மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் கோவை குற்றாலம் அருவி உள்ளது. கோவை மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த அருவி அமைந்துள்ள வனப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அருவியில் கடந்த 3 நாட்களாக அருவியில் வெள்ளம்பெருக் கெடுத்து பாய்கிறது. இதனால் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத் துறை தடை விதித்தது. நேற்று பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அருவிக்கு செல்லும் பாதையில் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து விழுந்தன. இன்றும் அங்கு […]
கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் பவானி, நொய்யல், சின்னாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகள், குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்து வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர்மழை காரணமாக கோவை நகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அணையின் மொத்த நீர்மட்டம் 50 அடி ஆகும். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை 15 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது 24 அடியாக […]
தென்மேற்கு பருவமழையின் காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. கன்னியாகுமரி, நெல்லை, தேனி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக மழை நீடிக்கிறது. கனமழையால், கோவை மாவட்டம் வால்பாறையில் சாலைகளில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் வீட்டின் கூரை சூறைக்காற்றில் பறந்து, வீடுகளும் முற்றிலுமாக சேதமடைந்தன. பலத்த மழை தொடர்வதால் கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களை […]
கனமழையால் கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார் ஆட்சியர் ஹரிஹரன். மேலும் பலத்த காற்றுடன் கூடிய மழை மற்றும் பல மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு கோவை குற்றாலத்திற்கு தற்காலிகமாக பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை என வனத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால், நடுமலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக்கழக பணிமனை, நகராட்சி சுற்றுலா மாளிகை உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வறட்டுப்பாறை பகுதி கொண்டை ஊசி வளைவு அருகே நிலச்சரிவு ஏற்பட்டதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சோலையார் அணைக்கு செல்லும், பன்னிமேடு சாலையிலும் மண் சரிவு […]
கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால், நடுமலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக்கழக பணிமனை, நகராட்சி சுற்றுலா மாளிகை உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வறட்டுப்பாறை பகுதி கொண்டை ஊசி வளைவு அருகே நிலச்சரிவு ஏற்பட்டதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சோலையார் அணைக்கு செல்லும், பன்னிமேடு சாலையிலும் மண் சரிவு […]
வாடகைக்கு விடப்பட்ட அறையில் 60 லட்சம் மதிப்பிலான பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கோவையில் அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுக்கட்டாக சிக்கியது தொடர்பாக தொழிலதிபர்கள் இருவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல்லைச் சேர்ந்த தஸ்தகீர் என்பவர் தனது நண்பர்கள் 4 பேருடன் கோவை பீளமேடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், கடந்த 4ம் தேதி வாடகைக்கு ஒரு குடியிருப்பை எடுத்துள்ளார். காரில் வந்த அவர்கள், தாங்கள் கொண்டு வந்த தோல் பையை அறையினுள் வைத்துவிட்டு சென்றனர். இதனால் சந்தேகம் […]
கோவை உடையாம்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவர் மருத்துவ கருவிகளை தயாரிக்க 3 ஆயிரம் சதுரஅடியில் தொழில்கூடம் கட்டினார். இதற்கு மாநகராட்சி நிர்வாகம் வரி விதிப்பதற்காக முறைப்படி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தை அணுகினார். வரிவிதிக்கப்பட்டால் தான் அந்த கட்டிடம் அங்கீகரிக்கப்படுவதுடன், வங்கிக்கடன் உள்ளிட்டவற்றுக்கு அணுகமுடியும் என்பதால் அனைத்து ஆவணங்களையும் மாநகராட்சி அலுவலகத்தில் கொடுத்தார். இதற்கான கட்டணத்தையும் அவர் செலுத்தினார். தொழில்கூடத்தை பார்வையிட்டு, வரி விதித்து, அதற்கான புத்தகத்தை வழங்குவதற்காக மாநகராட்சி உதவி வருவாய் அதிகாரி காளம்மாள் (வயது […]
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளியில் தனியார் தென்னை நார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஓஷா என்ற வாலிபரும் பத்மாவதி என்ற இளம் பெண்ணும் வேலைக்கு சேர்ந்தனர். இந்நிலையில் நேற்று அவர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென்று அவர்கள் இருவரும் தங்களுக்கு மயக்கம் வருவதுபோன்று இருப்பதாக சக தொழிலாளியிடம் தெரிவித்தனர். உடனே அவர்கள் அந்த 2 பேரையும் அந்தப்பகுதியில் உள்ள […]
கோவை மாவட்டம் குனியமுத்தூரை சேர்ந்தவர் இளங்கோ இவர் கோவை அரசு மருத்துவ கல்லூரியில் பொது அறுவை சிகிச்சை துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மல்லிகா. இவர் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் இன்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு அருண்திலக் , தனுஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் அருண்திலக் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். தனுஷ் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-வது ஆண்டு இன்ஜினீயரிங் […]
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள புதிய காய்கறி மார்க்கெட்டில் 100-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன.இந்த மார்க்கெட்டில் இருந்து கேரளா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு கய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இங்கு தினமும் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முட்டைகோஸ், கேரட், பீட்ரூட், முள்ளங்கி, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் லாரிகளில் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.இந்த ஆண்டு மார்க்கெட்டுக்கு முட்டைகோஸ் 20 லாரிகள், கேரட் 25 டன்னில் இருந்து 30 டன், பீட்ரூட் 500 மூட்டை, முள்ளங்கி 100 மூட்டை, […]
ரூ.12 லட்சத்திற்கு குடிசை மாற்றுவாரியத்தில் வீடு வாங்கி தருவதாககூறி மோசடி நடந்தது. இது தொடர்பாக கோவை கலெக்டர் அலுவலகம் முன் கணவன்-மனைவி இருவரும் தீக்குளிக்க முயன்றனர். கோவை கலெக்டர் அலுவலகத்தில் கடந்த திங்கள்கிழமை அன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டு மனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்திருந்தனர்.இதையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு ரேஸ்கோர்ஸ் போலீசார் நேற்று […]
கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் நடத்திய வாகன சோதனையில் 18 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இருந்து கோவை மாவட்டம் வழியாக கேரள மாநிலத்திற்கு ரேசன் பொருட்கள் அதிகளவில் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு கோவை மாவட்ட எல்லைகளில் தீவிர வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனைகள் மூலம் ரேசன் பொருட்கள் கடத்தப்படுவது பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது. மேலும், கோவை ரயில் நிலையங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. […]
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை அருகே சிறுத்தை தாக்கியதில் 11 வயது சிறுமி காயமடைந்தார். பெரியகல்லார் பகுதியை சேர்ந்த சிறுமி சத்தியா, தமது வீட்டின் பின்புறம் விறகுகளை காயவைத்துள்ளார். அப்போது, தேயிலை தோட்டத்தில் மறைந்திருந்த சிறுத்தை, சத்தியாவை தாக்கியுள்ளது. அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சிறுமியின் தாயார், விறுகு கட்டைகளை வீசி எறிந்து சிறுத்தையை விரட்டினார். பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுத்தை நடமாட்டம் அதிகரித்திருப்பதால் அச்சத்துடன் வசிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் செய்திகளுக்கு […]
பெங்களூரூவில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட 840 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோவை ராஜவீதி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற இரு சிறிய ரக சரக்கு வேன்களை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் சரக்கு வேன்களின் ஓட்டுனர்கள் ஆட்டோக்களை நிறுத்தி விட்டு தப்பி ஓடினர். ஓட்டுனர்களை துரத்திப்பிடித்த போலீசார், மினி ஆட்டோக்களில் சோதனை நடத்தியர். அதில் 840 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி […]