கோயம்புத்தூர்

பேருந்திகுள் மழை! குடை பிடித்து பயணம் செய்த பயணிகள்!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 58 எஸ்டேட் உள்ளது. இந்த 58 எஸ்டேட்களுக்கும் வால்பாறையில் இருந்து அரசு பேருந்துகள் இயங்கி வருகிறது. வால்பாறை பகுதியில் ஜூன் மாதம் தொடக்கி அக்டோபர் மாதம் வரை மழை பெய்வது வழக்கம். இந்நிலையில் சமீபத்தில்  பெய்த மழையில் ராயன் எஸ்டேட் பகுதிக்கு சென்று கொண்டு இருந்த அரசு பேருந்தில் மேல் கூரையில் உள்ள ஓட்டையால் மழை நீர் நேரடியாக பேருந்துக்குள் நுழைகிறது. இதனால் பயணிகள் இருக்கையில் அமரமுடியாமல் தவித்து வருகின்றனர்.மேலும் பேருந்தில் […]

#Rain 2 Min Read
Default Image

இன்ஸ்டாகிராம் மூலம் பணம் மோசடி!! வாலிபர் கைது

கோவை மாவட்டம், புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி, இவர், திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த ரேவதியை, அவருடன் கல்லூரியில் பயின்ற கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜிதின்ஷா என்ற நபர், இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், அவர் ரேவதியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறினார். இந்நிலையில், இதற்க்கு ரேவதி சம்மதித்தார். மேலும் ரேவதியிடம் ரூ 7லட்சம் பணமும் கேட்டு வாங்கியுள்ளார். […]

girl cheating 3 Min Read
Default Image

கோபத்தில் கள்ளக்காதலியின் கையை வெட்டிய கள்ளக்காதலன்!

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சின்ன தொட்டிபாளையைம் பகுதியைச் சேர்ந்தவர் சுஜாதா ஆவார்.இவரது கணவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தண்டவாளத்தைக் கடக்கும் போது ரயில் மோதி பிரபு உயிரிழந்துள்ளார். இவருக்கு இரு குழந்தைகள் உள்ளன.இதனால் ஆதரவற்ற இவர் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார்.அப்போது காரமடையைச் சேர்ந்த தங்கராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கராஜ் ,சுஜாதா வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்.மேலும் அடிக்கடி அவரிடம் இருந்து வீட்டு செலவுக்கு சுஜாதா பணம் வாங்கி வந்துள்ளார்.பின்னர் […]

news 4 Min Read
Default Image

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு! குற்றவாளிகளுக்கு மரணதண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!

2010ஆம் ஆண்டு பள்ளிக்குழந்தைகளை கடத்தி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து, சிறுவனையும் கொலை செய்த கொடூர கும்பலுக்கு கோவை நீதிமன்றம் வழக்கைவிசாரித்து மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.  அதில் ஒரு குற்றவாளி போலீஸ் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார். அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அங்கும் மரணதண்டனை உறுதியானது. பின்னர் அந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை தள்ளுபடி செய்து  குற்றவாளி மனோகரனுக்கு மரண தண்டனையை உறுதி செய்தது […]

#Supreme Court 2 Min Read
Default Image

பொள்ளாச்சி அருகே தண்டவாளத்தில் கல் வைத்து ரயிலை கவிழ்க்க முயன்ற வடமாநில மூன்று பேர் கைது!

பாலக்காட்டில் இருந்து சென்னைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு 4.30 மணிக்கு பொள்ளாச்சி ரயில் நிலையத்தை கடந்து சென்று கொண்டு இருந்த போது மாக்கினாம்பட்டி அருகே ரயில் சக்கரத்தில் சத்தத்துடன் உராய்வு ஏற்பட்டது இதை உணர்ந்த ஓட்டுநர் ரயிலை உடனடியாக நிறுத்தி சக்கரத்தை சோதனை செய்தார். அப்போது தண்டவாளத்தில் கல் இருப்பதை பார்த்த ஓட்டுநர் உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்து விட்டு அங்கே இருந்து ரயில் புறப்பட்டது.இது தொடர்பாக திண்டுக்கல் […]

Pollachi 3 Min Read
Default Image

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 45 வயது நபர்!அலறிய சிறுமியின் சித்தி!

கோவையில் உள்ள துடியலூரில் ஒரு தம்பதி வசித்து வந்துள்ளனர்.இவர்களுக்கு 4 வயதில் சிறுமி உள்ளது.இவர்களது வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாம்பு புகுந்துள்ளது.இதனால் அச்சம் அடைந்த தம்பதியினர் அண்ணா காலனியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர். அங்கேயே கூலிவேலை பார்த்து வந்துள்ளனர்.வழக்கம் போல் அவர்கள் வேலைக்கு சென்றுள்ளனர்.வீட்டில் இருந்த சிறுமி திடீரென காணாமல் சென்றுள்ளார்.இதனால் அச்சம் அடைந்த சிறுமியின் சித்தி எல்லா இடங்களிலும் தேடி சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 45 வயதான செல்வராஜ் […]

tamilnews 3 Min Read
Default Image

பெண்ணை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து 56 லட்சம் பறித்த நபர்!மீண்டும் பொள்ளாச்சியில் நடந்த துயரம்!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மகாலிங்கபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர் பொள்ளாச்சி அனைத்து மகளீர் காவல்நிலையத்தில் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். அதில் அவருக்கு திருமணம் ஆகி கடந்த 9 ஆண்டுகள் ஆகியதாகவும் அவரும் அவரது கணவரும் கருத்து வேறுபாடு காரணமாக 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்டதாக கூறியுள்ளார். இருப்பினும் தற்போது அவர் சென்னையில் உள்ள கிண்டியில் ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளார்.இவருக்கு அதே நிறுவனத்தில் பணியாற்றும் கிசோர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. […]

tamilnews 4 Min Read
Default Image

பொள்ளாச்சியில் நடந்த கொடூரம்!16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 6 இளைஞர்கள்!

பொள்ளாச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருபவர் ஒரு 16 வயது சிறுமி.இவரின் தந்தை வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டார்.இதனால் அந்த சிறுமி தனது பாட்டி வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் பொள்ளாச்சியில் உள்ள குமரன் நகரை சேர்ந்த இளைஞருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியுள்ளது.மேலும் அந்த இளைஞனும் அந்த பெண்ணை உண்மையில் விரும்புவதாக நம்பவைத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை 4-ம் தேதி அந்த இளைஞன் மாணவியை தமது வீட்டிற்கு […]

tamilnews 3 Min Read
Default Image

நீரில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்கள்!

கோவை மாவட்டம் மதுக்கரை சூட்டிங் ரேஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மற்றும் ரமேஷ்.இவர்களின் மகன்கள் சிவபிரகாஷ்,கார்த்திக்,தினேஷ் ஆவர். இந்நிலையில் ஏசிசி சிமெண்ட் ஆலை அருகே கல் குவாரி ஒன்று பாராமரிப்பில்லாமல் உள்ளது. அங்கு அனைவரும் குளிக்கும் அளவிற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது.அங்கு சென்று சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் குளித்து விளையாடுவர்.இந்நிலையில் வழக்கம் போல் அந்த மூன்று சிறுவர்களும் குளித்து விளையாடிவந்துள்ளனர். அப்போது உடைகளை கரையில் கழற்றி வைத்துவிட்டு அவர்கள் குளிக்க சென்ற போது எதிர்பாராத வகையில் ஒரு சிறுவன் […]

tamilnews 4 Min Read
Default Image

வீட்டிற்குள் ரத்தவெள்ளத்தில் கிடந்த பெண்மணி!அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர்!

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் பர்வீன் பானு.இவர் தனது கணவரிடம் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளார்.இவர் டெய்லர் வேலைக்கு சேர இருந்ததால் தன் குழந்தை இருவரையும் தந்து தாயார் வீட்டில் விட்டு சென்றுள்ளார். திருப்பூர் ஈஸ்வரன் கோவில் அருகே பள்ளி வாசல் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை அன்று வெகு நேரம் ஆகியும் வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் அவரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு ரத்தவெள்ளத்தில் கிடந்த பானுவை பார்த்து […]

tamilnews 3 Min Read
Default Image

4 டயர்களுடன் இயங்கும் அரசு பேருந்து! பொதுமக்கள் அதிர்ச்சி!

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து நேற்று திருப்பூருக்கு சென்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்து ஒன்று ஆறு டயர்களுக்கு பதிலாக நான்கு டயர்களுடன் இயங்கியுள்ளது. இதனையடுத்து, அந்த பேருந்துக்கு பின்னால் காரில் சென்ற ஒருவர் அதனை வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. https://www.facebook.com/thangavel.subramaniam.71/videos/915052598840225/ பொதுமக்களை ஏற்றி செல்லும் அரசு பேருந்துகள், கவனமற்ற முறையில் இயக்கப்படுவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக […]

Government Bus 2 Min Read
Default Image

புகழ்பெற்ற வெள்ளியங்கிரி மலையில் 4000 வீடுகள் கட்டும் தமிழக அரசு..!! உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் தமிழக அரசின் குடிசைமாற்று வாரியம் 4000  வீடுகளை கட்ட திட்டமிட்டுள்ளது.இதனை எதிர்த்தும்,இதற்கு தடை கோரியும்   உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டது இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பியது .மேலும் வீடுகள் கட்டுவது தொடர்பாக இன்னும் 7 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.சமூக ஆர்வலர்கள்  மற்றும் பக்தர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

kovai 2 Min Read
Default Image

Election Breaking: கோவையில்  மார்க். கம்யூ சார்பில் போட்டியிட்ட பி.ஆர் . நடராஜன் முன்னிலை.!

இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும்  542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தபால் வாக்கு எண்ணிக்கையில்  தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் திமுக கணிசமான இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. தற்போது கோவையில்  சிபிஐஎம் சார்பில் போட்டியிட்ட பி.ஆர் . நடராஜன் […]

ELECTION2019 2 Min Read
Default Image

தேர்தல் பிரேக்கிங்! திருமா பின்னடைவு! ஓபிஎஸ் மகன் முன்னிலை! கோவை பாஜக முன்னிலை !

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் தமிழ் நாட்டில் பெரும்பாலும் திமுக கூட்டணி அதிகமான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. சிதம்பரம் மக்களவை தொகுதியில் தொல் திருமாவளவன் 445 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை விட பின்தங்கி உள்ளார். தேனியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகன் ரவீந்திர நாத் முன்னிலையில் உள்ளார். அதேபோல அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சிபி.ராதாகிருஷ்ணன் கோவை மக்களவை தொகுதியில் முன்னிலையில் உள்ளார். DINASUVADU

india 2 Min Read
Default Image

பொள்ளாச்சி அருகே மதுவிருந்து ! ரகளையில் ஈடுபட்டதாக 159 கேரள மாணவர்கள் கைது

பொள்ளாச்சி அருகே மதுவிருந்தில் போதை மருந்து பயன்படுத்தி ரகளையில் ஈடுபட்டதாக 159 கேரள மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சேத்துமடையில் கணேஷ் என்பவரின் தோட்டத்தில் போதையில் மாணவர்கள் ரகளையில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.இதையடுத்து புகாரின் பெயரில்  கோவை எஸ்.பி. சுஜித் குமார் தலைமையிலான காவல்த்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.மதுவிருந்தில் போதை மருந்து பயன்படுத்தி ரகளையில் ஈடுபட்டதாக 159 கேரள மாணவர்கள் கைது செய்தது காவல்த்துறை.மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் […]

#Arrest 2 Min Read
Default Image

கோவை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு -ஆட்சியர் ராசாமணி

கோவை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,கோவை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.வேட்பாளர்கள், பிரதிநிதிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். வாக்கு எண்ணிக்கை மையத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்கள், மழையின் காரணமாக வேலை செய்யவில்லை. சிசிடிவி கேமரா ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு 9 பறக்கும் படை குழுக்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது […]

#Politics 2 Min Read
Default Image

வேட்புமனு தாக்கல் செய்ய கோமாளி வேடம் அணிந்து வந்த வேட்பாளர்

திருப்பரங்குன்றம், சூலூர் , ஓட்டப்பிடாரம், அரவங்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அனைத்து கட்சினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த நூர் முகமது என்ற  சுயேட்சை வேட்பாளர் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் என்று  வேட்புமனு தாக்கல் செய்தார். சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த நூர் முகமது கோமாளி வேடம் அணிந்து வந்தார்.அவரை பார்த்த […]

#Politics 3 Min Read
Default Image

புகாரளித்த பெண்ணின் விவரத்தை வெளியிட்ட எஸ்.பி. பாண்டியராஜன் பணியிடமாற்றம்!புதிய எஸ்.பி. நியமனம்

பொள்ளாச்சி பாலியல் கொடுமையில் புகாரளித்த பெண்ணின் விவரத்தை வெளியிட்ட எஸ்.பி. பாண்டியராஜன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  கடந்த சில தினங்களாக தமிழகத்தை உலுக்கிய வரும்  சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை.அதாவது கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி தன் வலையில் வீழ்த்தி கூட்டு வன்புணர்வு செய்தனர் சுமார் 20-க்கும்  நபர்கள் கொண்ட கும்பல். இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது. […]

#Politics 5 Min Read
Default Image

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு:சந்தோஷ்குமார் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சதீஷ் என்பவர் கோவை மாவட்டம் பன்னிமடை கஸ்தூரி நாயக்கன் புதூரை சேர்ந்தவர் ஆவார்.இவரது மனைவி பெயர் வனிதா.சதிஷ்-வனிதா தம்பதியினருக்கு  இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர்களது மூத்த மகள் திப்பனூரில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 25 ஆம் தேதி  வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை காணவில்லை […]

#Arrest 5 Min Read
Default Image

முக்கிய அறிவிப்பு! சிறுமி வன்கொடுமை செய்து கொலை-துப்புக்கொடுத்தால் உரிய சன்மானம் வழங்கப்படும்

கோவையில் சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பொதுமக்கள் துப்புக்கொடுத்தால் உரிய சன்மானமும், துப்புக்கொடுத்தவர்கள் யார் என்பது ரகசியம் காக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  சதீஷ் என்பவர் கோவை மாவட்டம் பன்னிமடை கஸ்தூரி நாயக்கன் புதூரை சேர்ந்தவர் ஆவார் . இவரது மனைவி பெயர் வனிதா.சதிஷ்-வனிதா தம்பதியினருக்கு  இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர்களது மூத்த மகள் திப்பனூரில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 25 ஆம் தேதி  வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த […]

#Police 6 Min Read
Default Image