கோயம்புத்தூர் : சுற்றுலா தலங்கள் ..!

Default Image

தமிழ்நாடு வேகமாக வளர்ச்சியடைந்து வரும் தென்னிந்திய மாநிலமாகும். நீண்ட வரலாற்றையும் தனித்துவ பண்பாட்டையும் அழகிய நிலப்பகுதிகளையும் தமிழ்நாடு கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை இந்தியாவில் இரண்டாம் நிலையில் இருக்கிறது.

பண்டைத் தமிழர் தமிழ்நாட்டின் இட அழகை முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என வகுத்து விபரித்தனர். அதாவது தமிழ்நாடு காடு, மலை, பாலை, வயல், கடல் ஆகிய இயற்கை அழகைக் கொண்டது. எழில் கொஞ்சும் நீலகிரி மற்றும் கோடைக்கானல் மலைப் பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய அடர்ந்த வனப் பகுதிகள், கிழக்கு கடற்கரை பகுதிகள் போன்ற மனம் கவரும் பல இடங்கள் உண்டு.  கோயம்புத்தூரில் உள்ள சுற்றுலா தலங்களைக்  காண்போம்…

கோயம்புத்தூர் :

  1. ஆனைமலை விலங்குகள் சரணாலயம்
  2. அவினாசி கோயில்
  3. ஈச்சனாரி விநாயகர் கோயில்
  4. காரமடை ரெங்கநாதர் கோயில்
  5. குழந்தை ஏசு தேவாலயம்
  6. கோட்டை மேடு மசூதி
  7. மருதமலைக் கோயில்
  8. பேரூர் பட்டீஸ்வரர் கோயில்
  9. மாசாணியம்மன் கோயில்
  10. கொங்கு நாட்டு திருப்பதி
  11. வைதேகி அருவி
  12. தியானலிங்கம்
  13. பொள்ளாச்சி
  14. பரம்பிக்குளம் ஆழியாறு அணைக்கட்டு
  15. திருப்பூர்
  16. சிறுவாணி அருவி
  17. திருப்பூர் குமரன் நினைவாலயம்
  18. டாப்ஸ்லிப்
  19. திருமூர்த்தி கோயில்
  20. முதலைப்பண்ணை
  21. வால்பாறை
  22. வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில்
  23. உடுமலை நாராயணகவி நினைவிடம்
  24. ஜி.டி. நாயுடு தொழில்துறைக் கண்காட்சி
  25. ஆழியாறு அறிவுத் திருக்கோயில்

மூச்சுக்கு மூச்சு வாங்க என்று பரிவு காட்டும் மரியாதை தெரிந்த கொங்கு நாட்டுத் தலைநகரம். சாரல் காற்றின் இதம் தரும் பருவநிலை. நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்த தொழில்மிகு நகரம். தென் இந்தியாவின் மான்செஸ்டர். கொங்குநாடு சோழமன்னன் கரிகால் பெருவளத்தானின் கட்டுப்பாட்டின் கீழ் கி.பி. 2 மற்றும் 3 ஆம் நூற்றாண்டுகளில் வந்தது. அதன்பின் பொறுப்புக்கு வந்த கோவன்புத்தூர் என்னும் சிற்றரசன் காடு மலிந்திருந்த இவ்வூரை திருத்தி அழகிய நகராகச் செம்மைப்படுத்தினான். அவன் பெயரிலேயே கோயம்புத்தூர் என்று மக்கள் அன்போடு அழைத்ததாக ஒரு வரலாறு உண்டு. முதன் முதல் இந்நகரத்திற்கு கி.பி. 1888 இல் தான் ஒரே ஒரு துணி ஆலை வந்தது. இன்று எங்கு நோக்கினும் ஆலைகள். கோயம்புத்தூர் சுருக்கமாக கோவை என்றும் அழைக்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்