கோயம்புத்தூரில் கடந்த ஆண்டு ஓடும் பேருந்தில் ரூ.75 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், பஞ்சாபில் பதுங்கியிருந்த மேலும் இருவரை தமிழக போலீஸார் கைது செய்துள்ளனர். கோவை வைசியர் தெருவில் ஸ்வர்ண கலஷ் ஜுவல்லரி உள்ளது. இதன் 2 ஊழியர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் 11–ல் தங்க நகைகளை விற்க பெங்களூரு சென்றனர். விற்றது போக மீதமிருந்த ரூ.75 லட்சம் மதிப்புள்ள இரண்டரை கிலோ நகைகளுடன் அன்று இரவு கர்நாடகா அரசு பேருந்தில் கோவை திரும்பினர். அப்போது […]
கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு வலி தெரியாமல் இருக்க வலி நிவாரண மருந்து கொடுக்கப்படுகிறது. 5 மில்லி அளவு கொண்ட மிகச்சிறிய பாட்டிலில் இருக்கும் இந்த மருந்தின் விலை ரூ.5 மட்டும்தான். குறைந்த விலையில் அதிகபோதை கிடைப்பதால் இதை வாங்க போதைப்பிரியர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சில நாட்களுக்கு முன்பு இந்த மருந்தை திருடும்போது, கோவை கோட்டைமேடு பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் (வயது 24) […]
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைகள் மற்றும் அவற்றின் பாதிப்புகள் பற்றி ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் விசாரணை நடத்தி வருகிறார். அதன்படி கோவையில் 5-ம் கட்ட விசாரணை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நேற்று தொடங்கியது. முன்னதாக ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் கூறியதாவது:- கோவையில் 5-ம் கட்ட விசாரணை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. அந்த விசாரணை நாளையுடன்(வெள்ளிக்கிழமை)முடிவடைகிறது. கோவையை பொறுத்தவரை 50 பேர் பிரமாண வாக்குமூலம் […]
கோவைப்புதூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த பானு என்பவரது மகன் அப்துல்லா (வயது 17), அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் சூர்யன் (17). நண்பர்களான இவர்கள் 2 பேரும் கோவையில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர். நேற்று முன்தினம் இவர்கள் 2 பேரும் தமிழக-கேரள எல்லையான வாளையாருக்கு சென்றனர். பின்னர் அங்குள்ள அணையில் 2 பேரும் குளித்தனர். எதிர்பாராதவிதமாக அவர் கள் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதில், நீரில் […]
சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா நங்கவள்ளி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. அவருடைய மனைவி சாந்தி. இவர்களுடைய மகன் சக்திவேல்(வயது 16). பிளஸ்-2 மாணவர். இவர் கடந்த 19-ந் தேதி இரவு 7 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். வனவாசி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து சக்திவேல் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் […]
சேலத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கார்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவர் தனது 3 கார்களை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஒருவரிடம் கொடுத்து ரூ.2 லட்சம் கடன் வாங்கி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரகாஷ் அந்த கார்களை மீட்க மேட்டுப்பாளையத்துக்கு சென்றார். அப்போது அந்த நபர், கோவை குனியமுத்தூர் சாரமேட்டை சேர்ந்த பழைய கார்களை விற்பனை செய்யும் வியாபாரியான ரபீக் (வயது 50) என்பவரிடம் உங்கள் கார்கள் உள்ளன. நீங்கள் ரூ.4 லட்சம் […]
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது திருத்தணி முருகன் கோயிலிலும் பக்தர்கள் 1008 பால்குடங்களுடன் ஊர்வலமாக எடுத்து சென்று திருத்தணி முருகனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது . இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
கோவை புலியகுளத்தில் உள்ளது ஆசியாவிலே மிக பெரிய விநாயகர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை நடபெற்றது ஆசியாவிலேயே பெரிய விநாயகரான முந்தி விநாயகருக்கு 2 டன் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கனி தரிசனம் காண வேண்டும் வருட பிறப்பு நாளில் இதனால் சுவாமிக்கு கனியினால் அலங்காரம் செய்யப்பட்டது வருட துவக்க நாளில் கனியில் கண் விழித்தால் கனி போல் வாழ்வமையும் என்பது நம்பிக்கை கனியினால் அலங்காரம் செய்யப்பட்ட சுவாமியை ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு […]
டிடிவி தினகரன் காவிரி உரிமைக்காக பிற கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்த தாங்கள் தயாரகவே இருப்பதாக கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியுள்ளார். ஐபிஎல்லுக்கு எதிரான போராட்டத்தின் போது நிகழ்ந்த சம்பவம் குறித்து ரஜினிகாந்த் கூறியுள்ள கருத்தை ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
அரசுப் பள்ளியில் பயிலும் 5 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, 3 சிறுவர்கள் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கைது செய்யப்பட்டுள்ளனர். சீனிவாசபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடந்த மருத்துவ முகாமில், 10 வயதுக்குட்பட்ட 5 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லைக்குள்ளானது கண்டறியப்பட்டது. மருத்துவர்கள் அளித்த தகவலின்பேரில், குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு அதிகாரிகள் சிறுமிகளிடம் விசாரணை நடத்தினர். அதில், அதே பகுதியைச் சேர்ந்த 15 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்கள், பாலியல் தொல்லை அளித்தது […]
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் காவிரி மேலாண்மை வாரியம் கோரி தொடர்ந்து நான்காவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டம் பேரளத்தில் ரயில் மறியலில் ஈடுபட ஊர்வலமாக வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை, போலீசார் தடுத்ததால் லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. இதை அடுத்து தண்டவாளத்தில் நின்ற படி காவிரி மேலாண்மை வாரியம் கோரி அவர்கள் முழக்கமிட்டனர். இதனால் திருவாரூர் – மயிலாடுதுறை பயணிகள் ரயில் அரை மணி நேரம் நிறுத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் அரை […]
தி.மு.கவினர் இருவர் கோவையில் தீக்குளிக்க முயற்சி செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. முக்கியமாக தமிழக எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கண்டித்து தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம், சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சைதாப்பேட்டையில் எம்.எல்.ஏ சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற சாலைமறியலில் தி.மு.கவினர் பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை […]
கோவை மாநகராட்சியில், 14 வருடங்களாக குப்பை லாரி டிரைவராகப் பணிபுரிபவர் மணி. நாற்பதுகளை கடந்த வயதுக்காரர். `சென்ற வாரம் குப்பை அள்ளும் இடத்தில், ஒரு பெண்ணுக்கு `லாரியில் அமர்ந்தவாரே பதில் சொன்னார்’ என்ற காரணத்துக்காக.. மணியை செருப்பால் அடுத்திருக்கிறார் அந்தப் பெண்ணின் மகன்’ என்ற தகவலைக் கேட்கவே நெஞ்சம் பதைபதைக்கிறது. `மணியை சாதிப் பெயரைச் சொல்லி செருப்பால் அடித்து இழிவுப்படுத்தியவரை, கைதுசெய்ய வேண்டும்’ என்று மணியும் அவரோடு பணிபுரியும் சக துப்புரவுப் பணியாளர்களும் சேர்ந்து வழக்கு பதிந்துள்ளனர் நடந்தது […]
புற்றுநோயினால் பாதிக்கபட்டிருந்த டெல்லியை பெண் கரிமா சரஸ்வத்.அவருக்கு வயது கிட்டத்தட்ட 37 ஆகும்.இந்நிலையில் அப்பெண்ணின் உயிரை காப்பாற்ற தனது ரத்த ஸ்டெம்செல்களை தானமாக வழங்கியுள்ளார் கோவையைச் சேர்ந்த வாலிபர் குருமூர்த்தி.இவருக்கு வயது 27 ஆகும்.
லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், கோவை பாரதியார் பல்கலை கழகத்தின் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். லஞ்சப்புகாரில் கைதான துணை வேந்தர் கணபதியின் பதவிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிநியமனங்கள் குறித்த ஆவணங்களை அப்போது சேகரித்ததாக கூறப்படுகிறது. பாரதியார் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள பதிவாளர் வனிதாவின் அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் ராஜேஷ் தலைமையில் 3 அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர். சுமார் அரைமணி நேரம் நடைபெற்ற விசாரணையின் போது பதிவாளர் அலுவலகத்திலிருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. […]
லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கோவை பாரதியார் பல்கலைகழக வளாகத்தில் உள்ள வேதியியல் துறை அலுவலகத்தில் தீவிர சோதனை. பேராசிரியர் நியமனத்திற்கு ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் துணை வேந்தர் கணபதி, வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜன் சிக்கினர். லஞ்சப் பணத்தை வாங்கி கொடுப்பதில் இடைத்தரகராக செயல்பட்ட வேதியியல் துறை அலுவலகத்தில் பேராசிரியர் தர்மராஜன் முன்னிலையில் சோதனை. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்காக 30 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரையடுத்து சோதனை மேற்கொண்டுள்ள லஞ்ச ஒழிப்புத்துறையினர், துணைவேந்தர் கணபதியிடமுடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை பாராதியார் பல்கலைக் கழகத்தில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி வரும் சுரேஷ் என்பவர், கல்லூரியில் உள்ள உதவி பேராசியர் பணியிடத்திற்காக விண்ணப்பித்துள்ளார். அவருக்கு பணி வழங்க பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, 30 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும், அதில் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமாகவும், 29 […]
கோவை மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையம் பகுதியில் முதல் முறையாக ஜல்லிகட்டு போட்டியானது இன்று நடக்கிறது. இந்த ஜல்லிகட்டு போட்டிக்காக மதுரை,திண்டுக்கல்,சிவகங்கை ஆகிய தென்மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகளும்,750 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
கோவை : அரசுக்கு எதிராக வாக்குகள் பெறும் இயக்கம் தொடங்கியுள்ளனர். கோவை அரசு மருத்துவமனையின் முன்பு நியாயம் மற்றும் அநியாயம் என இரண்டு பெட்டிகளில் வாக்கு பெட்டி, வாக்கு சீட்டுகளுடன் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க கோவை மாவட்ட குழுசார்பாக போராட்டம் நடத்தப்பட்டது. திரளாக மக்கள் பஸ் கட்டண உயர் வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தனர்.