கோவையில் மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கோவை மாவட்டம் வால்பாறையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை சார்பில் கலாசாரம் மற்றும் மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் கோவை விழிகள் கலைக்குழுவினர் சார்பில் கள்ளச்சாராயம் மற்றும் மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி நாடகங்கள், நடனம் மற்றும் பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை மக்கள் அனைவரும் வேடிக்கையாக பார்த்து சென்றனர்.
கோவையில் சக்தி என்பவரை மறுமணம் செய்து கொள்கிறார் கவுசல்யா உடுமலை அருகே குமரலிங்கத்தைச் சேர்ந்த சங்கர், கவுசல்யாவை காதலித்து கலப்புத் திருமணம் செய்தார். சாதி மறுப்பு திருமணம் செய்ததால் 2016ல் உடுமலை அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார் சங்கர்.கொலை தொடர்பான வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவையில் சக்தி என்பவரை மறுமணம் செய்து கொள்கிறார் கவுசல்யா. கௌசல்யா கோவையில் பறை இசைக்குழு நடத்திவரும் சக்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில் அரசின் நிலை எப்போதும் மாறாது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில், 4 வழிச்சாலையை 8 வழிச்சாலையாக மாற்றுவதால் விபத்துகள் குறையும்.கோவையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில் அரசின் நிலை எப்போதும் மாறாது என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவையில் கடந்த 40 நாட்களாக மதுக்கரை வனசரகப் பகுதியில் சிறுத்தை ஒன்று ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. இதனையடுத்து மக்கள் அச்சத்தில் வெளியே வர இயலாமல் தவித்து வந்தனர். இந்நிலையில், இந்த சிறுத்தை அந்த கிராமத்தில் 8 ஆடுகளை கொன்று தனக்கு இரையாக்கியுள்ளது. இதனையடுத்து மக்களும் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், வனத்துறையிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து வனத்துறையினர் 40 நாட்களாக அந்த பகுதியில் சுற்றி திரிந்த சிறுத்தையை கூண்டுக்குள் சிக்க வைத்து கொண்டு சென்றனர்.
கோவை மாவட்டம் இராமநாதபுரம் பகுதியில், கழிவுநீர் கால்வாயில் இருந்து ஆண் குழந்தை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் பகுதியில், கழிவுநீர் கால்வாயில் இருந்து தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையில் ஆண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த குழந்தையை போலீசார் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.இதனையடுத்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த குழந்தைக்கு 5 முதல் 6 மாதங்கள் வரை தான் ஆகி இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பெண் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில்காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிந்துள்ளனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளனர். கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த போத்தனூரை சேர்ந்த வேலாயுதம் (65), நிலம்பூரை சேர்ந்த பழனிசாமி (61) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.அதேபோல் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சலுக்கு 21 பேர், டெங்குவிற்கு 4 பேர், வைரஸ் காய்ச்சலுக்கு 60 பேர் என 85 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை மாவட்டம் தெலுங்குபாளையம் பகுதியில் பல்வேறு இடங்களில் புதிய கட்டிடங்களுக்கான கட்டுமானபணியை, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி துவக்கி வைத்தார். கோவை தெலுங்குப்பாளையம் பகுதியில் உள்ள செல்வபுரம்,இந்திரா நகர் பகுதிகளில் அம்ருத் திட்டத்தின் கீழ் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் மூடியுடன் கூடிய மழை நீர் வடிகால்,10 லட்சம் ரூபாய் மதிப்பில் வரிவசூல் மையம், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 288 அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகிய கட்டுமான பணிகளுக்கு […]
கோயம்புத்தூர் அத்தார் பள்ளிவாசலில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் பலர் கலந்து கொண்டனர். கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள அத்தார் ஜமாத் பள்ளி வாசலில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிறப்பு தொழுகை செய்யப்பட்டது. தொழுகையில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் நிதி உதவியும் செய்தனர்.5 லட்ச ரூபாய் மதிப்பிலான அரிசி,பாய் , போர்வை மற்றும் அத்தியாவசிய பொருட்களை வேதாரண்யம் பகுதிக்கு அனுப்பி வைக்கின்றனர்.புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் , இது போன்ற இன்னல்கள் வரும் நாட்களில் […]
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோவை டெய்ஸி மருத்துவமனை சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள், மற்ற மாநில மக்கள் என அனைவரும் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவை டெய்ஸி மருத்துவமனை சார்பில், நாகையில் வீடின்றி தவிக்கும் மக்களுக்கு தற்காலிகமாக வீடுகள் அமைப்பதற்கு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள தார்பாய்கள் அனுப்பப்பட்டுள்ளது.
கோவையில், பள்ளியின் சுற்றுச்சுவரை உடைத்துக் கொண்டு, யானை நுழைந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது கோவை கணுவாய் பகுதியில் உள்ள சஞ்சீவி நகர் குடியிருப்பு பகுதிக்குள் வந்த யானை ஒன்று திடீரென அங்குள்ள அரசு பள்ளியின் சுற்றுச்சுவரை உடைத்தது. ஆக்ரோசம் குறையாத நிலையில் அந்த யானை திடீரென பள்ளிக்குள்ளும் புகுந்து விட்டது.இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், பொதுமக்கள் உதவியுடன் பட்டாசுகளை வெடித்து, யானையை காட்டுக்குள் […]
கோவை மத்திய சிறையில், மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட் நீதிபதி ஆய்வு செய்துள்ளார். மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட் நீதிபதி சக்திவேல் கோவை சிறையில் ஆய்வு நடத்தியுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகளை சந்தித்து பேசியுள்ளார். நீதிபதி சக்திவேல் அவர்களிடம், அடிப்படை வசதிகள் சிறப்பாக வழங்கப்படுகிறதா என்று கேட்டுள்ளார். சிறை நிர்வாகம் அடிப்படை வசதிகளை சிறந்த முறையில் செய்து தருவதாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து சிறை வளாகத்தை சூரி பார்த்துவிட்டு, சிறை எஸ்.பி யிடம் ஆலோசனை […]
கோவை தனியார் மருத்துவமனையில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து காய்ச்சலால் உயிரிழப்பவரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கஞ்சநாயக்கர் (75) காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவர் கோவை தனியார் மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து, இவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே குடியிருப்புக்குள் புகுந்த 6 காட்டு யானைகள், வீடுகளை இடித்து சேதப்படுத்தியதால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர். சின்னக்கல்லார் பகுதியில் புகுந்த 6 காட்டு யனைகள் வீடுகளை இடித்து சேதப்படித்தியது. இதனால் வீட்டிலிருந்த பொருட்கள் சேதமாகின. யானை புகுந்தது குறித்து கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்ததாகத் தெரிகிறது. ஆனால் வனத்துறையினர் வரவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.வன விலங்குகளிடம் இருந்து தங்களை பாதுகாக்க வேண்டும் எனவும், பாதுகாப்புக்காக வன அலுவலர்களை பணியில் […]
கோவை அரசு மருத்துவமனை எதிரே உள்ள 10-க்கும் மேற்பட்ட கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். கோவை அரசு மருத்துவமனைக்கு எதிரே 10-க்கும் மேற்பட்ட கடைகளில் உணவு தரம் சரியில்லை என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.இதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள கடைகளில் ஆய்வு நடத்தினர்.அப்போது அங்கு உள்ள டீக்கடையில் உள்ள டீ யின் தரம் மற்றும் பால் தரம் ஆய்வு செய்யப்பட்டது. அதேபோல அந்த […]
வளரும் இளம்பெண்ணின் மேம்பாட்டுக்காக இலவச கல்வி, தையல், கல்வி, அழகு கலை உள்ளிட்ட பயிற்சிகளை கேர்-டி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் பயிற்சி அளிக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 175 குழந்தைகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் சுற்றுசூழல் பாதுகாப்பு நிகழ்ச்சியில் பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் சாம்சன் குழந்தைகளின் உரிமைகள் குறித்து பேசியுள்ளார். மேலும் பாலியல் வன்முறை மற்றும் அதிலிருந்து பாதுக்காப்பது குறித்து கள ஒருங்கிணைப்பாளர் பவித்ராதேவி பேசியுள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோவை மாவட்ட பள்ளி மாணவர்கள் நிவாரணம் அளித்துள்ளனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில், எல்லப்பாளையம் நடுநிலைப்பள்ளி சார்பில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 11 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களும் மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் 1.75 ஆயிரம் மதிப்புள்ள நிவாரணம் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் பலரும் உதவி வருகின்ற நிலையில், பள்ளி மாணவர்கள் உதவி செய்தது பலராலும் பாராட்ட பெற்று வருகிறது.
கோவையில் பன்றி காய்ச்சலுக்கு 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் டெங்கு காய்ச்சலுக்கு ஒரு மூதாட்டி பலியாகியுள்ளார். தமிழகமெங்கும் காய்ச்சல்கள் பரவி வருகிற நிலையில், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் பன்றிகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு மூதாட்டி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
கோவையில் மனித உணர்வுகளை பிரதிபலிக்கும் ரோபோவை உருவாக்கி இளைய தலைமுறையினர் சாதனை படைத்துள்ளனர். எத்தனை புதியவகை ரோபோக்களை உருவாக்கினாலும் அவை, இயந்திரமாக செயல்படும். மனித உணர்வுகளை புரிந்துகொள்ளும் திறனுடையவையாக இதுவரை எந்த ரோபோவும் உருவாக்கப்பட்டதில்லை.கோவையில் உள்ள தனியார் ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தில் படித்துவரும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள், நிகழ்வுக்கு ஏற்ப கண்கள் வழியே உணர்வுகளை நவரசமாய் வெளிப்படுத்தும் ரோபோவை உருவாக்கி அசத்தியுள்ளனர். ஒரு தனியார் அமைப்பு மூலம் 25 பேர் கொண்ட குழு உருவாக்கியிருப்பது இதுவே முதல் முறை. […]
உலகத்தை ஆட்டிப்படைக்க கூடியதாக சுற்றுச்சூழல் பிரச்னை இருந்து வருகிறது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், சிங்கப்பூர் போல் கோவை நகரம் மாற வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. உலகத்தை ஆட்டிப்படைக்க கூடியதாக சுற்றுச்சூழல் பிரச்னை இருந்து வருகிறது. நாட்டின் சுற்றுச்சூழல் பிரச்னையை சவாலாக ஏற்றுக்கொண்டு பிரதமர் செயல்பட்டு வருகிறார் என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.