கோவை பேனர் விபத்து.! கொலை வழக்காக மாற்றம்.!

Banner Collapse

கோவையில் பேனர் விழுந்து 3 பேர் பலியான நிலையில், 3 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றம்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே விளம்பர பேனர் கட்டப்படும் கம்பிக் கட்டுமானம் சரிந்து விழுந்து விபத்துகளனத்தில் 3 பேர் உயிரிழந்தனர். பேனரை வைத்துக்கொண்டு இருக்கும் போது சூறாவளிக்காற்று வீசியதால், அனைவரும் இறங்கி தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்குள் இரும்பு கம்பிகள் சரிந்து விழுந்ததால் 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

கருமத்தம்பட்டியில் பேனர் சரிந்து 3 தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறது. பேனர் விழுந்து 3 பேர் பலியான நிலையில், ஒப்பந்ததாரர்கள் பாலாஜி, பழனிசாமி, நில உரிமையாளர் ராமசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், கருமத்தம்பட்டியில் பேனர் சரிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஒப்பந்ததாரர் பாலாஜி, பழனிச்சாமி, நில உரிமையாளர் ராமசாமி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், அது கொலை வழக்காக மாற்றப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்