சென்னை கிரவுன் பிளாசா என்ற நட்சத்திர ஹோட்டல் சுமார் 24 கோடியே 88 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து வரி கட்டவில்லை என கூறி சீல் வைக்க வந்த அதிகாரிகள், நிர்வாகம் சார்பில் கால அவகாசம் கோரப்பட்டதையடுத்து நோட்டீஸ் ஒட்டிவிட்டுச் சென்றுள்ளனர். சென்னை ஆழ்வார்பேட்டை சேமியர்ஸ் சாலையில் உள்ளது கிரவுன் பிளாஸா ஹோட்டல். பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் மத்திய அமைச்சர்களின் நிகழ்ச்சிகளும் இங்கு நடத்தப்படுகின்றன. இந்த ஒட்டலுக்கு பல ஆண்டுகளாக சொத்துவரி கட்டப்படவில்லை என்றும், மாநகராட்சி சார்பில் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் ஓட்டல் நிர்வாகம் சார்பில் எந்தப் பதிலும் இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் 24 கோடியே 88 லட்சம் ரூபாய் சொத்துவரி கட்டவில்லை என கூறப்பட்டுள்ளது. ஹோட்டலுக்கு சீல் வைப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டதையடுத்து, ஓட்டல் நிர்வாகம் சார்பில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி 10 நாள் அவகாசம் கோரப்பட்டது. ஆனால் 2 நாள் அவகாசம் அளித்த அதிகாரிகள், அதற்குள் சொத்துவரியை கட்ட அறிவுறுத்தியதோடு ஓட்டலில் நோட்டீஸ் ஒட்டிவிட்டுச் சென்றன
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…