர்ந்த 15 கவுன்சிலர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக,வெள்ளலூர் பேரூராட்சியில் 8 வார்டுகளில் அதிமுகவும்,7 வார்டுகளில் திமுகவும் வெற்றி பெற்றிருந்த நிலையில்,வெள்ளலூர் பேரூராட்சி தலைவர்,துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தலின்போது அதிமுக,திமுக இடையே ஏற்பட்ட தகராறில் வாக்குப்பெட்டி சாலையில் தூக்கி வீசப்பட்டது.இதன் காரணமாக மறைமுக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில்,திமுக கவுன்சிலர்கள் 7 பேர் மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் 8 பேர் உட்பட மொத்தம் 15 பேர் […]
கோவை:ஈஷாவில் இன்று மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டம். ருத்ராட்சத்தை வீட்டிலேயே இலவசமாக பெற்று கொள்ளலாம். கோவை ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா இன்று (மார்ச் 1-ம் தேதி) ஆதியோகி முன்பு மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.இதனிடையே, ஆதியோகியின் அருளை பெறும் விதமாக சத்குருவால் சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சங்கள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. ருத்ராட்ச பிரசாதத்தை வீட்டிலேயே பெறுவதற்கு 83000 83000 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.ருத்ராட்சத்துடன் சேர்த்து தியானலிங்கத்தில் வைத்து சக்தியூட்டப்பட்ட விபூதி, பயத்தை நீக்கி, ஒருவரின் […]
உலகளவில் புகழ்பெற்ற ஈஷா மஹாசிவராத்திரி விழா இந்தாண்டும் பல்வேறு மாநில கலைஞர்களுடன் களைக்கட்ட தயாராகிவிட்டது. பல பிரபல தமிழ் படங்களில் சிறந்த பாடல்களை பாடிய பின்னணி பாடகர் திரு. ஷான் ரோல்டன் இந்தாண்டு ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் பாட உள்ளார். திரை பாடல்கள் மட்டுமின்றி கர்நாடக இசை சங்கீதத்திலும் அவர் கரைக்கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு தன் கம்பீர குரலால் சிவனை போற்றி பாடல்கள் பாடி மக்களை கவர்ந்த தெலுங்கு பாடகி திருமதி.மங்கலி இந்தாண்டும் இன்னிசையை வழங்க […]
நேதாஜி, அம்பேத்கர், காமராஜர், அறிஞர் அண்ணா போன்று வேடம் அணிந்த கலைஞர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள் கடந்த 28-ஆம் தேதி […]