MGR நூற்றாண்டு விழாவால் நேர்ந்த விபரீதம்…!
வருகிற டிசம்பர் 3ம் தேதி கோவை மாநகரில் MGR நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளது.இதனையடுத்து கோவையில் உள்ள அவினாசி சாலை முழுவதும் சாலையில் குழி தோண்டி கட் அவுட் மற்றும் ஆர்ச் பணிகள் நடந்து வருகிறது.
இன்று காலை கோவை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அருகே ரகு என்கிற
இளைஞர் இருசக்கரவாகனத்தில் வந்த போது சாலையில் கட்டிய ஆர்ச்
மரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த வாலிபர் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்தார்.இதனையடுத்து வீட்டில் பெற்றோர்கள் இவருக்கு திருமண ஏற்பாடுகளை செய்ததையடுத்து இவர் கோவை வந்திருந்தார் என்பது மேலும் வேதனையளிக்க கூடிய ஒன்றாக மாறியிருக்கிறது என்பது குறிப்பிடதக்கது
மற்ற அமைப்புகள் சாலையில் கொடி கட்டவே அனுமதிக்காத காவல்துறையும் மாவட்டநிர்வாகமும் ஆளுங்கட்சிக்கு மட்டும் இத்தகைய அராஜகம் புரிய
எப்படி அனுமதிக்கிறது.??