கோவையில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கோவையில் நாகமணி என்பவர் (47) காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. மேலும் 1 வயது குழந்தை மித்ரா காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கும் எங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளனர். இது அப்பகுதியில் சோகத்தை […]
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பாதுகாப்பு துறை சார்பில் நிவாரண உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டது. தமிழக வியாபாரிகளுடன் இணைந்து, கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு, பல லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் உணவு பாதுகாப்பு துறை சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும் மருந்து கட்டுப்பாடு நிர்வாக துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறுகையில், மக்களுக்கு தேவியான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், நிவாரண பொருட்கள் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
கோவை அரசு மருத்துவமனையில் மூதாட்டி ஒருவர் உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த அவரை பிணவறைக்கு கொண்டு செல்லாமல் இரவு நேரம் என்பதால் வார்டின் தரையிலேயே கிடத்தி வைத்துள்ளனர். இதனையடுத்து அணுகு சுற்றி திரிந்த பூனை ஒன்று அவரது உடலை கடித்து திண்றுள்ளது. இதனையடுத்து, மருத்துவமனையில் உள்ளவர்கள் அந்த பூனையை துரத்தி விட்டனர். இது தொடர்பாக அங்குள்ள மருத்துவர்களிடம் சொன்னபோது அவர்களை மருத்துவம் பார்ப்பது மட்டும் தான் […]
கோவை மக்கள்நல்லுறவு நலச்சங்கம் சார்பில் கணபதியை மார்பிள் சில திறக்கப்பட்டது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு கோவை மக்கள் நல்லுறவு சங்கம் சார்பில் மார்பளவு சிலை மார்பிளில் செய்யப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இது ஜெய்ப்பூர் கலைஞர்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் மக்கள் நல்லுறவு நலச்சங்க தலைவர் சுகுர்லா பாபு, துணை தலைவர் விஜய் விநாயக் மற்றும் செயலாளர் மோகன்ராஜ் உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
கஜா புயல் காரணமாக கோவை மாவட்டத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. கஜா கரையை கடந்த போதும் சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் அதி சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளையும் தொடர்ந்து மலை பெய்யும் என தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
பட்டாசு வெடித்தது தொடர்பாக இந்து மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் அர்ஜூன் சம்பத் உள்பட 5 பேருக்கு தலா ரூ. 1000 அபராதம் விதித்துள்ளது நீதிமன்றம். கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதானது. இந்நிலையில் இந்து மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் அர்ஜூன் சம்பத் உள்பட 5 பேர் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டாடும் விதமாக கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து […]
கோவை மாவட்டம், சூலூர் அடுத்த காங்கயம்பாளையம் ஏ.டி., காலனியில் சிலர் சட்டவிரோதமாக ,மதுவிற்பனை செய்வதால், அங்குள்ள குடிமகன்களால் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர். அந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இதனையடுத்து 20க்கும் மேற்பட்டோர் அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளனர், இதனையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.
தமிழகமெங்கும் பன்றிக்காய்ச்சல் பாதிப்புகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில், இதனை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது சுகாதாரத்துறை, இருப்பினும் காய்ச்சலால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். கோவையில் கடந்த சில நாட்களில் மட்டும் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
கோவை மாவட்டம் குனியமுத்தூர் சரஸ்வதி நகரில் நடராஜன் என்பவர் அவரது குடும்பத்தோடு வெளியூர் சென்றிருந்தபோது வீட்டின் கதவை உடைத்து 30 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர் மர்ம நபர்கள். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரு காட்டு யானைகள் தடாகம் பகுதியில், ஊருக்குள் நுழைந்து பயிர்களை சேதம் செய்து வருகிறது. இந்த காட்டு யானைகளை கும்கி வணிகளை கொண்டு விரட்ட வனத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக தெப்பக்காடு யானைகள் முகாமிலிருந்து ஜம்பு, விஜய் என்ற இரண்டு கும்கி யானைகள் கோவைக்கு கொண்டு வரப்படவுள்ளது. இதன்படி 2 கும்கி யானைகள் லாரிகள் மூலம் கோவைக்கு நேற்று மதியம் கொண்டுவரப்பட்டது.
தமிழகத்தில் தொடர்ந்து காய்ச்சல்கள் பரவி வருகிற நிலையில்,காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலியாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொன்டே போகிறது. கோவையில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மூன்று பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.இவர்கள் மூன்று பேரும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்து உள்ளனர்.இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கோவையில் அரசு மருத்துவமனையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 பேர் அனுமதிக்கப்பட்டனர். சிறுமி சுபஸ்ரீ, கதிர்வேல்,ராஜ்குமார், போத்திராஜ் ஆகியோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் 2 பேர் பன்றிகாய்ச்சலோடு இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் மாவட்டம் கன்னிவாடியை சேர்ந்தவர் கவிதா. இவர் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இவர் சிகிச்சை பெரு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கோவை சிறை வளாகத்தில் சி.ஆர்.பி.எப் முகாமில் அண்ணாதுரை என்பவர் தலைமை காவலராக இருந்துள்ளார். இந்நிலையில் இவரை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நவ.3ம் தேதி முதல் தலைமை காவலரான அண்ணாத்துரையை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு மருத்துவமனைக்கு வருபவர்களை அனுமதிக்க காலதாமதம் செய்யும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் எஸ்.பி்.வேலுமணியுடன் இணைந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.அதன் பின்னர் அவர் கூறுகையில், காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனைக்கு வருபவர்களை அனுமதிக்க காலதாமதம் செய்யும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுகின்றதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் படி, சுகாதாரதுறை இயக்குனர் எட்வின்ஜோவிற்கு சுகாதாரத்துறை […]
கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின், குளங்களை மேம்படுத்தும் வகையில் அவற்றில் சாக்கடை கலப்பதை தடுப்பதற்கு, முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள எட்டு குளங்கள், ” ஸ்மார்ட் சிட்டி ” திட்டத்தில், 500 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகவுள்ளது.
தமிழகமெங்கும் காய்ச்சல்கள் பரவி வருகின்ற நிலையில், கோவையில் வசந்தா (62) மற்றும் கணேசன் (57) ஆகியோர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் இவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு சிறுவன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை வணிகர்கள் மக்கள் நலன் கருதி, தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்புகளின் மாவட்டத் தலைவர் இருதயராஜா தலைமையில் மாநகர காவல் ஆணையர் சுமித் சரணிடம் மனு அளித்துள்ளனர். இந்த மனுவில், இரவு நேரங்களில் உள்ளூர், வெளியூர்களில் இருந்து அதிக அளவில் மக்கள் வருகின்றனர். இவர்கள் நள்ளிரவில் உணவு கிடைக்காமல் அவதிக்கு ஆளாகின்றனர். எனவே நள்ளிரவு 12 மணி வரையில் கடைகள் திறந்து வைக்க அனுமதிக்க வேண்டும் என வணிகர்கள் சங்கம் சார்பில் மாநகர காவல் ஆணையரிடம் மனு […]
ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. கோவையில் அண்மையில் நடைபெற்ற பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங் கிணைப்பாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்: கல்வி உரிமைச் சட்டத்தின் படி அனைத்து அரசு, அரசுஉதவி பெறும் பள்ளிகளில் பள்ளி மேலாண் மைக் குழு அமைத்து பெற் றோர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ வேண்டும். ஒரு ஆசிரியருக்கு ஒரு வகுப்பறையும், ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியாக ஆசிரியர்கள் நியமிக்க வேண் டும். ஒன்றாம் வகுப்பு முதல் 5 […]
பல இடங்களில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், கோவை மாவட்டத்தில் 9 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் 4 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கோவை மாவட்ட சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.