மனித உணர்வுகளை பிரதிபலிக்கும் புதிய ரோபோ….கோவையில் சிறுவர்கள் , இளைஞர்களுடன் சாதனை…!!
கோவையில் மனித உணர்வுகளை பிரதிபலிக்கும் ரோபோவை உருவாக்கி இளைய தலைமுறையினர் சாதனை படைத்துள்ளனர்.
எத்தனை புதியவகை ரோபோக்களை உருவாக்கினாலும் அவை, இயந்திரமாக செயல்படும். மனித உணர்வுகளை புரிந்துகொள்ளும் திறனுடையவையாக இதுவரை எந்த ரோபோவும் உருவாக்கப்பட்டதில்லை.கோவையில் உள்ள தனியார் ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தில் படித்துவரும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள், நிகழ்வுக்கு ஏற்ப கண்கள் வழியே உணர்வுகளை நவரசமாய் வெளிப்படுத்தும் ரோபோவை உருவாக்கி அசத்தியுள்ளனர். ஒரு தனியார் அமைப்பு மூலம் 25 பேர் கொண்ட குழு உருவாக்கியிருப்பது இதுவே முதல் முறை. இது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
dinasuvadu.com