கோவை: மின்கசிவு காரணமாக கருமத்தம்பட்டி அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள விசைத்தறி கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தினால் பல லட்சம் மதிப்புள்ள காடா துணிகள் மற்றும் நூல்கள் தீயில் எரிந்து சேதமாயின. பின்னர் சுமார் அரைமணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்
2014ல் கோவையில் விசைத்தறி கூடத்தில் 6வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டிஸ்அனுப்பியுள்ளது. உயிரிழந்த சிறுமியின் பெற்றோர்கள் கொத்தடிமைகள் என அறிவிக்கவும், மறுவாழ்வு பெறுவதை உறுதிப்படுத்தவும் என கோவை மாவட்ட நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
கோவையில் முகநூல் மூலம் பழகி காதலிப்பதாக கூறி ரூ.45 லட்சம் மோசடியில் ஈடுப்பட்ட இளம்பெண் உட்பட 3 பேர் கைது. சென்னையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் அளித்த புகாரின் பேரில் சுருதி, அவரது தாயார் சித்ரா, பிரசன்னா ஆகியோரை காவல்துறை கைது செய்தது.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன் -பாளையத்தில் அனைத்து கட்சிகள் சார்பில் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள பிரஸ்காலனி பகுதியில் 50 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்திய அரசு அச்சகத்தை மூட எதிர்ப்பு தெரிவித்து அச்சக ஊழியர்கள், மற்றும் அரசியல் கட்சியினர் கடந்த 6 மாதங்களாக பல்வேறு கட்ட போரட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அச்சகத்தை மூட எதிர்ப்புத் தெரிவித்து, பெரியநாயக்கன்பாளையம், பிரிக்கால் பிரிவு, வண்ணாங்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. நகரில் உள்ள […]
கோவையில் 101 மற்றும் 70 வயதுடைய மூதாட்டிகள் மகன் மீது மோசடி புகார் மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.அவர்களது மகன் தங்களிடம் ஏமாற்றி அபகரித்த சொத்தை மீட்டு இறுதி நாட்களில் வாழ வழிவகுக்க செய்யக்கோரி மகள் வழி பேரனுடன் வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
பைக் ரேசில் ஈடுபடுவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் – கோவை ஆணையர் பெரியய்யா தெரிவித்துள்ளார். கோவை சாலைகளில் பைக் ரேஸில் ஈடுபடுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல்துறை ஆணையர் பெரியய்யா தெரிவித்துள்ளார். அவிநாசி சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், பள்ளி மாணவர்களுக்கு சாலை விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும் கோவை நகருக்குள் வாகனங்கள் நுழையும் முக்கியமான 7 சாலைகளில் கண்காணிப்புக் […]
Tidel Park Coimbatore நடத்தும் மாபெரும்வேலைவாய்ப்பு நேர்காணல் நடைபெறவுள்ளது. Click Here–>https://goo.gl/4iWhKe தேவையான கல்வி தகுதி: Any Degree சம்பளம் : INR 30000 மொத்த காலியிடங்கள்: நிறைய உள்ளது நுழைவு கட்டணம்: அனுமதி இலவசம் தேர்வு முறை: Job Fair நாள்: 30/01/2018 இடம் : Coimbatore நேரம்: 8.00AM to 1.00PM. Venue Details Click This Link–>https://goo.gl/4iWhKe
கோவை : மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் பகுதியில் யானைகள் நலவாழ்வு முகாம் தொடங்கியது. இந்த முகமை தமிழக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நலவாழ்வு முகாமில் தமிழகத்தில் இருந்து 31, புதுச்சேரியில் இருந்து 2 யானைகள் பங்கேற்றுள்ளன. இம்முகாமில் யானைகளுக்கு மருத்துவ சிகிச்சை, பயிற்சிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மிகவும் போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்களில் ஒன்றாகும்.நகர் முழுவதும் சாலைகளிலும் ,சாலை ஓரங்களிலும் நெரிசல் மிகுந்து காணப்படும்.இதனால் கோவை ரயில் நிலையத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டை அகற்ற போலீஸார் நெருக்கடி தருவதாக ஆட்டோ டிரைவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். முன்னதாக கோவை சந்திப்பு ரயில் நிலைய வளாகத்திற்குள் ஆட்டோ ஸ்டாண்ட் இருந்தது. ஆனால் பராமரிப்பு பணிகளை காரணம் காட்டி சிறிது காலம் வெளியேறுமாறு அதிகாரிகள் கூறினர். இதனை நம்பி ரயில் நிலைய வளாகத்தில் இருந்து வெளியே […]
கோவை மாவட்டத்தில் சூலூர் அருகே பீடம்பள்ளியில் உள்ள ஒரு பழைய பேப்பர் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தினால் அந்த பழைய பேப்பர் குடோனில் இருந்த பெரும்பாலான பொருட்கள் எல்லாம் எரிந்து நாசமாயின.மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த நகைப்பட்டறையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை துணை ஆட்சியர் செந்தில்வேல் சம்பவ இடத்தில் ஆய்வு செய்கின்றனர். நகைப்பட்டறையின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். source: dinasuvadu.com
பள்ளி நேரத்தில் பேருந்துகள் சரியாக இயக்கப்படாததைக் கண்டித்து கோவை வெள்ளலூர் பகுதியில் 5 அரசு பேருந்துகளை சிறைபிடித்து மாணவர்கள், பொதுமக்கள் போராட்டம்.. source: dinasuvadu.com
திருப்பூர் “ரிஜெனோ” நிறுவன சிபி செல்வன் என்ற வாலிபர் தானே தயாரித்த பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக இயற்கைப் பொருள்களால் ஆன எளிதில் மக்கக்கூடிய பைகளை கோவை மாநகராட்சி புழக்கத்தில் விட்டுள்ளது. இந்த பைகளின் பயன்பாடு அதிகரிக்கும் பட்சத்தில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு குறையும்,மேலும் இந்த மாதிரியான கண்டுபிடிப்புகளை அரசே ஊக்குவிக்கும் பட்சத்தில் எளிய மக்களிடம் இந்த கண்டுபிடிப்பு விரைவில் சென்றடையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. source: dinasuvadu.com
கோயம்புத்தூர் மாவட்டம் மத்தம்பாளையத்தில் தேவாலயத்திற்குள் புகுந்து மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதில் 4 பேர் காயம் என தகவல்.
கோவையில் மருத்துவ கலந்தாய்வை வெளிப்படையாக நடத்தக்கோரி முதுநிலை மருத்துவ மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி போராட்டம்
கோவை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பேனர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற தடை: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் 100 பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவானது நடைபெற்று வருகிறது. அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோரது படம் போட்டு பல பெரிய பெரிய பேனர்களும்,தோரண வாயில்களும் மக்கள் அனுதினமும் பயணிக்கும் சாலை மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கபட்டிருந்தன.இந்நிலையில் உயர் நீதிமன்றமானது உயிரோடு […]
வருகிற டிசம்பர் 3ம் தேதி கோவை மாநகரில் MGR நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளது.இதனையடுத்து கோவையில் உள்ள அவினாசி சாலை முழுவதும் சாலையில் குழி தோண்டி கட் அவுட் மற்றும் ஆர்ச் பணிகள் நடந்து வருகிறது. இன்று காலை கோவை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அருகே ரகு என்கிற இளைஞர் இருசக்கரவாகனத்தில் வந்த போது சாலையில் கட்டிய ஆர்ச் மரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த வாலிபர் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்தார்.இதனையடுத்து வீட்டில் பெற்றோர்கள் இவருக்கு திருமண […]
கோவை- சென்னை ரயிலில் ஈசா லிங்கத்தை அடையாளமாக்கியது ரயில்வே. உடனடியாக, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டம் அறிவித்தது.மேலும் சில சமூகநீதி இயக்கங்களும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். முற்போக்கு எண்ணம் கொண்ட பத்திரிகையாளர்கள் முக்கியத்துவம் அளித்து தங்கள் ஊடகங்களில் வெளியிட்டனர்.தீக்கதிர் உள்ளிட்ட பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்களிலும் போராளிகள் கொந்தளித்தனர். ரயில்வே நிர்வாகம் பணிந்தது லிங்கம் மாற்றப்பட்டு கோவை ரயில் நிலையத்தின் படம் இடம்பெற வைத்தது…
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்த விபத்தில், பலியான அரசு பேருந்து நடத்துனர் சிவகுமாரின் மனைவி செளந்தரி தனக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம், தனது கைகுழந்தையோடு மனு அளித்தார்.அவருடன் அவரது உறவினர்களும் வந்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் முறையிட்டனர்.
கோயம்புத்தூரானது தமிழகத்தின் மான்செஸ்டராக விளங்குகிறது. தொழில்நகரமாக விளங்குகிறது. இந்த கொயம்பத்தூரின் புதிய அடையாளமாக ஈசா மையம் விளங்குகிறது என இந்திய ரயில்வே துறை சொல்லிவருகிறது. தற்போது ரயில் பெட்டியிலும் அந்த ஈசா மையம் போட்டோ போட்டு பெயர் பலகையை ரயில்வே துறை சேரன் எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ் மற்றும் இன்னும் சில எக்ஸ்ப்ரஸ் ரயில்களில் ஈசா மையத்திற்கு ரயில்வே துறை விளம்பரம் செய்து வருகிறது.