பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பது வனவிலங்குகளுக்கு மட்டுமே மனிதர்களே அல்ல என உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து. கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் உள்ள சுயம்பு ஆண்டவர் கோவிலில் டிசம்பர் 10 முதல் 12 வரை மகாதீபம் ஏற்ற சரவணன் என்பவர் அனுமதி கோரி மனு ஓன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மனுவில் 2015 -ம் ஆண்டு முதல் வெள்ளையங்கிரி மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்ட நிலையில் தற்போது அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது என […]
கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்காடு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி தங்கராஜ் இவர் அறுவடையில் கிடைத்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை தனது வீட்டில் சேமித்து வைத்துள்ளார். இந்நிலையில் அவர் அந்த ஐம்பதாயிரத்தை ஒரு பையில் சேமித்து வைத்து உள்ளார். அந்த பணத்தை எலி ஒன்று கடித்து குதறி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரங்கராஜ் சேதமடைந்த பணத்தை மாற்றுவதற்கு அருகிலிருந்த வங்கிக்கு எடுத்துச் சென்று உள்ளார். சேதமடைந்த பணத்தை பார்த்த வங்கி ஊழியர்கள் ரூபாய் நோட்டுக்கள் மிகவும் […]
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சின்னக்கள்ளிபட்டி கிராமத்தை சார்ந்தவர் மாகாளி (60). இவரது மனைவி பூவாள் இரண்டு வருடத்திற்கு முன் இறந்து உள்ளார்.இதனால் மாகாளி தனியாக வசித்து வருகிறார்.இவருக்கு சிவராஜ் என்ற மகன் உள்ளார். சிவராஜ் திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வருகிறார்.தந்தை மாகாளிக்கும் , சிவராஜிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று இரவு குடித்து விட்டு தனது தந்தை வீட்டிற்கு சென்ற சிவராஜ் மாகாளி வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். அப்போது […]
கோவை மத்திய சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்துவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட 7 செல்போன்கள், சிம்கார்டுகள் மற்றும் சார்ஜர் ஆகியவை சிறை கைதிகள் இருக்கும் சிறையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் அங்கு வேலை செய்து வரும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சிறைக்கைதிகளுக்கு கொடுப்பதற்காக சிறைக்கு எடுத்து வந்ததது அங்கு நடத்திய சோதனையில் தெரிந்தது. இதை தொடர்ந்து சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, சென்ற செப்டம்பர் 17ஆம் தேதி தனது 69வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்தவகையில் கோயம்பத்தூரில் தமிழக பாஜக கட்சியின் மாநில செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் தலைமையில் தனியார் கல்லூரியில் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் கே.இ.ஞானவேள்ராஜா மற்றும் நடிகர் தனஷின் தந்தையும், இயக்குனருமான கஸ்தூரி ராஜா ஆகியோரும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய கஸ்தூரி ராஜா, நான் ஹிந்து மதத்தை சேர்ந்தவன். […]
கோயம்புத்தூரில் சொத்துவரி அதிகமாக்கபட்டதன் காரணமாக, கோவை மாநகராட்சியை எதிர்த்து திமுக தலைமையில் உள்ள கூட்டணி கட்சிகள் கடையடைப்பு போராட்டம் நடத்த போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தன. ஆனால், இந்த திமுக தலைமையில் நடத்த இருந்த கடையடைப்பு போராட்டத்திற்கு தற்போது உயர் நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. திமுக கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக செய்தி அறிந்ததும் உயர்நீதிமன்றத்தில் இதற்கு எதிராக பொதுநலவழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில், முழு கடையடைப்பு கோயம்புத்தூரில் நடைபெற்றால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக […]
கோவை மாவட்டத்தில் மோத்தேபாளையம் எனும் ஊரை சேர்ந்த தினேஷ்குமார் என்ற இளைஞர் அந்த பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமியை கடத்திக்கொண்டுபோய் பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் அந்த சிறுமியை கொலை செய்துள்ளான். இந்த சம்பவத்தை அடுத்து போலிஸாரின் தேடுதல் வேட்டைக்கு பின், தினேஷ்குமார் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் கடந்த இரண்டு வருடமாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 18 பேரிடம் விசாரணை நடைபெற்றது தற்போது தீர்ப்பளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில், போக்ஸோ சட்டத்தின் […]
தமிழகத்தில் இலங்கை வழியாக லஷ்கர்-இ-தொய்யா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் 6 பேர் ஊடுருவியதாக உளவுத்துறை தகவல் தெரிவித்தது. மேலும் அந்த பயங்கரவாத அமைப்பு கோவையை குறிவைத்ததாக வெளியான தகவலின் பேரில் கோவையில் சுமார் 2000 போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தற்போது வரை இந்த சோதனை ஆங்காங்கே தொடர்ந்து வருகிறது. இதுகுறித்து தகவல் தெரிவித்த கோவை போலீஸ் கமிஷ்னர் ஸ்மிதி சரண், ‘ இதுவரை கோவையில் ஆயிரக்கணக்கில் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். ஆனால் இதுவரை […]
கோயம்புத்தூரில், இருசக்கர வாகனத்தில் வந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவருக்கு சீட் பெல்ட் அணியாத காரணத்தால் கோவை காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். கோயம்புத்தூர் காளப்பட்டியை சேர்ந்த கார்த்திக் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 7-ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போது, ஹெல்மெட் அணியாத காரணத்தால் போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர், அவரிடம் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி புக், இன்சூரன்ஸ் போன்றவை சரியாக இருந்தலும் அவர் ஹெல்மெட் […]
கோவையில் மாவட்டம் சூலுரை உள்ள நேரு நகரை சேர்ந்தவர் அரவிந்த் இவர் ராசிப்பாளையத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு திருப்பூர் கணபதிபாளையம் சார்ந்த பிரியதர்ஷினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த இரண்டு வாரத்திலேயே கணவரும் , அவரது பெற்றோரும் கொடுமைப் படுத்தியதாக பிரியதர்ஷினி பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பின்னர் தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் அரவிந்த் கரூர் மாவட்டம் […]
நமது உடலில் ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் கடவுளை நம்புகிறோமோ இல்லையோ மருத்துவரைதான் அனைவரும் நம்புகிறோம். ஆனால், அப்படிப்பட்ட உயர்ந்த சேவையை செய்யும் மருத்துவமனை ஊழியர்கள் சில நேரத்தில் செய்யும் சிறு அலட்சிய தவறு, பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. கோவை, எம்.எஸ்.ஆர் புரம் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள செவிலியர், பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு தடுப்பூசி போடும்போது, தவறுதலாக அந்த ஊசியின் சிறுபகுதி அந்த குழந்தையின் உடலில் இருந்துள்ளது. கடந்த மாதம் 20ம் தேதி […]
கடந்த வாரம் உளவுத்துறை ஆனது, லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பில் இருந்து 6 பயங்கரவாதிகள் இலங்கை வழியாக தமிழ்நாட்டிற்குள் ஊடுருவியதாக தகவல் அளித்திருந்தது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக கோயம்புத்தூரில் தற்போதும் தீவிர சோதனை நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று 20 என்ஐஏ அதிகாரிகள் கோயம்புத்தூரில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை 15 வீடுகளில் […]
இலங்கை வழியாக தமிழ்நாட்டிற்கு 6 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக இந்திய உளவுத் துறைக்கு கிடைத்த தகவலின் பேரில் தமிழ்நாடு முழுவதும் போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக கோயம்புத்தூரில் 2,000 போலீசார் குவிக்கப்பட்டு நேற்றிலிருந்து தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். சந்தேகத்தின் பெயரில் யாரேனும் தென்பட்டாலோ, அதேபோல் சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் தென்பட்டாலோ போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவை ரயில் நிலையம், பேருந்து நிலையம், தமிழக முக்கிய புண்ணிய ஸ்தலங்கள், என […]
கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஏரிமேடு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை ஜோஸ்வா என்ற ரவுடி கடந்த 18-ம் தேதி கடத்தி நான்கு நாள்களாக பலாத்காரம் செய்து உள்ளார். இதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்கள் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரை அடிப்படையாக வைத்து கொண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் ஜோஸ்வா புலியகுளம் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு போலீசார் சென்றனர்.போலீசார் வருவதை பார்த்த ரவுடி […]
கோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ள்ளதாக உளவுத்துறை கூறிய தகவலை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கோவையில் பல இடங்களில் பாதுகாப்பு முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதனால், கோவையில் ரயில் நிலையம், பஸ் நிலையம், வழிபாட்டு தளங்கள் என அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு, பொதுமக்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். கர்நாடக எல்லை, கேரளா எல்லை என கோவை, திருப்பூர் புறநகர் பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. இதில் தற்போது பயங்கரவாதிகள் உபயோகப்படுத்தியதாக தற்போது கார் வகை மற்றும் […]
கோயம்புத்தூர் இடையார்பட்டி ஊரில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவர் பெயிண்ட்டராக பணியாற்றி வந்துள்ளார். இவர் ஷாலினி என்ற பெண்ணை காதலித்து சென்றாண்டு திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்க்கு பின்னர் ராஜேந்திரன் சரிவர வேலைக்கு போகவில்லை என தெரிகிறது. ஷாலினி கர்ப்பமாக இருந்துள்ளார். ராஜேந்திரனுக்கும் ஷாலினிக்கும் பிரச்சனை வர ஷாலினி தனது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனை தொடர்ந்து ராஜேந்திரன் ஷாலினியை அழைத்து வர அவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஷாலினி அம்மாவான மீனாவிற்கும், ராஜேந்திரனுக்கும் சண்டை வர அப்போது […]
கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது. கோவையில் உள்ள சிங்காநல்லூர் , ஒண்டிபுதூர், சூலூர் ஆகிய பகுதிகளில் நொய்யல் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளதால் பாலம் தெரியாதபடி வெள்ளம் செல்வதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியின் விடுதியில் உள்ள சுற்று சுவர் இடிந்து விழுந்து தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டது.அந்த […]
கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கோவை, சர்க்கார் பதி அருகே உள்ள காண்டூர் கால்வாயில் இருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் அதிக அளவில் சென்றுள்ளது. இதனையடுத்து கால்வாயில் பாறை உருண்டு விழுந்துள்ளது. இதனால் தண்ணீர் கசிவு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இந்த வெள்ள நீரில் 20 வீடுகள் தண்ணீரில் அடித்து சென்றுள்ளது. இதில் 2 வயது குழந்தை ஒன்றும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதனையடுத்து வனத்துறையினர் குழந்தையை […]
கோவை மாவட்டத்தில் இடைவிடாமல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவு பிறப்பித்துள்ளார். தொடர்ந்து பெய்து வரும் மழை காரணாமாகவும், மாணவர்கள் நலன் கருதியும் விடுமுறை அளிப்பதாக கூறினார். கோவை மட்டுமின்றி, நீலகிரி மாவட்டத்திலும் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் கூறினார்.
இன்று வங்கக்கடலில் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் கூறியது .மேலும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் உள்ள மலைபகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் , சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என கூறியது. இந்நிலையில் கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவிற்கு உட்பட்ட நாளை பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.