பொள்ளாச்சியில் நடந்தேறிய காமக்கொடூரர்களின் வெறித்தனமான செயல். பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்க கோரி, மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். பொள்ளாச்சியில் கடந்த சில வருடங்களாக பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை மயக்கி, வர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளது ஒரு கும்பல். கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, இவர்களால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். மேலும், இந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்கள் மொத்தம் 8 பேர், இதில் நான்கு குற்றவாளிகள் முக்கிய குற்றவாளிகள். […]
பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக அதிமுகவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொள்ளாச்சியில் மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை எஸ்.பி. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சமூக வலைதளமான முகநூலில் நல்லவர்களை போல நடித்து, ஆசை வார்த்தை காட்டி, தவறான முறையில் அவர்களை பயன்படுத்தி கொள்கின்றனர். இதையே பொள்ளாச்சியை சேர்ந்த ஒரு கும்பல் செய்துள்ளது. கல்லூரி பெண்கள், பணக்கார பெண்கள், மிகவும் அழகான பெண்கள் […]
சமூக வலைதளமான முகநூலில்(facebook) கணக்கு வைத்திருப்போர் பலரும் அவர்களுக்கென்று ஒரிஜினல் ஐ.டி வைத்திருக்கிறார்களோ இல்லையோ, பல போலி ஐ.டி-களுடனே சுற்றுகின்றனர். இதை தங்களால் முடிந்த அளவு முகநூல்(facebook) நிறுவனம் கண்காணித்து தான் வருகிறது என்றாலும், இதையும் மீறி பலக்கோடி போலி கணக்குகள் தவறான முறையில் இதனை பயன்படுத்தி வருகின்றனர். இதில் முக்கிய இடத்தில் இருப்பது ,பெண்களை ஏமாற்றி ஆபாசமான படங்களை அவர்களை வற்புறுத்தியோ அல்லது அவர்களுக்கே தெரியாமல் எடுப்பது தான். இந்த நிலை நீண்ட காலமாக நடந்து […]
விருதுநகரில் கர்பிணிப்பெண்ணுக்கு HIV தொற்று ரத்தம் செலுத்திய விவகாரம் பெரும் சர்சையை ஏற்படுத்தியது. கோவையில் 2 வயது பெண் குழந்தைக்கு HIV தொற்று ரத்தம் செலுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் சித்ரா தம்பதிகள் இந்த தம்பதியருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆண் மற்றும் பெண் குழந்தை என்று இரட்டை குழந்தைகள் பிறந்தது. இரண்டு வயதாகும் இந்த குழந்தையில் பெண்குழந்தைக்கு கடந்த 2017ஆம் ஆண்டில் ஜூலை மாதம் உடல்நிலை சரியில்லாமல் போனதால் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அப்போது குழந்தையை […]
விவசாயிகளுக்கு விஞ்ஞான ரீதியான அறிவுரை தேவை என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார். கோவை பொள்ளாச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கூறியதாவது, விவசாயிகளுக்கு விஞ்ஞான ரீதியான அறிவுரை தேவை என்றும், விவசாயிகள் நிறைந்த கட்சியாக மக்கள் நீதி மய்யம் இருக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், பொதுமக்களின் கனவை நினைவாக்க , மக்கள் நீதி மய்யம் கட்சி பாடுபடும் என்றும் தெரிவித்துள்ளார்.
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் சமத்துவ பொங்கல் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி, அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் சமத்துவ பொங்கல் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில், மாணவ மாணவிகள் சாதி, மத, இன வேறுபாட்டை கலைந்து, சமத்துவ பொங்கல் கொண்டாடி வருகின்றனர். இந்த விழாவில் மாணவ, மாணவிகள் சேலை மற்றும் வேஷ்டி போன்ற பாரம்பரிய உடைகளை அணிந்து மிக சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.
கோவையில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த யானையை வனத்துறையினர் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த யானையை வனத்துறையினர் விரட்டியடித்துள்ளனர். கோவையில் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்த யானையை ஹார்ன் அடித்தும், கூச்சலிட்டும் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கோவையில் 388 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மேலும் மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் நகைக்கடைக்கு கொண்டுவரப்பட்ட 388 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மேலும் மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே ஏடிஜிபி முத்தரசு தலைமையில் நான்கு தனிப்படைக்க அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி உயிரிழந்துள்ளார். கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி ராமசாமி உயிரிழந்துள்ளார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி ராமசாமி உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிவிக்கப்பட்டுள்ளது. ராமசாமிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்ற வழியிலேயே ராமசாமியின் உயிர் பிரிந்தது.
கோவையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் வேளாண் திருவிழாவை முன்னிட்டு ரேக்ளா ரேஸ் போட்டிகள் நடைபெற்றன. கோவை நீலாம்பூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வேளாண் திருவிழாவை முன்னிட்டு ரேக்ளா ரேஸ் போட்டிகள் நடத்தப்பட்டன. 200க்கும் மேற்பட்ட ரேக்ளா வாகனங்கள் போட்டியில் பங்கேற்று சீறி பாய்ந்தன. 100 மீட்டர், 200 மீட்டர் தனித்தனியாக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. இந்த போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
பிலிப்பைன்ஸில் நாட்டில் சமீபத்தில் மிஸஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி நடைபெற்றதில் கோவையை சேர்ந்த காயத்ரி நடராஜன் கலந்து கொண்டு பட்டம் வென்று அசத்தியுள்ளார். இதையடுத்து பேசிய அவர் சாதனைக்கு நம்முடைய வயது ஒரு தடையாகாது என்றும் திருமணத்திற்கு பிறகு தான் நான் பல சாதனைகள் படைத்ததாகவும் காயத்ரி நடராஜன். காயத்ரி நடராஜன் பல துறைகளிலும் சாதனை படைத்தவர் என்பது பாராட்டுக்குரியது.
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, சுற்றுவட்டாரப்பகுதிகளில் தேங்காய் உற்பத்தியையே விவசாயிகள் அதிக அளவில் செய்து வருகின்றனர். ஆனால் ஏராளமான விவசாயிகள் கொப்பரை தேங்காய்களை உற்பத்தி செய்ய உற்பத்தி செலவு தற்போது அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்து , கொப்பரைத் தேங்காய் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். கொப்பரை தேங்காயின் விலையை ரூபாய் 110 என்று நிர்ணயம் செய்தால் எங்களின் வாழ்வாதாரம் காக்கப்படும் என்று அவர்கள் வேண்டுகோள்விடுத்தனர்.
கோவையில் பேரூரில் கல்லூரி மாணவர்களின் சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணி : கோவை மாவட்டம், பேரூரில், பேரூர் சாந்தலிங்க அடிகளார் கல்லூரி மாணவர்கள் மற்றும் சுற்றுசூழல் குழுவினர் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கொண்டு பேரணியில் கலந்து கொண்டனர். இந்த பேரணியில், பிளாஸ்டிக்கை ஒழிப்போம், தலைமுறையை காப்போம் என்ற கோஷங்களுடன் இப்பேரணி நிறைவடைந்தது. இந்த பேரணியில் 200 க்கும் மேற்பட்ட […]
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்த விபத்தில் பத்து குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஓடந்துறையில், பாக்கு தோப்புகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தனியார் இடத்தில் குடிசைகளை அமைத்து தங்கியுள்ளனர். இந்த நிலையில் தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசை வீடு ஒன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. குடிசை வீடு என்பதால் மளமளவென பெருகிய தீ, அருகே இருந்த மற்ற குடிசை வீடுகளுக்கும் பரவியது. […]
கோவை மாவட்டத்தில் குடிபோதையில் வாகனம் ஒட்டிய இளைஞர்களை போலீசார் அழைத்து, அவர்களின் தவறை சுட்டிக்காட்டி அவர்களுடன் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். குற்றங்கள் பெருக காரணம் : பல குற்றங்கள் பெருகுவதற்கு இந்த மது தான் காரணம் என்று கூறியுள்ளார், நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு குற்றமும் நீங்கலாக செய்வதில்லை 90% குற்றங்கள் பெருகுவதற்கு காரணம் இந்த மது தான் என்று கூறியுள்ளார். இந்த இளைஞர்களோடு காவல் துறையினர் பேசுகையில், அரசாங்கம் தானே மது கடைகளை திறக்கிறது, பின்னர் குடித்தால் […]
கோவை அருகே தெப்பம்பட்டியில் வாழை தோட்டத்தில் புகுந்த யானைகள் அட்டகாசம் செய்துள்ளனர். கோவை மாவட்டம் தெப்பம்பட்டி பகுதியில் உள்ள வாழை தோட்டத்தில் நுழைந்த காட்டு யானைகள், வாழை தோட்டத்தை சேதப்படுத்தியுள்ளது. இதனையடுத்து யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், வனப்பகுதியில் யானைகளுக்கான உணவு, தண்ணீரை ஏற்பாடு செய்யவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேட்டுப்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட நகர மற்றும் கிராமப்புறங்களில், தமிழக அரசின் மதுவிலக்கு காவல்துறை மற்றும் ஆயத்தீர்வுத்துறை சார்பில், போதை பொருட்களுக்கு ஏதிரான விழிப்புணர்வு கலை நிகழ்சிகள் நடத்தப்பட்டன. கிராமிய பாடல்கள் மற்றும் நடனங்கள் ஆடி கலைக்குழுவினர் விழிப்புணர்வு பிரசாரத்தில் […]
தேக்கம்பட்டியில் கோயில் யானைகளுக்கான புத்துணர்ச்சி முகாமில் காட்டு யானைகள் வராமல் தடுக்க மின்விளக்கு தோரணங்களால் வேலி அமைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானி ஆற்றங்கரையோரத்தில் தேக்கம்பட்டி என்னுமிடத்தில் ஏழாவது ஆண்டாக யானைகள் புத்துணர்ச்சி முகாம் நடைபெற்று வருகிறது. கடந்த பதினான்காம் தேதி துவங்கி, வரும் ஜனவரி முப்பதாம் தேதி வரை நாற்பத்தெட்டு நாட்கள் நடைபெறும் இம்முகாமில் 28 யானைகள் பங்கேற்றுள்ளன. இந்தநிலையில், புத்துணர்ச்சி முகாமில் உள்ள கோவில் யானைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான குண்டு […]
கோவை மாவட்டம், காந்திபுரத்தில் இருசக்கரவாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை காந்திபுரத்தை சேர்ந்தவர் குமார். இவர் காந்திபுரத்தில் இருந்து பீளமேடு செல்வதற்காக தனது, இருசக்கர வாகனதை எடுத்துக் கொண்டு உப்பிலிபாளையம் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக வாகனத்தின் இருக்கையின் அடியில் இருந்து புகை வந்துள்ளது. அதனை அருகில் இருந்தவர்கள் கூறியதையடுத்து வாகனத்தை நிறுத்தி இருக்கையை திறந்து பார்த்த போது திடீரென தீப்பற்றி எரிந்தது. அருகில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி அணைத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. […]
கோவையில் இந்து அமைப்பு தலைவர்களை கொள்ள சதித்திட்டம் தீட்டிய குற்றவாளிகள் வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். கோவையில் இந்து அமைப்பு தலைவர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில் 3 பேரின் வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியில் உள்ள பைசல் சந்திரன் வீதியில் உள்ள ஆசிக் மற்றும் குனியமுத்தூரில் உள்ள அன்வர் வீட்டில் என்ஐஏ சோதனை நடத்தியுள்ளது.