கோவையில் ரயில் நிலைய ஆட்டோ ஸ்டாண்டை காலி செய்ய நெருக்கடி தரும் போலீஸ்!
கோவை மாவட்டம் மிகவும் போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்களில் ஒன்றாகும்.நகர் முழுவதும் சாலைகளிலும் ,சாலை ஓரங்களிலும் நெரிசல் மிகுந்து காணப்படும்.இதனால் கோவை ரயில் நிலையத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டை அகற்ற போலீஸார் நெருக்கடி தருவதாக ஆட்டோ டிரைவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். முன்னதாக கோவை சந்திப்பு ரயில் நிலைய வளாகத்திற்குள் ஆட்டோ ஸ்டாண்ட் இருந்தது. ஆனால் பராமரிப்பு பணிகளை காரணம் காட்டி சிறிது காலம் வெளியேறுமாறு அதிகாரிகள் கூறினர். இதனை நம்பி ரயில் நிலைய வளாகத்தில் இருந்து வெளியே வந்த ஆட்டோ டிரைவர்கள், ரயில் நிலையத்திற்கு வெளியே கூடாரம் போட்டனர்.
source: dinasuvadu.com