கோவை மாவட்டத்தில் கனமழையால் வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்தார் ஆட்சியர் ஹரிஹரன். கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணாமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் கனமழையால் வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்தார் ஆட்சியர் ஹரிஹரன். DINASUVADU
கோவை அருகே மோமனூர் குளக்காடு பகுதியில் வீட்டில் இருந்து குட்கா, பான்மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வீட்டை கிடங்காக மாற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.7 லட்சம் மதிப்பு புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒரு டன் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். DINASUVADU
கோவை அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை கடத்தபட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 3 மாத பெண் குழந்தை கடத்தப்பட்டுள்ளார். கார்த்திக் என்பவரது குழந்தை கவிஸ்ரீயை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்தியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. DINASUVADU
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கோவையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சின்னசாமியை கைது செய்தனர். அதிமுக தொழிற்சங்க பேரவை செயலாளராக இருந்தபோது ரூ.8 கோடியை கையாடல் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சின்னசாமியை கைது செய்தனர். முன்னதாக அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளராக இருந்த சின்னசாமி தற்போது அமமுகவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. DINASUVADU
கோவை மாவட்டம் வால்பாறையில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை என்று கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். DINASUVADU
கோவை மாவட்டம் வால்பாறையில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் நாளை ஒரு நாள் விடுமுறை என்று கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். DINASUVADU
மின் இணைப்பு வழங்க கோவை ஆவாரம்பாளையத்தில் லஞ்சம் பெற்ற மணிவேல் என்ற அதிகாரிக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது கோவை ஊழல் தடுப்பு வழக்குகள் நீதிமன்றம்.மேலும் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.
விடுதி காப்பாளர் புனிதா மாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததை ஒப்புக்கொண்டார். கோவை குற்றவியல் நீதிமன்றம் நேற்று கோவையில் மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் கைதான விடுதி காப்பாளர் புனிதாவை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து விடுதி காப்பாளர் புனிதா நடத்திய விசாரணையில் ,மாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததை ஒப்புக்கொண்டார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கோவையில் பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிபட்டியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கோவை குற்றவியல் நீதிமன்றம் கோவையில் மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் கைதான விடுதி காப்பாளர் புனிதாவை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஆகஸ்ட் 26இல் கோவையில் வீட்டில் பிரசவம் பார்ப்பதற்காக நடத்தப்படவிருந்த இலவச பயிற்சி முகாமை ரத்து செய்து கோவை மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கோவையில் ஆடி கார் மோதி 6 பேர் உயிரிழந்த விவகாரத்தில் கார் ஓட்டியபோது மது அருந்தி இருந்ததாக ஓட்டுநர் ஜெகதீஷ்குமார் ஒப்புதல் அளித்துள்ளார். அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் கோவையில் சாலையோரம் நின்றிருந்த 6 பேர் உயிரிழந்தனர்.பின்னர் நேற்று அந்த காரின் ஓட்டுனர் ஜெகதீஷ்குமார் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது காவல்துறையிடம் கார் ஓட்டியபோது மது அருந்தி இருந்ததாக ஓட்டுநர் ஜெகதீஷ்குமார் ஒப்புதல் அளித்துள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் கோவையில் சாலையோரம் நின்றிருந்த 7பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் கல்லூரி மாணவி, 2 பெண்கள் உட்பட 7பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் காயமடைந்த 2பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கோவை விமானநிலையத்தில் தங்கக்கட்டிகளை விமானம் மூலம் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை விமானநிலையத்தில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.விமானம் மூலம் டிவி மற்றும் அயர்ன் பாக்ஸில் தங்கக்கட்டிகளை கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொழும்புவில் இருந்து கோவைக்கு தங்கம் கடத்திய முகமது அலீப், அன்சாரி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
அரசு சார்பில் கோவை அருகே சிங்காநல்லூர் தொகுதியில் அமைக்கப்பட்ட பூங்காக்கள்,சிந்தாமணி கூட்டுறவு மண்டபம், அரசு மேல்நிலைப் பள்ளி Laboratory மற்றும் அம்மா ABC kit போன்ற நலத்திட்டங்களை தமிழக அமைச்சர்கள் SP வேலுமணி மற்றும் செல்லூர் ராஜு ஆகியோர் துவக்கிவைத்தனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கேரள போலீசாரை தாக்கி கோவை அருகே கனியூர் சுங்கச்சாவடியில் பைனான்சியரை மீட்டது கும்பல். போலீஸ் வாகனத்தை 30க்கும் மேற்பட்டோர் வழிமறித்து தாக்கி பைனான்சியர் மகாராஜனை மீட்டுச் சென்றனர். காரை அடமானம் வைத்து பெற்ற கடனை திரும்பச் செலுத்தியும் காரை தர மறுப்பதாக மகாராஜன் மீது புகார் செய்யப்பட்டது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தமிழகத்திற்கு பாஜக எந்த துரோகமும் செய்யவில்லை என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கோவையில் கூறுகையில்,எந்த திட்டம் கொண்டுவந்தாலும் ஒரு சிலர் எதிர்க்கின்றனர். வாகன நெரிசலை குறைப்பதற்காக பாலம் காட்டினால் அதற்கும் எதிப்பு தெரிவிக்கின்றனர்.மேலும் தமிழகத்திற்கு பாஜக எந்த துரோகமும் செய்யவில்லை. காவிரி பிரச்சனையில் திமுகவும், காங்கிரஸ்-சும் தான் துரோகம் செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் மட்டும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று கோவையில் உள்ள வால்பாறையில் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இன்று வால்பாறையில் தொடர் கனமழை காரணமாக ஒருநாள் விடுமுறை என்று கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கோவையில் உயிரிழந்த மாணவி லோகேஷ்வரியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேற்று பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது கோயம்புத்தூரில் அருகே நரசிபுரத்தில் தனியார் கல்லூரியில் மாணவி உயிரிழந்தார். 2ஆவது மாடியில் இருந்து பாதுகாப்பு கயிறு கட்டாமல் பயிற்சியாளர் தள்ளியதில் லோகேஸ்வரி உயிரிழந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. மாணவியை பிடிப்பதற்காக மாணவர்கள் வலையுடன் இருந்தபோது சன்ஷேடில் அடிபட்டு உயிரிழந்தார். மாணவி உயிரிழந்த காரணத்தால் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்தது. பின்னர் உயிரிழந்தது தொடர்பாக பயிற்சியாளர் ஆறுமுகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. […]
மாணவி லோகேஸ்வரியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். நேற்று பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது கோயம்புத்தூரில் அருகே நரசிபுரத்தில் தனியார் கல்லூரியில் மாணவி உயிரிழந்தார். 2ஆவது மாடியில் இருந்து பாதுகாப்பு கயிறு கட்டாமல் பயிற்சியாளர் தள்ளியதில் லோகேஸ்வரி உயிரிழந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. மாணவியை பிடிப்பதற்காக மாணவர்கள் வலையுடன் இருந்தபோது சன்ஷேடில் அடிபட்டு உயிரிழந்தார். மாணவி உயிரிழந்த காரணத்தால் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்தது. பின்னர் உயிரிழந்தது தொடர்பாக பயிற்சியாளர் […]