கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் மேலும் 2 பேர் கைது. கோவையில் கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேலும் 2 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்தனர். கார் வெடிப்பு வழக்கில் ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக கோவையை சேர்ந்த சேக் இதயத்துல்லா மற்றும் சனோபர் அலி ஆகிய இருவரை […]
தீரன் பட பாணியில் கோவையில் திருடி வெளி மாநிலம் சென்ற திருடர்களை அங்கு வைத்தே தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழக காவல்துறையின் சிறப்பான செயல்பாட்டு காரணமாக தமிழகத்தில் திருடிவிட்டு, வெளிமாநிலத்தில் தப்பி சென்ற திருடர்களை அவர்கள் ஊருக்கே சென்று கைது செய்துள்ளனர். கோவையில் சுமார் 6.5 கிலோ தங்க நகைகளை ஒரு கும்பல் திருடி சென்றுள்ளது. இந்த கொள்ளை கும்பல்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். அதில் அந்த திருட்டு கும்பல் மத்திய பிரதேச […]
விவசாயிகள் தாமாக முன்வந்து கொடுக்கும் நிலங்களுக்கு திருப்திகரமாக இழப்பீடு வழங்கப்படும் என அறிவிப்பு. கோவை மாவட்டம் அன்னுரில் தொழிற்பூங்கா அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படாது என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான தரிசு நிலங்கள் (1,630 ஏக்கர்) மட்டும் கையகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வித கட்டாயமும் இன்றி, விவசாயிகள் மனமுந்து கொடுக்க முன்வரும் நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என அரசு கூறியுள்ளது. மேலும், கோவை மாவட்டம் அன்னுரில் அமையவுள்ள தொழிற்பூங்காவில் காற்று மற்றும் […]
ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக கடனில் சிக்கி கோவையை சேர்ந்த சங்கர் என்கிற மென்பொறியாளர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஆன்லைன் சூதாட்டம் விளையாட வேண்டாம் எனவும், அதற்கு அடிமையாக வேண்டாம் என அரசு அறிவுறுத்தினாலும் ஆன்லைன் சூதாட்டத்தால் நடக்கும் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதில் பெரும்பாலும் படித்த இளைஞர்கள் உயிரை மாய்த்துகொள்வது இன்னும் வேதனை அளிக்கிறது. கோவை, உப்பிலிபாளையத்தை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் சங்கர், 29வயதான இவர் மென்பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் ஆன்லைன் சூதாட்டம் […]
கோவையை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டி அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம். கோவையில் திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியுள்ளது. சிவானந்தா காலனியில் உண்ணாவிரத போராட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சொத்து வரி, பால் விலை, மின் கட்டணம், கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கண்டித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் கோவையை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டியும் போராட்டம் நடைபெற்று வருகிறது. குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை […]
வீரப்பன் கூட்டாளிகள் 2 பேர் 30 ஆண்டுகளுக்கு பின் கோவை சிறையில் இருந்து விடுதலை. கோவை சிறையில் ஆயுள் கைதிகளாக இருந்த வீரப்பன் கூட்டாளிகள் 2 பேர் ஆளுநர் கையெழுத்திட்டதால் விடுதலை செய்யப்பட்டனர். அதன்படி, வீரப்பன் கூட்டாளிகளான ஆண்டியப்பன், பெருமாள் ஆகிய இருவரும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பின் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள வீரப்பன் கூட்டாளிகளை விடுதலை செய்யுமாறு மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் தமிழக அரசின் […]
அக்டோபர் 23 அன்று கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் சோதனை. தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதாவது, கோவையில் மட்டும் 20 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. அக்டோபர் 23 அன்று கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இந்த சோதனைகள் நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் கேரள மாநிலம் கொச்சியில் […]
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைதிகள் 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ முடிவு. கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் கைதான 6 பேரும் பூவிருந்தமல்லி என்.ஐ.ஏ (தேசிய புலனாய்வு) சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். என்.ஐ.ஏ காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதால், புழல் சிறையில் இருந்து 6 பேரும் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைதான 6 பேரை நேற்று கோவையில் இருந்து அழைத்துவரப்பட்டு […]