தேசிய மாணவர் படை மாணவர்களுக்கான ஆண்டு இறுதி பயிற்சி முகாம் கோவையில் ஞாயிறன்று துவங்குகிறது. இதுகுறித்து தேசிய மாணவர் படை முகாமின் மக்கள் தொடர்பு அலுவலர் ஆல்பர்ட் அலெக்ஸாண்டர் கூறுகையில், கோவை தமிழ்நாடு பீரங்கி தேசிய மாணவர் படை பிரிவு சார்பாக தேசிய மாணவர் படை மாணவர்களுக்கான பயிற்சி முகாம் அக்.21 முதல் அக்.30 வரை சிங்காநல்லூர் ஜெயந்திர சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் நடைபெறுகிறது. கர்ணல் சம்சீர் சிங் தலைமையில் நடைபெறும் இம்முகாமில் கோவை அரசு கலைக்கல்லூரி, […]
கோவை அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களை திரட்டி பகத்சிங் பிறந்தநாளை கொண்டாடிய மாணவி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். கோவை அரசு கலைக்கல்லூரியில் சுதந்திரபோராட்ட வீரர் பகத்சிங் பிறந்தநாளை மாணவர்களை திரட்டி கொண்டாடியுள்ளார் எம்.ஏ வரலாறு பயின்று வந்த மாணவி மாலதி. அப்போது அந்த கூட்டத்தில் கல்லூரியின் நிறை, குறைகள் பற்றி மாணவி பேசியதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த இடைநீக்கம் குறித்து கல்லுரி நிர்வாகம் தரப்பில் சம்பந்தப்பட்ட மாணவி அடிக்கடி தலைவர்களின் பிறந்தநாளை கொண்டாட அனுமதி கேட்பார். இதனால் வகுப்புகள் நடக்க […]
விவசாய நிலங்களை அழித்து கரூர்-கோவை ஆறு வழிசாலை அமைக்க கூடாது என வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது கரூர் முதல் கோவை வரை ஆறு வழி பசுமை சாலை (என்.ஹெச் 67) அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி கோவை கிழக்கு புறவழிச்சாலை அமைக்கவும் மத்திய, மாநில அரசுகள் சார்பில் சுமார் 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சாலை திட்டத்தால் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் […]
கோவையில் காவல்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்ட மதநல்லிணக்கம் கருத்தரங்கிற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக மக்கள் ஒற்றுமை மேடை கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: கோவை மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினத்தையொட்டி 2.10.2018 அன்று நடைபெறவுள்ள மதநல்லிணக்க கருத்தரங்க நிகழ்ச்சிக்கு கோவை மாநகர காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவை மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கோவை […]
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயமாக அமைக்கப்படும் என மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவருமான தம்பிதுரை உறுதியளித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட திட்டம் எக்காரணம் கொண்டும் நிறுத்தி வைக்கப்படாது எனக் கூறினார். விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் ஏற்க மாட்டோம் எனக் கூறிய அவர், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் எனத் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் திராவிட […]
கடந்த வாரம் இந்தியா வந்த இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷே இலங்கையில் நடைபெற்ற போருக்கு காங்கிரஸ் தலைமையிலான அரசு உதவிகளை கூறியிருந்தார். அவர் மேலும் கூறியதாவது, காங்கிரஸ் – திமுக கூட்டணி அரசின் பொருளாதார உதவிகளால் தான் சிங்கள ராணுவம், தமிழர் பகுதிகளை சூறையாடியது என்பதும், பல லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதும், தமிழ் பெண்கள் பல்லாயிரக்கணக்கானோர் கற்பழித்து படுகொலை செய்யாட்டார்கள் என்று இலங்கை முன்னாள் அதிபர் தன் வாயினாலேயே கூறியுள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் – […]
கோவை மாவட்டத்தில் திங்கள் கிழமை பரவலாக பலத்தமழை பெய்தது. இதனால் சாலைகள் எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சில இடங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்தது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று இரண்டாம் நாளும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதில் மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உடுமலை நகரம் கோவை – திண்டுக்கல் சாலை அமைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அணைத்து வாகனங்களும் நகருக்குள் வந்து போவதால் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்நிலையில் திட்டச்சாலை அமைப்பதற்கான கருத்துரு நகராட்சி நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்டது. இந்த கருத்துருவின்படி, தேசிய நெடுசாலையானது, நகர எல்லையில் மின்மயானம் அருகே பிரிந்து, செஞ்சுரி மலை ரோடு, பல்லடம், தாராபுரம் போன்ற மாநில நெடுஞ்சாலை தொட்டு, எஸ்.வி மில் அருகே மீண்டும் தேசிய நெடுஞ்சாலையில் இணையும் வகையில் திட்டச்சாலை அமைக்க […]
கோவையில் கொட்டிய கனமழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கோவையில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது இதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாகவே கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான வெயில் வாட்டி வதைத்த வந்த நிலையில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலை தொடங்கிய மழை கனமழையாக மாறியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. கோவையில் காந்திபுரம், ரயில்நிலையம், […]
உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது மு.க.ஸ்டாலின் தமிழகத்துக்கு என்ன செய்தார்? என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பினர்… கோவை முதல்வர், துணை முதல்வருக்கு துணையாக இருப்பதால் எங்கள் மீது வேண்டுமென்றே பொய் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் சுமத்துகிறார். உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது அவர் தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார். கோவை பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி […]
மத்திய பிஜேபி அரசின் ரஃபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் தொடர்பாக கோவையில் காங்கிரஸ் கட்சியினர் இன்று ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசு கூறியதாவது, “ரஃபேல் போர் விமானம் வாங்கும் ஒப்பந்தத்தில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தற்போதைய மத்திய அரசு மக்கள் மீது பெட்ரோல் விலையேற்றத்தை பரிசாக அளித்துள்ளது.எனவே மக்கள் இந்த பிஜேபி அரசு வீழ வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள் என்றார்.தொடர்ந்து பேசிய […]
கோவை மாவட்டம் ராமநாதபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். கோவை : ராமநாதபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தீவிபத்து ஏற்பட்டது வகுப்பறையில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்து வருகிறன்றனர்.மேலும் மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் இதில் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. DINASUVADU
மதுக்கரை ராணுவ முகாம் எதிரே, போர்களில் பயன்படுத்தப்பட்ட ராணுவ பீரங்கி பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மதுரை அருகே ராணுவத்தின், 44வது பாட்டாளியன் முகாம் உள்ளது. இம்முகாமில் எதிர்பகுதியில், 1972ல் வடிவமைக்கப்பட்ட பீரங்கி வாகனம் ‘ஜோராவார்’ மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் தலைமை ராணுவ அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். இம்முகாமினை எளிதில் அடையாளம் காணும் வகையில், பல போர்களில் பயன்படுத்தப்பட்டு, 2006ல் ஒய்வு தரப்பட்ட பீரங்கி வாகனம் வைக்கப்பட்டுள்ளது. இதன் […]
கோயம்புத்தூர் மற்றும் சேலம் நகரங்களில் இந்திய எண்ணெய் கழகம் (என்.ஓ.ஓ.) வாடிக்கையாளர்களுக்கு எரிவாயு குழாய் மூலம் மூன்று வருடங்களுக்கு வழங்கப்படும். இந்த நிறுவனங்களில் நகரத்தின் வாயு விநியோக வலைப்பின்னலை செயல்படுத்துவதற்கான பணியை அரசு ஒதுக்கியுள்ளது. சமீபத்தில் ஏல நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதன் மூலம், ஆரம்ப வேலைகள் ஆரம்பிக்கப்படும். இது, மூன்று ஆண்டுகளில் முடிவடையும் என்று தமிழ்நாடு மாநில ஐஓசி நிர்வாக இயக்குனர் ஆர்.சித்தார்த்தன் தெரிவித்தார். குழாய்களை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது, இது வேறு எந்த குழாய்-முட்டை திட்டங்களைப் […]
கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் வனப்பகுதியில் யானைகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக வனத் துறை செவ்வாயன்று கேமரா பொருத்தப்பட்ட சிறிய சோதனை விமானத்தை நடத்தியது. ஒரு கேமராவுடன் பொருத்தப்பட்ட ட்ரோன், மாங்கரையில் நகரும் யானைகளின் கூட்டத்தின் இயக்கம் கைப்பற்றப்பட்டது. டி.என்.டி.யில் இருந்து வந்த சப்தத்தின் உதவியுடன் அதிகாரிகள் மீண்டும் கரையோரப் பகுதிக்குச் சென்றனர். மாவட்ட வன அதிகாரி டி. வெங்கடேஷ் கூறுகையில், மோனாராயிலுள்ள வன எல்லைக்கு அருகே ஒரு பட்டா நிலத்திலிருந்து டிரோன் சோதிக்கப்பட்டது. “ட்ரோனை இயக்க 9 க்கும் மேற்பட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு […]
வால்பாறை பகுதியில் எஸ்டேட் மற்றும் குடியிருப்புகளில் மண் சரிவு -விரிசல் ஏற்பட்டு உள்ளதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதியில் கடந்த ஓரு வாரத்திற்கு முன்புவரை கனமழை பெய்து வந்தது. தொடர் மழைகாரணமாக ஆங்காங்கே தேங்கியிருந்த தண்ணீர் முழுவதும் பூமிக்குள் இறங்கி வடியத் தொடங்கி வருவதால் பல இடங்களில் தேயிலைத் தோட்ட பகுதிகளில் மண்சரிவும் , பூமியில் விரிசல்கள் ஏற்பட்டும் வருகிறது. இந்த நிலையில் வால்பாறை அருகே உ உள்ளிட்ட எஸ்டேட் […]
கோவை: மத்திய அரசின் தேசிய பஞ்சாலை கழகத்துக்கு உட்பட்ட பஞ்சாலைகள் கோவையில் 5 இடங்களிலும் காளையார் கோவில், கமுதக்குடி ஆகிய இடங்களில் தலா ஒரு ஆலை என மொத்தம் 7 ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளார்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தொழிற்சங்கத்தினர் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், புதிய ஒப்பந்தம் போட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது. […]
கோவை: இந்த ஆண்டு நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகிய கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் ஆர்.ஸதி என்பவர் மட்டும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருதுகுறித்து தலைமை ஆசிரியை ஆர்.ஸதி கூறியதாவது:-நான் 23 ஆண்டுகளாக வரலாற்று ஆசிரியராக பணி புரிகிறேன். கடந்த 2009-ம் ஆண்டு பணி உயர்வு பெற்று மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். நான் இங்கு வந்த போது 146 மாணவ, […]
கோயம்புத்தூரில் இருந்து வெள்ளநிவாரண பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து சிஆர்பிஎப் நற்பணி மன்றம் சார்பில் 12 லாரிகளில் வெள்ளநிவாரண பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. திருச்சூர் மற்றும் சாலக்குடி பகுதிகளுக்கு இந்த பொருட்களை அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் ராணுவ அதிகாரிகள் ஈடுபட்டனர். DINASUVADU
இந்திய மாணவர் சங்கத்தின் 25வது வெள்ளி விழா தமிழ் மாநில மாநாடு கோவையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்திய மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.இதில் இந்திய மாணவர் சங்கத்தின் புதிய மாநில தலைவராக A.T.கண்ணன் தேர்வு செய்யப்பட்டார்.அதேபோல் முன்னதாக இந்திய மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்த V.மாரியப்பன் தற்போது மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மேலும் 83பேர் கொண்ட மாநிலக்குழுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். DINASUVADU