கோவை கார் வெடி விபத்து சம்பவத்தில் கைதான 5 பேரும் கோவை மத்திய சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, கோவையில் கோட்டைமேடு பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து சோதனையில், கார் விபத்து ஏற்பட்ட இடத்திலும், ஜமேசா முபின் வீட்டிலும் வெடிகுண்டு சம்பந்தமான பொருட்கள் இருந்தது தெரியவந்தது. போலீசார் மேற்கொண்ட சோதனையில், சிசிடிவி காட்சியின் அடிப்படையில், ஜமேசா முபினுடன் இருந்த ஐந்து பேரை காவல்துறையினர் கைது […]
கோவை கார் சிலிண்டர் விபத்து குறித்து டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘கோவை கார் சிலிண்டர் விபத்து குறித்து புதுப்புது தகவல் வெளியாகி வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பண்டிகை நேரத்தில் மக்களை பதற்றத்திற்கு ஆளாக்கும் வகையில் நிகழும் இத்தகைய சம்பவங்கள் கவலை அளிக்கின்றன. திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே இது வெளிக்காட்டுகிறது. சட்டம் – ஒழுங்கை பராமரிப்பதும், மக்களிடம் உள்ள பயத்தை தணிப்பதுமே காவல்துறையின் முக்கியமான பணியாக இருக்கவேண்டும். இனி, தமிழ்நாட்டின் […]
கோவையில், காரில் இருந்த சிலிண்டர் வெடித்து பலியானவரின் அடையாளம் காணப்பட்டுள்ளது. கோவை உக்கடம் அருகே, ஈஸ்வரன் கோயில் அருகே கார் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், காரில் இருந்த சிலிண்டர் வெடித்து பலியானவரின் அடையாளம் காணப்பட்டுள்ளது. விசாரணையில் பலியானவர் உக்கடத்தை சேர்ந்த ஜமேசா முபின் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2019-ல் தேசிய பாதுகாப்பு முகமை […]
கோவை மாநகர உளவுத்துறை ஆணையராக பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மாநகர உளவுத்துறை ஆணையராக பார்த்திபனை நியமித்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். அடுத்தடுத்து நிகழந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை தொடர்ந்து உளவுத்துறை உதவி ஆணையர் மாற்றம் செய்து தமிழக டிஜிபி உத்தரவிட்டார். சிங்காநல்லூர் துணை ஆணையர் அருண் சிறப்பு புலனாய்வு பிரிவு ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவையில் கடந்த 3 நாட்களாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டு வரும் நிலையில், டிஜிபி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். தொடர் […]
இந்திய அரசியல் சட்டம் 1937ஆம் ஆண்டு விதி 135இன் படி விமான நிலையத்தில் விமான நிறுவனங்கள் போர்டிங் பாஸ் போன்ற கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது. வழக்கமாக இந்தியாவில் உள்ள ஏர்போர்ட்களில் இருந்து வெளியே வரும் பயணிகளிடம் அதிகாரிகள் செக் செய்யும் போது போர்டிங் பாஸ் கோருவது வழக்கம். இதற்காக விமான நிறுவனங்கள் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கும். இந்த கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என இந்திய அரசியல் சட்டம் 1937ஆம் ஆண்டு விதி 135இன் படி […]
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,தமிழகத்தில் இன்று நீலகிரி,கோயம்புத்தூர்,தேனி,திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.மேலும்,தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை: வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான […]
திருவாரூர்:அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் உட்பட மொத்தம் 6 பேர் மீது திருவாரூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக எழுந்த பல்வேறு புகாரின் அடிப்படையில் திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் உள்ள முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு […]
கோவை, கோட்டை மேடு பகுதியில் செயல்பட்டு வரும், அரசு உதவிபெறும் நல்லாயன் தொடக்கப்பள்ளியில் தேர்தல் திருவிழா நடைபெற்றுள்ளது. கோவை, கோட்டை மேடு பகுதியில் செயல்பட்டு வரும், அரசு உதவிபெறும் நல்லாயன் தொடக்கப்பள்ளியில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த பள்ளியில் 1-8 ஆம் வகுப்பு 130 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் சட்டமன்ற தேர்தலை போன்று, வேட்புமனு தாக்கல், மனுக்கள் பரிசலானை, பரப்புரை, வாக்காளர் பட்டியல் என தேர்தல் திருவிழா நடைபெற்றது. இந்த தேர்தலில் மாணவர் தலைவர், துணை […]
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,தமிழகத்தில் இன்று நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதைப்போல,நாளையும் நீலகிரி,கோயம்புத்தூர், தேனி,திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.மேலும்,தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று […]
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் முன்னதாக சோதனை நடத்தியபோது அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டிருந்தது.அந்த வகையில்,கோவை வடவள்ளி பகுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் நண்பரான சந்திரசேகர் வீட்டில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டது. இந்த சூழலில்,கோவை வடவள்ளியில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் நண்பர் சந்திரசேகர் வீட்டில் நேற்றும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.ஏற்கனவே இரண்டு முறை வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்ட நிலையில்,நேற்று 3-வது முறையாக சந்திரசேகருக்கு சொந்தமான 6 இடங்களில் 10 […]
கோவை:வால்பாறையில் இன்றும்,நாளையும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக லேசான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக,கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில்,கனமழை காரணமாக கோவை மாவட்டத்தின் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்றும் (ஜுலை 7),நாளையும் விடுமுறை அளிக்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவிப்பு விடுத்துள்ளார். மேலும்,தொடர் மழை பெய்து வருவதால் வாகன […]
கோவை வடவள்ளியில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் நண்பர் சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.ஏற்கனவே இரண்டு முறை வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்ட நிலையில்,தற்போது 3-வது முறையாக சந்திரசேகருக்கு சொந்தமான 6 இடங்களில் சோதனையிட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து,சோதனையின் முடிவிலேயே என்னென்ன ஆவணங்கள்,எதற்காக சோதனை? உள்ளிட்ட விவரங்கள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.ஐடி சோதனைக்குள்ளான சந்திரசேகர் நமது அம்மா நாளிதழின் வெளியீட்டாளராகவும் உள்ளார். முன்னதாக,கடந்த அதிமுக ஆட்சியில் 2016-20 ஆம் ஆண்டு வரை […]
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,தமிழகத்தில் நீலகிரி,கோயம்புத்தூர்,திருப்பூர்,தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.. மேலும்,தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். […]
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நேற்று கடத்தப்பட்ட குழந்தை கேரளா மாநிலம் பாலக்காட்டில் மீட்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்தவர் யுனிஸ், இவர் கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். அவருடைய மனைவி திவ்யா பாரதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் 29-ஆம் தேதி அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை திவ்யபாரதி உறங்கிக் கொண்டிருந்தபோது மர்ம […]
தேசிய அளவில் நடந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் 2 வெண்கல பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு பெருமைச் சேர்த்துள்ளனர். இந்தியாவில் விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்கவும்,திறமை வாய்ந்த இளம் விளையாட்டு வீரர்களை கண்டறியவும் கேலோ இந்தியா போட்டிகள் நடத்தப்படுகின்றன.அதன்படி, 2021-ம் ஆண்டிற்கான போட்டிகள் ஹரியானாவில் உள்ள பஞ்சகுலாவில் இம்மாதம் நடத்தப்பட்டன.25 வகையான விளையாட்டு போட்டிகளில் பாரம்பரிய தற்காப்பு கலையான களரிப் போட்டியும் நடத்தப்பட்டது.இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 180 இளம் வீரர்கள் பங்கேற்றனர். […]
மண் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்தில் 65 வயதில் சுமார் 30,000 கி.மீ மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள சத்குரு நாளை (ஜூன் 21) தமிழ்நாடு திரும்ப உள்ளார்.இதையொட்டி,கொங்கு மண்டலத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தன்னார்வலர்களும்,பொது மக்களும் தயாராகி வருகின்றனர். சத்தியமங்கலம் வழியாக தமிழ்நாட்டிற்குள் வரும் சத்குருவிற்கு பண்ணாரி கோவில் அருகே மேள தாளங்களுடன் தன்னார்வலர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.இதை தொடர்ந்து எஸ்.ஆர்.டி கார்னர்,புங்கம்பள்ளி,செல்லப்பன் பாளையம்,அன்னூர் பேருந்து நிலையம் என சூலூர் […]
27 நாடுகள்,27,200 கி.மீ பயணம்,593 நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட சத்குரு ஜூன் 21-ம் தேதி தாய் தமிழ்நாட்டிற்கு திரும்புகிறார். மண் வளப் பாதுகாப்பிற்காக தனது 65-வது வயதில் தனி ஆளாக 27 நாடுகளுக்கு சவாலான மோட்டார் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ள சத்குரு,ஜூன் 21-ம் தேதி தாய் தமிழ்நாட்டிற்கு திரும்ப உள்ளார்.இதுவரை சுமார் 27,200 கி.மீ பயணித்துள்ள அவர் 593 நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். சத்தியமங்கலம் வழியாக தமிழ்நாட்டிற்குள் வரும் சத்குருவிற்கு பண்ணாரி கோவில் அருகே மேள தாளங்களுடன் தன்னார்வலர்கள் […]
வால்பாறைக்கு மாலை 6 மணிக்கு மேல் வெளியூர் நபர்கள், சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து புலிகள் காப்பக இயக்குனர் உத்தரவு. மலைபிரதேசமான வால்பாறையில் இதமான காலநிலை நிலவும். இங்கு ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இதன் காரணமாக வால்பாறை வந்து செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகம். அவ்வப்போது, வால்பாறையில் சுற்றுலாவை முன்வைத்து சில சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், வால்பாறைக்கு மாலை 6 மணிக்கு மேல் வெளியூர் […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு,நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் கோயம்புத்தூர் நகரில் ரூ.230 கோடி செலவில் இராமநாதபுரம் மற்றும் சுங்கம் முக்கிய சந்திப்புகளில் 3.15 கி.மீ. நீளத்திற்கு கட்டப்பட்டுள்ள 4 வழித்தட மேம்பாலம் மற்றும் அதே தேசிய நெடுஞ்சாலையில் ரூ.60 கோடி செலவில் கவுண்டம்பாளையம் சந்திப்பில் 1.17 கி.மீ. நீளத்திற்கு கட்டப்பட்டுள்ள மேம்பாலம் ஆகியவற்றை திறந்து வைத்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நெடுஞ்சாலைத் துறை சார்பில் […]
‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தானை கமாண்டிங் ஆஃபிசர் அசோக் ராய் தொடங்கி வைத்தார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் கோவையில் (ஜூன் 5) நடைபெற்றது.ஐ.என்.எஸ் அக்ரானியின் கமாண்டிங் ஆஃபிசர் காமோடர் அசோக் ராய் அவர்கள் கொடியசைத்து மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.இதில் பள்ளி,கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.வ.உ.சி பூங்கா அருகில் உள்ள ஆர்.கே. ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வு […]