சென்னைவாசிகள் கவனத்திற்கு… ஃபார்முலா 4 கார் ரேஸ்., வெளியான முக்கிய அறிவிப்பு.!
சென்னை : ஃபார்முலா 4 கார் ரேஸிங் நடைபெற இருப்பதால் இன்று முதல் செப்டம்பர் 1ஆம் தேதி வரையில் சென்னையில் போக்குவரத்துத்துறை மாற்றம் செய்யப்படுகிறது என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறை அமைச்சகம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்துகிறது. சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கி.மீ சுற்றளவில் இதற்கான பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் பந்தயம் நாளை ஆகஸ்ட் 31 பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கி செப்டம்பர் 1 வரையில் நடைபெறுகிறது.
தெற்காசியவில் முதன் முறையாக 3.5 கிமீ தூரம் என நீண்ட தூர ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா 4 கார் ரேஸ் சர்கியூட் பந்தயம் சென்னையில் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது. இந்த சர்க்யூட் பாதை, தீவுத் திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் மவுண்ட் ரோடு ஆகியவற்றை எல்லைகளாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னை தீவுத்திடலில் நடைபெற இருப்பதால் இன்று முதல் செப்டம்பர் 1 வரையில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து முக்கிய போக்குவரத்து மாற்ற அறிவிப்பை சென்னை போக்குவரத்து கழகம் அமைத்துள்ளது.
தெற்கிலிருந்து வரும் வாகனங்கள் :
- காமராஜர் சாலையில் போர் நினைவிடம் நோக்கி செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை அருகே திருப்பி விடப்பட்டு வாலாஜா சாலை, அண்ணாசாலை, பெரியார் சிலை. சென்ட்ரல் லைட் பாயின்ட் (மத்திய ரயில் நிலையம்). ஈவிஆர் சாலை வழியாக சென்றடையலாம்.
- மவுண்ட் ரோட்டில் வாலாஜா பாயிண்ட் நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலையில் சென்ட்ரல் லைட் பாயிண்ட் நோக்கி திருப்பி விடப்படும்.
- சிவானந்தசாலை மற்றும் கொடி மரச் சாலை முற்றிலும் மூடப்படும்.
வடக்கு பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் :
- காமராஜர் சாலையிலிருந்து சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு எந்த வித போக்குவரத்து மாற்றமும் இல்லை.
- சென்ட்ரல் லைட்டில் இருந்து அண்ணா சிலை நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் செல்லலாம். பல்லவன்சாலை சந்திப்பில் இருந்து பெரியார் சிலை வரை ஒரு வழிப்பாதையானது தற்காலிக இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
- முத்துசாமி சந்திப்பிலிருந்து அண்ணாசாலை மற்றும் கொடி மரச்சாலைகளுக்கு வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அதற்குப் பதிலாக, பல்லவன் சாலை, ஈவிஆர் சாலை, சென்ட்ரல் இரயில்வே நிலையம். பெரியமேடு காந்தி இர்வின் வழியாக சென்று தங்கள் சேர வேண்டிய இலக்கை அடையலாம்.
கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள்:
தீவத்திடலை சுற்றியுள்ள பிரதான சாலைகள், வாலாஜா 10000, அண்ணாசாலை, காமராஜர் சாலை. ஈ.வி.ஆர். சாலை, ஆர்.ஏ. மன்றம். முத்துசாமி பாயின்ட், பாரிஸ் கார்னர் ஆகிய இடங்களில் கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வணிக வாகனங்கள் செல்ல நண்பகல் 12.00 மணி முதல் 22.00 மணி வரை செல்ல நற்காலிக தடைசெய்யப்பட்டுள்ளன.