கோவையில் காவிரி மேலாண்மை வாரியம் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல்…!
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் காவிரி மேலாண்மை வாரியம் கோரி தொடர்ந்து நான்காவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
திருவாரூர் மாவட்டம் பேரளத்தில் ரயில் மறியலில் ஈடுபட ஊர்வலமாக வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை, போலீசார் தடுத்ததால் லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. இதை அடுத்து தண்டவாளத்தில் நின்ற படி காவிரி மேலாண்மை வாரியம் கோரி அவர்கள் முழக்கமிட்டனர். இதனால் திருவாரூர் – மயிலாடுதுறை பயணிகள் ரயில் அரை மணி நேரம் நிறுத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் அரை மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.
கோவையில் ரயில் மறியலில் ஈடுபட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர். ரயில் நிலையத்திற்குள் அவர்கள் நுழைய முயன்ற போது போலீசாருடன் லேசான வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ரயிலை மறியலில் ஈடுபடுவதற்கு முன்னதாகவே அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.