கோவையில் பைக் ரேசில் ஈடுபடுவோரின் வாகனங்கள் பறிமுதல்!
பைக் ரேசில் ஈடுபடுவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் – கோவை ஆணையர் பெரியய்யா தெரிவித்துள்ளார்.
கோவை சாலைகளில் பைக் ரேஸில் ஈடுபடுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல்துறை ஆணையர் பெரியய்யா தெரிவித்துள்ளார். அவிநாசி சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், பள்ளி மாணவர்களுக்கு சாலை விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும் கோவை நகருக்குள் வாகனங்கள் நுழையும் முக்கியமான 7 சாலைகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு அனைத்து வாகனங்களும் கண்காணிக்கப்படும் என்றார்.
source: dinasuvadu.com