பேருந்து நிலைய மேற்கூரை இடிந்த விபத்தில், பலியான அரசு பேருந்து நடத்துனரின் மனைவி கலெக்டரிடம் மனு…!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்த விபத்தில், பலியான அரசு பேருந்து நடத்துனர் சிவகுமாரின் மனைவி செளந்தரி தனக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம், தனது கைகுழந்தையோடு மனு அளித்தார்.அவருடன் அவரது உறவினர்களும் வந்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் முறையிட்டனர்.